ஃபைல்களையும் ஃபோல்டர்களையும் பார்த்தல் மற்றும் மறுவரிசைப்படுத்துதல்

நீங்கள் தளவமைப்புகளை மாற்றலாம், உங்கள் ஃபைல்களையும் ஃபோல்டர்களையும் எளிதாகக் கண்டறிய அவற்றை வரிசைப்படுத்தலாம்.

எனது Drive பிரிவில் ஃபைல்களை வரிசைப்படுத்த 4 வழிகள் உள்ளன:

உதவிக்குறிப்பு: "முகப்பு", "சமீபத்தியவை" ஆகிய பக்கங்களில் நீங்கள் இருக்கும்போது உங்கள் ஃபைல்களை வரிசைப்படுத்த முடியாது.

Google Driveவில் ஃபைல்களைக் கண்டறிவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

பட்டியல் காட்சிக்கும் கட்டக் காட்சிக்கும் இடையே மாறுதல்

Google Driveவில் ஃபைல்களையும் ஃபோல்டர்களையும் பார்க்க பட்டியல், கட்டம் ஆகிய இரண்டு காட்சிகள் உள்ளன. இயல்பாக, Driveவில் பட்டியல் காட்சியே காட்டப்படும்.

  • கட்டக் காட்சிக்கு மாற்ற, கருவிப்பட்டிக்குச் சென்று கட்டக் காட்சி ஐகானை கிளிக் செய்யவும்.
  • மீண்டும் பட்டியல் காட்சிக்கு மாற்ற, கருவிப்பட்டிக்குச் சென்று பட்டியல் காட்சி ஐகானை மெனு கிளிக் செய்யவும்.

ஃபைல்களையும் ஃபோல்டர்களையும் மறுவரிசைப்படுத்துதல்

உங்கள் ஃபைல்களைப் பட்டியல் வடிவில் பார்க்கிறீர்கள் என்றால்:

  1. கம்ப்யூட்டரில் drive.google.com தளத்திற்குச் செல்லவும்.
  2. பக்கவாட்டு பேனலில் உள்ள எனது Drive என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. வரிசைப்படுத்துவதற்குப் பயன்படுத்த விரும்பும் நெடுவரிசையைக் கிளிக் செய்யவும்.
  4. வரிசையை நேரெதிராக்க, மேல்நோக்கிய அம்புக்குறி ஐகான் Up arrow அல்லது கீழ்நோக்கிய அம்புக்குறி ஐகானை down arrow கிளிக் செய்யவும்.

உங்கள் ஃபைல்களைக் கட்டக் காட்சியில் பார்க்கிறீர்கள் எனில்

  1. கம்ப்யூட்டரில் drive.google.com தளத்திற்குச் செல்லவும்.
  2. பக்கவாட்டு பேனலில் உள்ள எனது Drive என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. மேல் வலதுபுறத்தில், தற்போதைய வரிசையின் தலைப்பைக் கிளிக் செய்யவும். உதாரணம்: "பெயர்" அல்லது "மாற்றியது".
  4. உங்களுக்குத் தேவையான வரிசைப்படுத்தல் வகையின் மீது கிளிக் செய்யவும்.
  5. வரிசையை நேரெதிராக்க, மேல்நோக்கிய அம்புக்குறி ஐகான் Up arrow அல்லது கீழ்நோக்கிய அம்புக்குறி ஐகானை down arrow கிளிக் செய்யவும்.

சமீபத்தில் திருத்திய ஃபைல்ளைக் கண்டறிதல்

மிகச் சமீபத்தில் திருத்தப்பட்ட ஃபைல்களைப் பார்த்தல்.

  1. கம்ப்யூட்டரில் drive.google.com தளத்திற்குச் செல்லவும்.
  2. மேல் வலதுபுறத்திலுள்ள தகவல் தகவல் ஐகானைக் கிளிக் செய்யவும்.
  3. செயல்பாடு என்பதைக் கிளிக் செய்யவும்.

ஃபைல்களையும் ஃபோல்டர்களையும் வரிசைப்படுத்தும் விதத்தை மாற்றுதல்

“எனது Drive", "என்னுடன் பகிர்ந்தவை", "நட்சத்திரமிட்டவை" ஆகிய காட்சிகளில் ஃபைல்களையும் ஃபோல்டர்களையும் ஒன்றாகவோ ஃபோல்டர்களை மேலேயும் ஃபைல்களைக் கீழேயுமோ காட்டுவதற்குத் தேர்ந்தெடுக்கலாம்.

  1. கம்ப்யூட்டரில் Driveவிற்குச் செல்லவும்.
  2. உங்கள் ஃபைல்களின் பட்டியலுக்கு மேலே வலது இறுதியில் உள்ள, மூன்று புள்ளி மெனுவை மேலும் கிளிக் செய்யவும்.
  3. இவற்றில் ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்:
    • ஃபோல்டர்களை மேலே காட்ட, மேலே என்பதைக் கிளிக் செய்யவும்.
    • ஃபைல்களையும் ஃபோல்டர்களையும் கலந்து காட்ட, ஃபைல்களுடன் கலந்து என்பதைக் கிளிக் செய்யவும்.

உதவிக்குறிப்பு: ஃபைல்களையும் ஃபோல்டர்களையும் வரிசைப்படுத்துவதற்கான உங்கள் விருப்பத்தேர்வுகள் சேமிக்கப்படும். மேலே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றிப் புதிதாகத் தேர்ந்தெடுப்பதன் மூலம், வரிசைப்படுத்தும் விருப்பத்தேர்வுகளை மாற்றலாம்.

ஃபைலின் மாதிரிக்காட்சிக் கார்டை முடக்குதல்

Driveவில் ஃபைலின் ஐகான் மேலே கர்சரைக் கொண்டுசெல்லும்போது ஃபைலின் மாதிரிக்காட்சிக் கார்டுகள் காட்டப்படும். ஃபைல்களைத் திறக்கும் முன் அவை எதைப் பற்றியது என்பதைத் தெரிந்துகொள்வதன் மூலம் உங்கள் நேரத்தை மிச்சப்படுத்த இந்தச் சிறுபடங்கள் உதவும்.

ஃபைலின் தகவலும், ஃபைலைக் கடைசியாகத் திருத்தியவர் போன்ற விவரங்களும் ஃபைலின் மாதிரிக்காட்சிக் கார்டுகளில் இருக்கும்.

இந்த அம்சத்தை முடக்க:

  1. கம்ப்யூட்டரில் Google Driveவிற்குச் செல்லவும்.
  2. அமைப்புகள் ஐகானை அமைப்புகள் கிளிக் செய்து அதன் பிறகு அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. பக்கவாட்டு மெனுவில் பொது என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. “ஃபைலின் மாதிரிக்காட்சிக் கார்டு” என்பதற்குச் செல்லவும்.
  5. “ஃபைலின் ஐகான் மேலே கர்சரைக் கொண்டுசெல்லும்போது விவரங்கள் கார்டைக் காட்டு" என்பதற்கு அடுத்துள்ள பெட்டியைத் தேர்வுநீக்கவும்.

 

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
13696673229655530734
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
99950
false
false