Google Driveவை எவ்வாறு பயன்படுத்துவது?

பணி/பள்ளிக்கான Google Driveவில் இருந்து அதிகப் பலன்களைப் பெற விரும்புகிறீர்களா? இலவச Google Workspace உபயோகத்திற்குப் பதிவு செய்யுங்கள்

Google Driveவைப் பயன்படுத்தி உங்கள் கோப்புகளைப் பாதுகாப்பாகச் சேமித்து வைக்கலாம் மற்றும் எந்தச் சாதனத்தில் இருந்தும் கோப்புகளைத் திறக்கலாம், திருத்தலாம்.

Google Driveவைப் பயன்படுத்தத் தொடங்குதல்

உங்கள் Driveவில் 15 ஜி.பை. சேமிப்பகத்தை இலவசமாகப் பெறுகிறீர்கள். Google Driveவில் எது அதிகளவு இடத்தைப் பயன்படுத்துகிறது என்பதையும் கூடுதல் சேமிப்பிடத்தை எங்கு வாங்குவது என்பது குறித்தும் அறிக.

படி 1: drive.google.comமிற்குச் செல்லவும்

உங்கள் கம்ப்யூட்டரில் drive.google.comமிற்குச் செல்லவும். அங்கு நீங்கள் "எனது இயக்ககம்" என்பதைப் பார்க்கலாம், அதில் இருப்பவை:

  • நீங்கள் பதிவேற்றும் அல்லது ஒத்திசைக்கும் கோப்புகளும் கோப்புறைகளும்
  • நீங்கள் உருவாக்கும் Google Docs, Sheets, Slides மற்றும் Forms

உங்கள் Mac அல்லது PCயில் இருந்து எவ்வாறு கோப்புகளைக் காப்புப் பிரதி எடுப்பது, ஒத்திசைப்பது என்பது குறித்து அறிக.

படி 2: கோப்புகளைப் பதிவேற்றுதல் அல்லது உருவாக்குதல்

கம்ப்யூட்டரில் இருந்து கோப்புகளை நீங்கள் பதிவேற்றலாம் அல்லது Google Driveவில் கோப்புகளை உருவாக்கலாம்.

படி 3: கோப்புகளைப் பகிரவும் ஒழுங்கமைக்கவும்

கோப்புகள் அல்லது கோப்புறைகளைப் பிறர் பார்க்கவும், திருத்தவும் அல்லது அவற்றில் கருத்து தெரிவிக்கவும் அவற்றை நீங்கள் பகிரலாம்.

உங்களுடன் பிறர் பகிர்ந்த கோப்புகளைப் பார்க்க "என்னுடன் பகிர்ந்தவை" பிரிவிற்குச் செல்க.

Search
தேடலை அழிக்கும்
தேடலை மூடும்
Google ஆப்ஸ்
முதன்மை மெனு
உதவி மையத்தில் தேடுக
true
99950
false