செயல்பாட்டையும் ஃபைல் பதிப்புகளையும் சரிபார்த்தல்

Driveவில் உள்ள ஃபைல்களில் செய்யப்பட்ட மாற்றங்களை அணுகலாம், அந்த மாற்றங்களைச் செய்தவர்கள் யாரென்று தெரிந்துகொள்ளலாம். இவற்றை ஒருவர் செய்யும்போது ஏற்படும் மாற்றங்களை நீங்கள் பார்க்கலாம்:

  • ஃபைலைத் திருத்துவது அல்லது அதில் கருத்து தெரிவிப்பது
  • ஃபைல் அல்லது ஃபோல்டரின் பெயரை மாற்றுவது
  • ஃபைல்/ஃபோல்டரை நகர்த்துவது அல்லது அகற்றுவது
  • ஃபோல்டரில் புதிய ஃபைலைப் பதிவேற்றுவது
  • ஆவணத்தைப் பகிர்வது அல்லது பகிர்வை நீக்குவது

முக்கியம்: Driveவில் சேமிக்கப்பட்டுள்ள .pdf ஃபைல்கள், படங்கள் மற்றும் பிற ஃபைல்களுக்கான 'இதுவரையான பதிப்புகளுடன்' ஒப்பிடும்போது Google Docs, Sheets, Slides ஆகியவற்றுக்கான 'இதுவரையான பதிப்புகள்' வேறுபட்டவையாகும். Google ஃபைல்களில் இதுவரை செய்துள்ள மாற்றங்களை எப்படி அணுகுவது என்று தெரிந்துகொள்ளுங்கள்

முந்தைய செயல்பாட்டை அணுகுதல்

  1. கம்ப்யூட்டரில் drive.google.com தளத்திற்குச் செல்லவும்.
  2. இடதுபுறத்தில் உள்ள My Drive என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. மேல் வலதுபுறத்தில் உள்ள தகவல்கள் தகவல் ஐகானைக் கிளிக் செய்யவும்.
  4. சமீபத்தில் செய்த மாற்றங்களை அணுக, செயல்பாடு என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. குறிப்பிட்ட ஃபைல் அல்லது ஃபோல்டரின் செயல்பாட்டை அணுக, அந்த ஃபைல் அல்லது ஃபோல்டரைக் கிளிக் செய்யவும்.
  6. சமீபத்திய மாற்றங்களை அணுக, வலது பக்கத்தில் கீழ்ப்புறமாக ஸ்க்ரோல் செய்யவும்.

சமீபத்திய பதிப்புகளைச் சேமித்தலும் மீட்டெடுத்தலும்

எப்போதும் வைத்திரு என்பதைக் கிளிக் செய்யாவிட்டால் கடந்தகால ஆவணங்களின் மிகச் சமீபத்திய பதிப்புகள் மட்டும் சேமிக்கப்படும்.

சமீபத்திய பதிப்புகளைப் பதிவிறக்குதல்

Google Driveவில் சேமிக்கப்பட்டுள்ள PDF ஃபைல்கள், படங்கள், பிற ஃபைல்கள் ஆகியவற்றின் முந்தைய நகல்களை நீங்கள் பதிவிறக்கி வைத்திருக்கலாம்.

  1. கம்ப்யூட்டரில் drive.google.com தளத்திற்குச் செல்லவும்.
  2. பதிவிறக்க விரும்பும் ஃபைலைக் கிளிக் செய்யவும்.
  3. மேல் வலதுபுறத்தில் உள்ள மூன்று புள்ளி மெனுவை மேலும் கிளிக் செய்து அதன் பிறகு பதிப்புகளை நிர்வகியுங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. பதிவிறக்க விரும்பும் பதிப்புக்கு அடுத்துள்ள மூன்று புள்ளி மெனுவை மேலும் கிளிக் செய்யவும்.
  5. கம்ப்யூட்டரில் நகலைச் சேமிக்க, பதிவிறக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

புதிய பதிப்பைப் பதிவேற்றுதல்

  1. கம்ப்யூட்டரில் drive.google.com தளத்திற்குச் செல்லவும்.
  2. மாற்ற விரும்பும் ஃபைலைக் கிளிக் செய்யவும்.
  3. மேல் வலதுபுறத்தில் உள்ள மூன்று புள்ளி மெனுவை மேலும் கிளிக் செய்து அதன் பிறகு பதிப்புகளை நிர்வகியுங்கள் அதன் பிறகு புதிய பதிப்பைப் பதிவேற்று என்பதைக் கிளிக் செய்யவும்.

உதவிக்குறிப்பு: வேறொருவருக்குச் சொந்தமான ஃபைலின் புதிய பதிப்பை நீங்கள் பதிவேற்றினால் அதில் உரிமையாளர் பெயர் மாறாமல் இருக்கும்.

முந்தைய பதிப்பை நீக்குதல்

  1. உங்கள் கம்ப்யூட்டரில் drive.google.com தளத்திற்குச் செல்லவும்.
  2. மாற்ற விரும்பும் ஃபைலைக் கிளிக் செய்யவும்.
  3. மேல் வலதுபுறத்தில் உள்ள மூன்று புள்ளி மெனுவை மேலும் கிளிக் செய்து அதன் பிறகு பதிப்புகளை நிர்வகியுங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. நீக்க விரும்பும் பதிப்புக்கு அடுத்துள்ள மூன்று புள்ளி மெனுவை மேலும் கிளிக் செய்து அதன் பிறகு நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

இதுவரையான பதிப்புகள்

Google Driveவில் உள்ள ஃபைல் பதிப்புகள் Google Docs, Sheets, Slides ஆகியவற்றின் இதுவரையான பதிப்புகளில் இருந்து வேறுபட்டிருக்கும். Google ஃபைல்களில் இதுவரை செய்துள்ள மாற்றங்களை அணுகுவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
Google ஆப்ஸ்
முதன்மை மெனு
4867729454194236947
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
99950
false
false