Google Drive சேவை விதிமுறைகள்

நீங்கள் Google Driveவைப் பயன்படுத்துகிறீர்கள் எனில் நீங்கள் சேவை விதிமுறைகளுக்கு இணங்குகிறீர்கள் என்று பொருள்படும்.

நீங்கள் உங்களது ஒரு கணக்கை பணி, பள்ளி அல்லது வேறு குழுவின் மூலம் பயன்படுத்தினால், Google உடன் உங்கள் நிறுவனத்துக்கு உள்ள ஒப்பந்தத்தின்படி உள்ள விதிமுறைகளுக்கு உட்படுவீர்கள்.

பிற கொள்கைகள்

சேவை விதிமுறைகள் எவ்வாறு என்னைப் பாதிக்கக்கூடும்?

எங்களது சேவை விதிமுறைகளின் படி கூறப்பட்டுள்ளதாவது, "அந்த உள்ளடக்கத்தில் இருக்கும் அறிவுசார் சொத்துரிமைகளின் உரிமையை நீங்கள் வைத்திருக்கிறீர்கள். குறிப்பாகச் சொல்வதென்றால், உங்களுடையது எல்லாம் உங்களுக்குச் சொந்தமானது ஆகும்.”

உங்களுடைய Drive கணக்கில் நீங்கள் பதிவேற்றும், பகிரும் அல்லது சேமித்து வைத்திருக்கும் உரை, தரவு, தகவல் மற்றும் கோப்புகள் உள்ளிட்ட எந்த உள்ளடக்கத்துக்கும் நாங்கள் உரிமை கோர மாட்டோம். எங்களது சேவை விதிமுறைகளில் உள்ளவை என்னவென்றால் நீங்கள் விரும்பும் சேவைகளை உங்களுக்கு வழங்க எங்களுக்கு அவை உதவுகின்றன — ஆகவே நீங்கள் ஓர் ஆவணத்தை வேறு ஒருவருடன் பகிர விரும்பினால் அல்லது வேறு ஒரு சாதனத்தின் மூலம் அந்த ஆவணத்தைத் திறக்க வேண்டும் என்றால் நாங்கள் அதற்கான செயல்பாடுகளை வழங்குவோம்.

  • இயக்ககத்தில் உள்ள உங்கள் கோப்புகளை யார் அணுகலாம் என்பதை நீங்கள் கட்டுப்படுத்தலாம். எங்களது தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளவற்றை தவிர்த்து வேறு யாருடனும் உங்களது கோப்புகள் மற்றும் தரவை நாங்கள் பகிர்ந்து கொள்ள மாட்டோம்.
    • ஒரு தனி ஆவணத்தை பொது ஆவணமாக ஒருபோதும் நாங்கள் மாற்ற மாட்டோம்.
    • ஒரு தனி ஆவணத்தை சந்தைப்படுத்துதல் மற்றும் விளம்பர நோக்கங்களுக்காக நாங்கள் பயன்படுத்த மாட்டோம்.
    • உங்களது தரவை நீங்கள் பாதுகாத்து வைத்திருக்கச் சொல்லும் காலம் வரை நாங்கள் வைத்திருப்போம்.
  • நீங்கள் Google Driveவைப் பயன்படுத்துவதை நிறுத்த விரும்பினால் உங்கள் தரவை நீங்கள் உங்களுடன் எடுத்துச் செல்லலாம்.
true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
1613373921820914199
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
99950
false
false