கூடுதல் Google சேமிப்பகத்தை வாங்குதல்

Google Drive, Gmail மற்றும் Google Photos முழுவதும் பயன்படுத்த 15 ஜி.பை. இலவச சேமிப்பகத்துடன் உங்கள் Google கணக்குக் கிடைக்கின்றது. Google Driveவில் கூடுதல் சேமிப்பகத்தை வாங்கலாம் அல்லது கூடுதல் பலன்களைப் பெற Google Oneனிற்கு மேம்படுத்தலாம். 

சேமிப்பகச் சந்தாக்கள்

 • எப்போது வேண்டுமானாலும் சேமிப்புத் திட்டத்தை மாதாந்திரம் அல்லது வருடாந்திரக் கட்டணமாக நீங்கள் மாற்ற முடியும்.
 • Google One சந்தாவானது காலாவதியாகாது -- உங்கள் அமைப்புகளை மாற்றாதபட்சத்தில் அது தானாகப் புதுப்பிக்கப்படும்.
 • வேறு பேமெண்ட் அட்டவணைக்கு மாறும்போது இந்த மாற்றங்கள் செயல்பாட்டுக்கு வர 24 மணிநேரம் வரை ஆகலாம். 
 • பட்டியலிடப்பட்ட விலைகளுடன் கூடுதலாக உள்ளூர் வரிகளோ கட்டணங்களோ விதிக்கப்படக்கூடும். Google கூடுதல் கட்டணம் விதிப்பதில்லை.
 • சில நாடுகளில் மட்டுமே Google சேமிப்பகத்தை வாங்க முடியும். சேமிப்பகத்தை வாங்கக்கூடிய நாடுகளைக் கண்டறிக.

உங்கள் Google தயாரிப்புகளுக்குக் கூடுதல் சேமிப்பகத்தைப் பெறலாம்.

Drive திட்டத்திற்கு ஏற்கெனவே பணம் செலுத்தியிருந்தால் எவ்வித கட்டணமும் இல்லாமல் Google Oneனிற்குத் தானாக மேம்படுத்தப்படும். உங்களிடம் ஏற்கெனவே இருக்கும் சேமிப்பகம் Google One மெம்பர்ஷிப்புடன் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து மேலும் அறிக.

Drive திட்டம் இல்லையெனில் கூடுதல் சேமிப்பகம், நிபுணர்களிடமிருந்து உதவி, உறுப்பினர்களுக்கான கூடுதல் பலன்கள் ஆகியவற்றைப் பெற Google One உறுப்பினராகலாம்.

Google சேமிப்பகத்தை மேம்படுத்துதல்

கவனத்திற்கு: உங்கள் சேமிப்பகத்தை மேம்படுத்தும் முன் உங்கள் பேமெண்ட் முறை சரியாக உள்ளதா என்பதை உறுதிசெய்து கொள்ளவும். உங்கள் பேமெண்ட் விவரங்களை எப்படிப் புதுப்பிப்பது என்பதை அறிக.

Google Oneனுடன் அதிகச் சேமிப்பகத்தை வாங்குங்கள்

மேம்பாட்டிற்குப் பிறகு உங்களின் தற்போதைய Drive சேமிப்பகத் திட்டம் Google One மெம்பர்ஷிப்பாக மாற்றப்படும். Google One உறுப்பினர்கள், இன்னும் கூடுதலான சேமிப்பிடத்தைப் பெறுவதுடன் பிரத்தியேகப் பலன்களையும் குடும்பத் திட்டத்தில் பகிரப்படுபவற்றையும் பெறுவார்கள். Google One உறுப்பினராக கூடுதல் சேமிப்பிடம் வேண்டுமெனில்:

 1. Google கணக்கில் உள்நுழைந்துள்ளீர்கள் என்பதை உறுதிசெய்து கொள்ளவும்.
 2. உங்கள் கம்ப்யூட்டரில் Google One இணையதளத்தைப் பார்வையிடவும்.
 3. வேறு சேமிப்புத் திட்டத்தைத் தேர்வுசெய்யவும்.

மேம்பாட்டிற்குப் பிறகு உங்களின் தற்போதைய Drive சேமிப்பகத் திட்டம் Google One மெம்பர்ஷிப்பாக மாற்றப்படும்.

மேலும் அறிந்துகொள்ளுங்கள்

இதன் மூலம் இன்னும் சிறப்பாகக் கூட்டுப்பணியாற்றுங்கள், இணைந்திருங்கள்: Google Workspace Essentials

பணித் திட்டங்களுக்காக மேலும் சிறப்பான கூட்டுப்பணியையும் கூடுதல் சேமிப்பகத்தையும் உங்கள் நிறுவனம் விரும்பினால் நீங்கள் Google Workspace Essentials கணக்கிற்குப் பதிவுசெய்யலாம். பதிவுசெய்ய, உங்கள் வணிக மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தவும்.

Google Workspace Essentials கணக்கின் சிறப்பம்சங்கள்:

 • பாதுகாப்பான, நம்பகமான வீடியோ கான்ஃபிரன்ஸ் வசதி
 • குழுக்கள் தங்களது உள்ளடக்கம் அனைத்தையும் சேமிக்கும் வகையிலான பகிர்ந்த இயக்ககச் சேமிப்பகம்
 • கூட்டுப்பணியாற்ற Docs, Sheets, Slides போன்ற ஆப்ஸ் 
 • பாதுகாப்பு, தனியுரிமை, இணக்கத்தன்மையுடைய கருவிகள்
 • டொமைன் சரிபார்ப்போ தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களின் உதவியோ தேவையில்லை

G Suite Essentialsஸின் ஆப்ஸ், கருவிகள், விலை ஆகியவற்றைப் பற்றி மேலும் அறிக.

உங்கள் Google Drive சேமிப்பகம் புதுப்பிக்கப்பட்டுள்ளதா எனப் பாருங்கள்

Google Driveவில் சேமிப்பகத்தை வாங்கிய பிறகு:

 • சேமிப்பகம் கிடைக்க 24 மணிநேரம் வரை ஆகலாம். https://www.google.com/settings/storage எனும் இணைப்பில் சேமிப்பகத்தை நீங்கள் பார்க்க முடியும்.
 • உங்கள் சேமிப்பகம் தவறாக இருந்தால் பணம் செலுத்தப்பட்டு விட்டதா என்பதைப் பார்க்க உங்கள் Google கணக்கில் உள்நுழையவும்.

குறைந்த சேமிப்பகத்துடனான திட்டத்திற்கு மாறுதல்

இப்போது உள்ள சேமிப்பிடம் அனைத்தையும் பயன்படுத்துவதில்லை என்றாலோ Google சேமிப்பகத்திற்குக் குறைவாகப் பணம் செலுத்த வேண்டுமேன்றாலோ உங்கள் சேமிப்பகத் திட்டத்தின் சிறிய திட்டத்திற்கு மாற்றவும் அல்லது ரத்துசெய்யவும்.

தேடல்
தேடலை அழிக்கும்
தேடலை மூடும்
Google ஆப்ஸ்
முதன்மை மெனு
உதவி மையத்தில் தேடுக
true
99950
false