Google Driveவில் வீடியோவைச் சேமித்தல் மற்றும் பிளே செய்தல்


               

உங்கள் பிசினஸிற்கு மேம்பட்ட Google Workspace அம்சங்கள் வேண்டுமா?

இன்றே Google Workspaceஸைப் பயன்படுத்திப் பாருங்கள்!

Google Driveவில் இருந்தே வீடியோக்களைச் சேமிக்கலாம் பிளே செய்யலாம்.

வீடியோக்களைப் பதிவேற்றுதல் மற்றும் பிளே செய்தல்

வீடியோக்களைப் பதிவேற்றுதல்
  1. iPhone அல்லது iPadல் Google Drive ஆப்ஸைத் திறக்கவும்.
  2. சேர் சேர் என்பதைத் தட்டவும்.
  3. பதிவேற்று என்பதைத் தட்டவும்.
  4. தேவையான படங்களையும் வீடியோக்களையும் கண்டறிந்து தட்டவும்.
  5. பதிவேற்று என்பதைத் தட்டவும்.
  6. திரையின் கீழ்ப் பகுதியில் நிலைப் பட்டி காட்டப்படும். ஃபைலைப் பார்க்க கண்டறி என்பதைத் தட்டவும்.

கவனத்திற்கு: வேகமாகப் பதிவேற்றுவதற்கு வைஃபை இணைப்பின் மூலம் வீடியோக்களைப் பதிவேற்றவும்.

வீடியோக்களைப் பிளே செய்தல்

பதிவேற்றிய வீடியோக்களைக் கண்டறிய:

  1. iPhone அல்லது iPadல் Google Drive ஆப்ஸைத் திறக்கவும்.
  2. மேல்புறத்தில் உள்ள தேடல் பட்டியைத் தட்டவும்.
  3. பட்டியலில் வீடியோக்கள் என்பதைத் தட்டவும்.
  4. வீடியோவைப் பிளே செய்ய நீங்கள் பார்க்க விரும்பும் வீடியோவைத் தட்டவும்.
உதவிக்குறிப்பு: Driveவில் உள்ள வீடியோக்களைப் பிளே செய்ய மூன்றாம் தரப்புக் குக்கீகளை இயக்க வேண்டும். குக்கீகளை இயக்குவதும் முடக்குவதும் எப்படி என்பதை அறிக.

வரம்புகளும் பிழைகளும்

வீடியோக்களுக்கான வரம்புகள்

  • குறைந்தபட்சம் 5 டெ.பை. சேமிப்பகத்தை வாங்கியிருந்தால் அந்த அளவு வரை வீடியோக்களை நீங்கள் சேமித்து வைக்க முடியும். இல்லையெனில் உங்களிடம் மீதியிருக்கும் சேமிப்பிடத்தைப் பொறுத்து வீடியோக்களைச் சேமித்து வைக்க முடியும்.
  • எந்தத் தெளிவுத்திறனிலும் வீடியோவைப் பதிவேற்றலாம், ஆனால் Driveவில் வீடியோ பிளேபேக்கிற்குக் குறைந்தபட்சம் 4 கி.பை. தேவைப்படும். அதிகபட்ச வீடியோ பிளேபேக் தெளிவுத்திறன் 1920 x 1080 ஆகும்.
  • இணைய இணைப்பின் தரமும் வேகமும் வீடியோவின் தரத்தைப் பாதிக்கக்கூடும்.

வீடியோவுக்கான ஃபைல் வகைகள்

ஆதரிக்கப்படும் வடிவமைப்புகள்

சில வகை வீடியோக்கள் சில சாதனங்களில் பிளே ஆகாமல் போகலாம்.

  • WebM ஃபைல்கள் (Vp8 வீடியோ கோடெக்; Vorbis ஆடியோ கோடெக்)
  • MPEG4, 3GPP மற்றும் MOV ஃபைல்கள் (h264 மற்றும் MPEG4 வீடியோ கோடெக்குகள்; AAC ஆடியோ கோடெக்)
  • AVI (MJPEG வீடியோ கோடெக்; PCM ஆடியோ)
  • MPEGPS (MPEG2 வீடியோ கோடெக்; MP2 ஆடியோ)
  • WMV
  • FLV (Adobe - FLV1 வீடியோ கோடெக், MP3 ஆடியோ)
  • MTS
  • OGG

பிழைச் செய்திகள்

Driveவில் வீடியோவைப் பதிவேற்றினாலோ பார்த்தாலோ, இந்த பிழைச் செய்திகளில் சில காட்டப்படக்கூடும்.

"வீடியோவைப் பிளே செய்ய முடியவில்லை."

வீடியோ சிதைக்கப்பட்டோ செயல்படாத வடிவமைப்பில் பதிவேற்றப்பட்டோ இருக்கக்கூடும். வீடியோவை மீண்டும் பதிவேற்றவும் அல்லது வேறு வடிவமைப்பில் பதிவேற்றவும்.

"வீடியோ இன்னும் செயலாக்கத்தில் உள்ளது. பிறகு முயலவும்."

பிளே செய்ய இந்த வீடியோ தயாராக இல்லை.

ஃபைல் பெரியதாக இருந்தால் உங்கள் வீடியோ தயாராக சிறிது நேரம் ஆகலாம். சிறிது நேரம் கழித்து முயலவும்.

"இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை."

பிளே செய்ய இந்த வீடியோ தயாராக இல்லை. சில நிமிடங்களில் மீண்டும் முயலவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
6025401761455862603
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
99950
false
false