Google Drive ஃபைல்களை ஆஃப்லைனில் பயன்படுத்துதல்


               

உங்கள் பிசினஸிற்கு மேம்பட்ட Google Workspace அம்சங்கள் தேவையா?

இன்றே Google Workspaceஸைப் பயன்படுத்திப் பாருங்கள்!

 

 

இணைய இணைப்பு இல்லையென்றாலும் தொடர்ந்து ஃபைல்களைப் பார்க்கலாம் திருத்தலாம். அவற்றில் இவையும் அடங்கும்:

  • Google Docs
  • Google Sheets
  • Google Slides

'இணையத்தில் Drive' மூலம் ஃபைல்களை ஆஃப்லைனில் பயன்படுத்துதல்

ஆஃப்லைன் அணுகலை இயக்குவதற்கு முன் இவற்றைச் செய்யவும்

  • நீங்கள் இணையத்துடன் இணைக்கப்பட வேண்டும்.
  • நீங்கள் Google Chrome அல்லது Microsoft Edge உலாவியைப் பயன்படுத்த வேண்டும்.
  • மறைநிலைப் பயன்முறையில் பயன்படுத்த வேண்டாம்.
  •  Google Docs ஆஃப்லைன் Chrome நீட்டிப்பை நிறுவி இயக்கவும்.
  • ஃபைல்களைச் சேமிக்க உங்கள் சாதனத்தில் போதுமான இடம் இருப்பதை உறுதிசெய்துகொள்ளவும்.
Google Docs, Sheets, Slides ஆகியவற்றை ஆஃப்லைனில் திறத்தல்
  1. Google Chrome அல்லது Microsoft Edge உலாவியைத் திறக்கவும். Chromeமைப் பயன்படுத்தினால் உங்களுக்கு விருப்பமான கணக்கின் மூலம் உள்நுழைந்திருப்பதை உறுதிசெய்துகொள்ளவும்.
  2. drive.google.com/drive/settings என்பதற்குச் செல்லவும்.
  3. "ஆஃப்லைனில் உள்ள போது இந்தச் சாதனத்தில் சமீபத்திய Google Docs, Sheets, Slides ஃபைல்கள் ஆகியவற்றை உருவாக்கலாம், திறக்கலாம் மற்றும் திருத்தலாம்" என்பதற்கு அடுத்துள்ள பெட்டியைத் தேர்வுசெய்யவும்.
Google Docs, Sheets, Slides ஆகியவற்றை ஆஃப்லைன் பயன்பாட்டுக்காகச் சேமித்தல்
  1. கம்ப்யூட்டரில் drive.google.com தளத்திற்குச் செல்லவும்.
  2. ஆஃப்லைனில் சேமிக்க விரும்பும் Google Docs, Sheets அல்லது Slides ஃபைல் மீது வலது கிளிக் செய்யவும்.
  3. ஆஃப்லைனில் கிடைக்கும்படி செய் Ready for offline என்பதைக் கிளிக் செய்யவும்.

பல ஃபைல்களை ஆஃப்லைனில் சேமிக்க, நீங்கள் மற்ற ஃபைல்களைக் கிளிக் செய்யும்போது Shift அல்லது Command (Mac)/Ctrl (Windows) பட்டனை அழுத்தவும்.

ஆஃப்லைன் ஃபைல்களின் மாதிரிக்காட்சியைப் பார்த்தல்
  1. கம்ப்யூட்டரில் drive.google.com தளத்திற்குச் செல்லவும்.
    • முதலில் ஆஃப்லைன் அணுகல் இயக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்துகொள்ளவும்.
  2. மேல் வலதுபுறத்தில் உள்ள 'ஆஃப்லைனில் பயன்படுத்துவதற்குத் தயாராக உள்ளது' ஐகானை Ready for offline கிளிக் செய்யவும்.
  3. ஆஃப்லைன் மாதிரிக்காட்சி என்பதைக் கிளிக் செய்யவும்.
ஆஃப்லைனில் ஃபைல்களைத் திருத்துதல்

நீங்கள் ஒரு ஃபைலை ஆஃப்லைனில் திருத்தினால்:

  • நீங்கள் மீண்டும் ஆன்லைனுக்கு வரும்போது மாற்றங்கள் செயல்படுத்தப்படும்.
  • முந்தைய மாற்றங்களுக்குப் பதிலாகப் புதிய மாற்றங்கள் மாற்றியமைக்கப்படும்.
  • செய்த திருத்தங்களை ஃபைலின் இதுவரையான பதிப்புகளில் பார்க்கலாம்.

உதவிக்குறிப்பு: ஃபைலில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களைக் கண்டறிவது எப்படி எனத் தெரிந்துகொள்ளுங்கள்.

Drive for desktop மூலம் ஃபைல்களை ஆஃப்லைனில் பயன்படுத்துதல்

Drive for desktop என்பது டெஸ்க்டாப்பில் இருந்தே உள்ளடக்கத்தை விரைவாக அணுகுவதற்காக Windows மற்றும் macOSஸில் பயன்படுத்தப்படும் ஓர் ஆப்ஸ் ஆகும். ஃபைல்களையும் ஃபோல்டர்களையும் ஒரு பரிச்சயமான இடத்தில் வேகமாக அணுக இந்த ஆப்ஸ் உதவுகிறது. ஃபைல்களையும் ஃபோல்டர்களையும் மிரர் செய்தால், அவை எப்போதும் ஆஃப்லைனில் கிடைக்கும். ஃபைல்களையும் ஃபோல்டர்களையும் ஸ்ட்ரீம் செய்தால், குறிப்பிட்ட ஆவணங்களை ஆஃப்லைனில் கிடைக்கச் செய்யலாம். ஃபைல்களை ஸ்ட்ரீம் அல்லது மிரர் செய்வது என்றால் என்ன என்பதைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.

முக்கியம்:

Google அல்லாத ஃபைல்களை ஆஃப்லைன் பயன்பாட்டிற்காகச் சேமித்தல்

Google Docs, Sheets, Slides போன்றவை அல்லாத ஸ்ட்ரீம் செய்யப்படும் ஃபைல்களை ஆஃப்லைனில் கிடைக்கச் செய்ய:

Windowsஸில்:
  1. File Explorerருக்குச் செல்லவும்.
  2. Google Drive ஃபோல்டரை திறக்கவும்.
  3. ஃபைல்களையோ ஃபோல்டர்களையோ தேர்வுசெய்யவும்.
    • ஒன்றுக்கும் மேற்பட்டவற்றைத் தேர்ந்தெடுக்க Shift பட்டனை அழுத்தியபடி கிளிக் செய்யவும்.
  4. ஃபைல்களையோ ஃபோல்டர்களையோ வலது கிளிக் செய்யவும்.
  5. ஆஃப்லைன் அணுகல் அதன் பிறகு ஆஃப்லைனில் கிடைக்கும்படி செய் ஆஃப்லைனில் கிடைக்கும் என்பதைக் கிளிக் செய்யவும்.
    • ஒரு ஃபைலை ஆஃப்லைனில் சேமித்தால், அதற்கு அடுத்து ஒரு பச்சை நிறத் தேர்வுக்குறி காட்டப்படும்.

MacOSஸில்:

  1. Finderருக்குச் செல்லவும்.
  2. Google Drive ஃபோல்டரை திறக்கவும்.
  3. ஃபைல்களையோ ஃபோல்டர்களையோ தேர்வுசெய்யவும்.
    • ஒன்றுக்கும் மேற்பட்டவற்றைத் தேர்ந்தெடுக்க Shift பட்டனை அழுத்தியபடி கிளிக் செய்யவும்.
  4. ஃபைல்களையோ ஃபோல்டர்களையோ வலது கிளிக் செய்யவும்.
  5. ஆஃப்லைனில் கிடைக்கும்படி செய் ஆஃப்லைனில் கிடைக்கும் என்பதைக் கிளிக் செய்யவும்.
    • ஒரு ஃபைலை ஆஃப்லைனில் சேமித்தால், அதற்கு அடுத்து ஒரு பச்சை நிறத் தேர்வுக்குறி காட்டப்படும்.

சாதனத்தின் ஹார்டு டிரைவில் பயன்படுத்தப்படும் சேமிப்பகம்

  • ஃபைல்களை ஆஃப்லைனில் கிடைக்கும்படி குறித்தால் சாதனத்தில் உள்ள ஹார்டு டிரைவின் சேமிப்பிடம் பயன்படுத்தப்படும்.
  • ஃபோல்டர்களை ஆஃப்லைனில் கிடைக்கும்படி குறித்தால் ஃபோல்டரில் உள்ள அனைத்து ஃபைல்களும் ஆஃப்லைனில் கிடைக்கும்படி செய்யப்படும், இதனால் இன்னும் கூடுதலாகச் சேமிப்பிடம் பயன்படுத்தப்படும். அந்த ஃபோல்டரில் சேர்க்கப்படும் புதிய ஆவணங்களும் தானாகவே ஆஃப்லைனில் கிடைக்கும்.
  • ஆஃப்லைனில் கிடைப்பதற்குக் குறிக்கப்பட்ட ஃபைல்கள் அனைத்தையும் பார்க்க Drive for desktop மெனுவில் உள்ள "ஆஃப்லைன் ஃபைல்கள்" உரையாடலைத் திறக்கவும்.
ஆஃப்லைனில் ஸ்ட்ரீமிங் மற்றும் மிரரிங் செய்வதற்கு இடையிலான வேறுபாடுகள்

ஸ்ட்ரீமிங் செய்யும்போது:

  • ஃபைல்கள் கிளவுடில் இருக்கும். பின்வரும் சூழல்களில் மட்டும் ஹார்டு டிரைவின் சேமிப்பிடம் பயன்படுத்தப்படும்: ஃபைல்களைத் திறக்கும்போது, அவற்றை ஆஃப்லைனில் கிடைக்கும்படி செய்யும்போது இல்லையெனில் சமீபத்திய மற்றும் அடிக்கடி திறக்கப்படும் ஃபைல்களைப் பயன்படுத்தும்போது.
  • ஆஃப்லைனில் கிடைக்காத ஃபைல்களை நீங்கள் இணையத்துடன் இணைந்திருக்கும்போது மட்டுமே அணுக முடியும்.
  • ஆஃப்லைனில் இருக்கும் ஃபைல்கள் உட்பட அனைத்து ஃபைல்களையும் ஆப்ஸ் இயங்கும்போது மட்டுமே அணுக முடியும்.

மிரரிங் செய்யும்போது:

  • உங்கள் ஃபைல்கள் கிளவுடிலும் கம்ப்யூட்டரிலும் இருக்கும். இதற்கு ஹார்டு டிரைவின் சேமிப்பிடம் பயன்படுத்தப்படும்.
  • உங்கள் ஃபைல்களை இணைய இணைப்பு இல்லாதபோதும் அணுகலாம், Drive for desktop ஆப்ஸ் இயங்காதபோதும் அணுகலாம். அதாவது நீங்கள் அவற்றை எப்போது வேண்டுமானாலும் அணுகலாம்.

ஃபைல்களையும் ஃபோல்டர்களையும் மிரர் செய்தால், அவை தானாகவே ஆஃப்லைனில் கிடைக்கும். ஃபைல்களையும் ஃபோல்டர்களையும் ஸ்ட்ரீம் செய்தால், குறிப்பிட்ட ஆவணங்களை ஆஃப்லைனில் கிடைக்கச் செய்யலாம். ஃபைல்களை ஸ்ட்ரீம் செய்வது அல்லது மிரர் செய்வது குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

 
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
17017010077706446284
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
99950
false
false