Google Driveவில் ஃபைல்களையும் ஃபோல்டர்களையும் பதிவேற்றுதல்


               

உங்கள் பிசினஸிற்கு மேம்பட்ட Google Workspace அம்சங்கள் வேண்டுமா?

இன்றே Google Workspaceஸைப் பயன்படுத்திப் பாருங்கள்!

Google Driveவில் ஃபைல்களைப் பதிவேற்றலாம் திறக்கலாம் பகிரலாம் திருத்தலாம். Google Driveவில் ஃபைலை நீங்கள் பதிவேற்றும்போது வேறு ஒருவருக்குச் சொந்தமான ஃபோல்டரில் நீங்கள் பதிவேற்றினாலும் அது உங்கள் Driveவின் சேமிப்பிடத்தையே பயன்படுத்தும்.

கோப்புகளின் வகைகள்

  • ஆவணங்கள்
  • படங்கள்
  • ஆடியோ
  • வீடியோ

ஃபைல்களையும் ஃபோல்டர்களையும் பதிவேற்றுதல்

உங்கள் கம்ப்யூட்டரில் drive.google.com அல்லது டெஸ்க்டாப்பில் இருந்து பதிவேற்றலாம். தனிப்பட்ட அல்லது பகிர்ந்த கோப்புறைகளுள் கோப்புகளைப் பதிவேற்ற முடியும்.

  1. கம்ப்யூட்டரில் drive.google.comமிற்குச் செல்லவும்.
  2. மேல் இடதுபுறத்தில் உள்ள புதிது அதன் பிறகு  ஃபைலைப் பதிவேற்று அல்லது ஃபோல்டரைப் பதிவேற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. பதிவேற்ற விரும்பும் ஃபைல் அல்லது ஃபோல்டரைத் தேர்வுசெய்யவும்.

Google Driveவிற்குள் ஃபைல்களை இழுத்தல்

  1. drive.google.com தளத்திற்குச் செல்லவும்.
  2. கோப்புறையைத் திறக்கவும் அல்லது உருவாக்கவும்.
  3. ஃபைல்களையும் ஃபோல்டர்களையும் பதிவேற்ற, Google Drive ஃபோல்டருக்குள் அவற்றை இழுக்கவும்.

Drive for desktop ஆப்ஸைப் பயன்படுத்துதல்

  1. கம்ப்யூட்டரில் ஆப்ஸை நிறுவவும்.
  2. கம்ப்யூட்டரில் "Google Drive" என்ற ஃபோல்டர் இருக்கும்.
  3. ஃபைல்களையோ ஃபோல்டர்களையோ அந்த ஃபோல்டருக்குள் இழுக்கவும். அவை Driveவில் பதிவேற்றப்பட்டு drive.google.com தளத்தில் காட்டப்படும்.

அச்சிடுவதற்கான காட்சியிலிருந்து சேமித்தல் 

முக்கியம்: Google Driveவில் சேமிப்பதற்கான நீட்டிப்பு நிறுவப்பட்டுள்ளதை உறுதிப்படுத்திக்கொள்ளவும். 

  1. கம்ப்யூட்டரில் Chrome உலாவியைத் திறக்கவும்.
  2. அச்சிட விரும்பும் பக்கம், படம், அல்லது கோப்பினைத் திறக்கவும்.
  3. மேலே உள்ள ஃபைல் அதன் பிறகு அச்சிடு என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. சாளரத்தில் உள்ள Driveவில் சேமி என்பதைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது மேலும் காட்டு அதன் பிறகு Driveவில் சேமி என்பதைக் கிளிக் செய்யவும். 
  5. அச்சிடு என்பதைக் கிளிக் செய்யவும்.

Google ஃபைல் வடிவங்களுக்கு ஆவணங்களை மாற்றுதல்

Microsoft Word ஆவணங்கள் போன்ற ஃபைல்களைப் பதிவேற்ற விரும்பினால் ஓர் அமைப்பை மாற்றியமைப்பதன் மூலம் ஃபைல்களின் வடிவத்தை மாற்றலாம்.

முக்கியம்: கம்ப்யூட்டரில் இருந்து மட்டுமே Google Drive அமைப்புகளை மாற்ற முடியும்.

  1. கம்ப்யூட்டரைப் பயன்படுத்தி drive.google.com/drive/settings என்பதற்குச் செல்லவும்.
  2. "பதிவேற்றங்களின் ஃபைல் வடிவத்தை மாற்று" என்பதற்கு அடுத்துள்ள செக்பாக்ஸைத் தேர்வுசெய்யவும்.

ஒரே பெயரிலான ஃபைல்களைப் பதிவேற்றுதல்

பதிவேற்றப்படும் ஃபைலின் பெயரில் ஏற்கெனவே ஒரு ஃபைல் இருந்தால் Google Drive இந்த ஃபைலை அதன் மீள்திருத்தமாகப் பதிவேற்றும்.

இரண்டு கோப்புகளையும் வைத்திருக்க:

  1. உங்கள் கம்ப்யூட்டரில் drive.google.comமிற்குச் செல்லவும்.
  2. கோப்பைப் பதிவேற்றவும்.
  3. தனி ஃபைலாக வைத்திரு என்பதைக் கிளிக் செய்யவும்.
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
9195989570191264755
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
99950
false
false