பின்வரும் ஆப்ரேட்டிங் சிஸ்டங்களிலும் உலாவிகளிலும் Google Drive, Docs, Sheets, Slides, Forms ஆகியவற்றின் சமீபத்திய பதிப்புகளைப் பயன்படுத்தலாம்.
இணக்கமான உலாவிகள் குறித்துத் தெரிந்துகொள்ளுங்கள்
முக்கியம்: உங்கள் உலாவியில் குக்கீகளையும் JavaScriptடையும் இயக்குவதை உறுதிசெய்துகொள்ளுங்கள்.
இந்த உலாவிகளின் மிகவும் சமீபத்திய இரண்டு பதிப்புகளில் Google Drive, Docs, Sheets, Slides, Forms ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்:
- Chrome
- Firefox
- Windowsஸில் மட்டும்: Microsoft Edge
- Macகில் மட்டும்: Safari
மற்ற உலாவிகளையும் பயன்படுத்தலாம், ஆனால் சில அம்சங்கள் கிடைக்காமல் போகக்கூடும்.
Drive for desktop குறித்துத் தெரிந்துகொள்ளுங்கள்
இந்த ஆப்ரேட்டிங் சிஸ்டங்களில் Drive for desktop ஆப்ஸை நிறுவிப் பயன்படுத்தலாம்,
- Windows (64-bit மட்டும்):
- Windows 10 மற்றும் அதற்குப் பிந்தைய பதிப்புகள்
- Windows Server 2016 மற்றும் அதற்குப் பிந்தைய பதிப்புகள்
உங்கள் Windows பதிப்பைக் கண்டறிவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
- Mac:
- macOS Catalina 10.15.7 மற்றும் அதற்குப் பிந்தைய பதிப்புகள்
- ஜூன் 1, 2024 முதல், macOS 10.15.7 பதிப்பின் பயனர்கள் தங்கள் ஆப்ஸில் புதுப்பிப்புகளைப் பெறமாட்டார்கள். ஜூன் 2025 முதல், ஆப்ஸ் வேலை செய்யாது.
உங்கள் macOS பதிப்பு குறித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
- Linux:
- Drive for desktop கிடைக்கவில்லை. இணையத்தில் Google Driveவைப் பயன்படுத்தலாம்.
Drive for desktop ஆதரிக்கும் ஃபைல் சிஸ்டங்கள் குறித்துத் தெரிந்துகொள்ளுங்கள்
முக்கியம்: Microsoft Office ஃபைல்களை நிகழ்நேரத்தில் திருத்த Office 2010 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்புகளைப் பயன்படுத்தவும்.
இந்த இணைக்கப்பட்ட ஃபைல் சிஸ்டங்களை Drive for desktop ஆப்ஸின் தற்காலிகச் சேமிப்பு ஆதரிக்கிறது:
- macOSஸுக்கான Apple File System (APFS)
- macOSஸுக்கான Hierarchical File System plus (HFS+)
- Windowsஸுக்கான New Technology File System (NTFS)
பின்வரும் நெட்வொர்க் சேமிப்பகங்களை Drive for desktop ஆப்ஸ் ஆதரிப்பதில்லை:
- சர்வர் மெசேஜ் பிளாக் (SMB)
- நெட்வொர்க் ஃபைல் சிஸ்டம் (NFS)
FAT ஃபைல் சிஸ்டமாகத் திறக்கும் விர்ச்சுவல் Driveவை Drive for desktop ஆப்ஸ் உருவாக்குகிறது.
உதவிக்குறிப்பு: FATக்கு ஃபைல் அளவு வரம்பு உள்ளது. FAT32 டிரைவில் அதிகபட்சமாக 4 ஜி.பை. வரையிலான ஃபைல்களை மட்டுமே சேமிக்க முடியும்.
Drive for desktop ஆப்ஸை இவற்றில் பயன்படுத்த முடியாது:
- 32-பிட் Windows சிஸ்டங்கள்
- ARM அடிப்படையிலான Windows சாதனங்கள்
- பீட்டா பதிப்பில் உள்ள ஆப்ரேட்டிங் சிஸ்டங்கள்