Google Driveவை எவ்வாறு பயன்படுத்துவது?


               

உங்கள் பிசினஸிற்கு மேம்பட்ட Google Workspace அம்சங்கள் வேண்டுமா?

இன்றே Google Workspaceஸைப் பயன்படுத்திப் பாருங்கள்!

Google Driveவைப் பயன்படுத்தி உங்கள் கோப்புகளைப் பாதுகாப்பாகச் சேமித்து வைக்கலாம் மற்றும் எந்தச் சாதனத்தில் இருந்தும் கோப்புகளைத் திறக்கலாம், திருத்தலாம்.

Google Driveவைப் பயன்படுத்தத் தொடங்குதல்

Driveவில் 15 ஜி.பை. சேமிப்பிடத்தைக் கட்டணம் இல்லாமல் பெறுவீர்கள். Google Driveவில் எவையெல்லாம் அதிக இடத்தைப் பயன்படுத்துகின்றன என்பது குறித்தும் கூடுதல் சேமிப்பிடத்தை எங்கு வாங்குவது என்பது குறித்தும் அறிக.

படி 1: ஆப்ஸைத் திறக்கவும்

உங்கள் Android சாதனத்தில் Google Drive ஆப்ஸை Google Drive ஐகான் கண்டறிந்து திறக்கவும். "எனது Drive" பிரிவில் இருக்கக்கூடியவை:

  • நீங்கள் பதிவேற்றும் அல்லது ஒத்திசைக்கும் ஃபைல்களும் ஃபோல்டர்களும்.
  • நீங்கள் உருவாக்கும் Google Docs, Sheets, Slides மற்றும் Forms

Drive ஆப்ஸை இரண்டு சாளரங்களில் பயன்படுத்துதல்

பெரிய திரை உள்ள Android சாதனத்தில் Drive ஆப்ஸை இரண்டு சாளரங்களில் அருகருகே திறக்கலாம். உதாரணமாக, திரையின் ஒரு பகுதியில் ஃபோல்டர்களைப் பார்க்கும்போது மறு பகுதியில் ஒரு PDF ஃபைலைத் திறக்கலாம்.

உங்கள் சாதனத்தின் தெளிவுத்திறன் 600dpiக்கு அதிகமாக இருந்து Android 12 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பில் இயங்கினால்

  1. Drive ஆப்ஸைத் திறக்கவும்.
  2. Driveவில் உள்ள ஏதேனும் ஒரு ஃபைலைத் தட்டி, 'மூன்று புள்ளி மெனு' ஐகானை மேலும் தட்டவும்.
  3. காட்சிப் பிரிப்புப் பயன்முறையில் திற என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

உங்கள் சாதனம் Android N அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பில் இயங்குகிறது எனில்

  1. Drive ஆப்ஸைத் திறக்கவும்.
  2. வேறொரு ஆப்ஸ் மூலம் திரைப் பிரிப்புப் பயன்முறையில் நுழையவும்.
  3. Driveவில் உள்ள ஏதேனும் ஒரு ஃபைலைத் தட்டி, 'மூன்று புள்ளி மெனு' ஐகானை மேலும் தட்டவும்.
  4. வேறு சாளரத்தில் திற என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
இரண்டு வெவ்வேறு கணக்குகளில் Drive ஆப்ஸை இரண்டு சாளரங்களில் திறத்தல்

உங்கள் சாதனத்தின் தெளிவுத்திறன் 600dpiக்கு அதிகமாக இருந்து Android 12 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பில் இயங்கினால்

  1. Drive ஆப்ஸைத் திறக்கவும்.
  2. ஒரு ஃபைலுக்கு அடுத்துள்ள, மூன்று புள்ளி மெனு ஐகானை மேலும் தட்டவும்.
  3. காட்சிப் பிரிப்புப் பயன்முறையில் திற என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. புதிய சாளரத்தின் மேல் வலதுபுறத்தில் உள்ள உங்கள் சுயவிவரப் படத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. உங்கள் கணக்கை மாற்றவும்.

உங்கள் சாதனம் Android N அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பில் இயங்குகிறது எனில்

  1. Drive ஆப்ஸைத் திறக்கவும்.
  2. வேறொரு ஆப்ஸ் மூலம் திரைப் பிரிப்புப் பயன்முறையில் நுழையவும்.
  3. Driveவில் உள்ள ஏதேனும் ஒரு ஃபைலைத் தட்டி, 'மூன்று புள்ளி மெனு' ஐகானை மேலும் தட்டவும்.
  4. வேறு சாளரத்தில் திற என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. புதிய சாளரத்தின் மேல் வலதுபுறத்தில் உள்ள உங்கள் சுயவிவரப் படத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  6. உங்கள் கணக்கை மாற்றவும்.

படி 2: ஃபைல்களைப் பதிவேற்றவும் அல்லது உருவாக்கவும்

உங்கள் மொபைல் அல்லது டேப்லெட்டில் இருந்து ஃபைல்களைப் பதிவேற்றலாம், Google Driveவில் ஃபைல்களை உருவாக்கலாம்.

படி 3: ஃபைல்களைப் பகிர்ந்து ஒழுங்கமைக்கவும்

உங்கள் ஃபைல்களையும் ஃபோல்டர்களையும் பிறர் அணுக, திருத்த அல்லது அவற்றில் கருத்து தெரிவிக்க அவற்றை நீங்கள் பகிரலாம்.

உங்களுடன் பிறர் பகிர்ந்த ஃபைல்களைப் பார்க்க, "என்னுடன் பகிர்ந்தவை" பிரிவிற்குச் செல்லவும்.

Google Driveவில் இருந்து வெளியேறுதல்

Androidல் Driveவில் இருந்து வெளியேற உங்கள் சாதனத்திலிருந்து உங்கள் Google கணக்கை நீக்கவும்.

பிற பயனர்கள் உங்கள் சாதனத்தை அணுகாமல் தடுக்க, திரைப் பூட்டை அமைப்பது எப்படி அல்லது கெஸ்ட் பயன்முறையைப் பயன்படுத்துவது எப்படி என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

உங்கள் Google கணக்கை நீக்குதல்

  1. அமைப்புகள் ஆப்ஸை அமைப்புகள் ஆப்ஸ் திறக்கவும்.
  2. பயனர்களும் கணக்குகளும் என்பதைத் தட்டவும்.
  3. அகற்ற விரும்பும் கணக்கைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. கணக்கை அகற்று என்பதைத் தட்டவும்.
  5. உறுதிப்படுத்த கணக்கை அகற்று என்பதைத் தட்டவும்.
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
1714777095506072616
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
99950
false
false