ஃபைலைக் கண்டறிதல் அல்லது மீட்டெடுத்தல்

Google Driveவில் ஃபைல்களைக் கண்டறிய முடியவில்லை எனில் இந்த உதவிக்குறிப்புகளைப் பயன்படுத்தி அவற்றை மீட்டெடுக்க முயலலாம். உங்கள் அனுமதியின்றி உங்கள் Google Driveவை எவரேனும் அணுகியிருக்கலாம் என நீங்கள் கருதினால் உங்கள் கணக்கின் பாதுகாப்பை மேம்படுத்தத் தேவையானவற்றைச் செய்யுமாறு பரிந்துரைக்கிறோம்.

நீங்கள் நீக்கிய கோப்புகளை மீட்டெடுத்தல்

Google Drive அல்லது Google Drive டெஸ்க்டாப் ஆப்ஸைப் பயன்படுத்தி சமீபத்தில் ஏதேனும் கோப்பினை நீக்கியிருந்தால் நீங்களே அதை மீட்டெடுக்கலாம்.

நீக்கியவற்றிலிருந்து மீட்டெடுத்தல்

 1. கம்ப்யூட்டரில் drive.google.com/drive/trash தளத்திற்குச் செல்லவும்.
  • உதவிக்குறிப்பு: நீக்கிய தேதியின்படி கோப்புகளை வரிசைப்படுத்துவதன் மூலம் முன்பு/சமீபத்தில் நீக்கிய கோப்புகளைக் கண்டறியலாம்.
 2. மீட்டெடுக்க விரும்பும் கோப்பினை வலது கிளிக் செய்யவும்.
 3. மீட்டெடு என்பதைக் கிளிக் செய்யவும்.
நீங்கள் நீக்கவில்லை எனக் கருதும் கோப்பினைக் கண்டறிதல்

இந்தப் படிகளைப் பின்பற்றுங்கள்

செயல்பாட்டு பேனலில் பார்க்கவும்

 1. கம்ப்யூட்டரில் drive.google.com தளத்திற்குச் செல்லவும்.
 2. இடதுபுறத்தில் உள்ள எனது இயக்ககம் என்பதைக் கிளிக் செய்யவும்.
 3. மேல் வலதுபுறத்தில் தகவல் தகவல் ஐகானைக் கிளிக் செய்யவும்.
 4. கீழே ஸ்க்ரோல் செய்து உங்கள் கோப்பைத் தேடவும்.

மேம்பட்ட தேடலைப் பயன்படுத்துதல்

 1. கம்ப்யூட்டரில் drive.google.com தளத்திற்குச் செல்லவும்.
 2. மேலே தேடல் பட்டியில் உள்ள கீழ்நோக்கிய அம்புக்குறியை கீழ்நோக்கிய அம்புக்குறி கிளிக் செய்யவும்.
 3. உங்கள் கோப்பினைக் கண்டறிய மேம்பட்ட தேடல் விருப்பங்களைப் பயன்படுத்தவும். எடுத்துக்காட்டாக, விரிதாள்களைப் பார்க்க 'வகை' என்பதற்கு அடுத்துள்ள கீழ்நோக்கிய அம்புக்குறியைக் கிளிக் செய்து 'விரிதாள்கள்' என்பதைக் கிளிக் செய்யவும்.

கோப்புகள் கிடைக்காமல் போவதற்கான காரணத்தை அறிந்துகொள்ளுதல்

நீங்கள் கோப்பை உருவாக்கியிருந்தால்

Driveவில் நீங்கள் உருவாக்கிய கோப்பினைக் கண்டறிய முடியவில்லை எனில் அதனுடைய கோப்புறையைக் கோப்பு இழந்திருக்கக்கூடும். இருப்பினும் கோப்பு Driveவிலேயே இருக்கும். ஆனால் அதைக் கண்டறிவது கடினமாக இருக்கும்.

கோப்புகள் அவற்றின் கோப்புறையை எப்படி இழக்கின்றன?

 • கோப்பினை வேறொருவரின் கோப்புறையில் உருவாக்குகிறீர்கள். அவர் அந்தக் கோப்புறையை நீக்குகிறார். கோப்பு நீக்கப்படவில்லை. அது தானாக 'எனது இயக்ககத்திற்கு' நகர்த்தப்படும்.
  முக்கியம்: உங்கள் கோப்புகளை நீங்கள் மட்டுமே நீக்க முடியும்.
 • வேறொருவருடன் கோப்புறையைப் பகிர்கிறீர்கள், அவர் அதில் இருந்து உங்கள் கோப்பினை அகற்றுகிறார். கோப்பு நீக்கப்படாது, அது தானாக 'எனது இயக்ககத்திற்கு' நகர்த்தப்படும்.

ஒழுங்கமைக்கப்படாத கோப்புகளைக் கண்டறிதல்

 1. கம்ப்யூட்டரில் drive.google.com தளத்திற்குச் செல்லவும்.
 2. தேடல் பட்டியில், is:unorganized owner:me என்பதை உள்ளிடவும்
 3. கோப்பினைக் கண்டறிந்ததும் அதை எனது இயக்ககத்தில் உள்ள கோப்புறைக்கு நகர்த்தவும். இதன் மூலம் அடுத்த முறை அதை எளிதாகக் கண்டறியலாம்.

இப்போது தேடு

வேறொருவர் கோப்பை உருவாக்கியிருந்தால்

வேறொருவர் கோப்பை உருவாக்கியிருந்தால் அதை அவர்கள் நீக்கலாம், மறுபெயரிடலாம், மீட்டெடுக்கலாம். கோப்பை உருவாக்கியவரைத் தொடர்புகொண்டு அதை மீட்டெடுக்கவோ உங்களுடன் மீண்டும் பகிரவோ கூறலாம்.

வேறொருவர் உருவாக்கிய கோப்புறையில் இருந்தால்

வேறொருவர் கோப்புறையை நீக்கிவிட்டால் உங்கள் Driveவில் அந்தக் கோப்புறையைப் பார்க்க முடியாது.

நீங்கள் உருவாக்கிய கோப்புகளை நீக்கப்பட்ட கோப்புறைகளில் கண்டறிதல்

நீக்கப்பட்ட கோப்புறைகளில் உள்ள அனைத்துக் கோப்புகளையும் கண்டறிதல்

எதிர்காலத்தில் அந்தக் கோப்பினை எளிதாகக் கண்டறியும் வகையில் "எனது இயக்ககம்" என்பதில் உள்ள கோப்புறைக்கு அதை நகர்த்தவும்.

கோப்புகளைக் கண்டறியும் முறை பற்றிய கூடுதல் தகவல்கள்

மேம்பட்ட தேடலைப் பயன்படுத்துங்கள்

Driveவில் உங்கள் தேடலை வடிகட்ட, பின்வரும் விருப்பங்களுள் ஒன்றின் மூலம் கம்ப்யூட்டரில் தேடல் சொற்றொடரைப் பயன்படுத்தவும்:

தேடல் எடுத்துக்காட்டு
சரியான சொற்றொடர்

"சரியான சொற்றொடரை மேற்கோள் குறிகளுக்குள் வழங்கவும்"

ஒரு வார்த்தையை விலக்குதல்

ஏரிகள் அல்ல நீர்நிலை:

நீர்நிலை -ஏரிகள்

கோப்பு உரிமையாளர்

அப்பா உரிமையாளராக உள்ள கோப்புகள்:

உரிமையாளர்:dad@gmail.com

பிறர் பகிர்ந்த கோப்புகள்

அம்மா உங்களுடன் பகிர்ந்த கோப்புகள்:

from:mom@gmail.com

நீங்கள் பகிர்ந்துள்ள கோப்புகள்

அம்மாவுடன் நீங்கள் பகிர்ந்த கோப்புகள்:

to:mom@gmail.com

நட்சத்திரமிட்டவை

is:starred

நீக்கப்பட்டவை

is:trashed

கோப்பு வகை

விரிதாள் கோப்பு வகை:

type:spreadsheet

கால வரையறை

ஜனவரி 18, 2015க்கு முன்னர்/பின்னர்.

before:2015-01-18

after:2015-01-18

தலைப்பு

title:"தலைப்பை இங்கே வழங்க வேண்டும்"

ஆப்ஸ்

Google Driveவில் திறக்கப்பட்ட கோப்புகள்:

app:"Drive"

மீட்டெடுக்கக்கூடிய கோப்பு வகைகள்

தனிப்பட்ட கணக்குகளுக்கு: நீங்கள் நுகர்வோர் கணக்கின் (உங்கள் பணி, பள்ளி அல்லது பிற குழு தொடர்பான கணக்காக இருக்கக்கூடாது) மூலம் Google Driveவைப் பயன்படுத்துவதோடு பின்வருபவற்றில் ஒன்றும் உண்மையாக இருந்தால் சமீபத்தில் நீக்கப்பட்ட கோப்புகளைக் குறிப்பிட்ட காலத்திற்கு மீட்டெடுக்க உதவுவோம்:

 • நீங்கள் கோப்பினை உருவாக்கியுள்ளீர்கள்.
 • Google Driveவிற்குக் கோப்பை நீங்கள் பதிவேற்றியுள்ளீர்கள்.
 • வேறொருவரிடமிருந்து கோப்பிற்கான உரிமையை நீங்கள் ஏற்றுக்கொண்டுள்ளீர்கள்.

உங்கள் Google கணக்கு நீக்கப்பட்டிருந்தால் கோப்புகளை மீட்டெடுக்க முடியாமல் போகக்கூடும்.

Gmailலில் இருந்து மின்னஞ்சல்களை மீட்டெடுக்க வேண்டுமெனில்

Gmailலில் இருந்து மின்னஞ்சல்களை மீட்டெடுப்பது எப்படி என அறிக.

எங்களைத் தொடர்புகொள்க

 1. Chrome போன்ற உலாவியில், Google Drive உதவி மையத்திற்குச் செல்லவும்.
 2. மேல் இடதுபுறத்தில், மெனு அதன் பிறகு எங்களைத் தொடர்புகொள்க என்பதைக் கிளிக் செய்யவும்.
 3. உங்கள் சிக்கலையும் எங்களை எப்படித் தொடர்புகொள்ள விரும்புகிறீர்கள் என்பதையும் தேர்வுசெய்யவும்.

எங்களைத் தொடர்புகொள்ள, உங்கள் Google கணக்கில் உள்நுழையவும்.

Drive ஆதரவு அனைத்து மொழிகளிலும் கிடைப்பதில்லை. ஆங்கிலத்தில் பேசுவீர்கள் எனில் மொழியை மாற்றி Driveவிற்கான வல்லுநரைத் தொடர்புகொள்ள முடியும்.

 1. கம்ப்யூட்டரில் Google Drive உதவி மையத்திற்குச் செல்லவும்.
 2. பக்கத்தின் கீழே உங்கள் மொழியின் மீது கிளிக் செய்யவும்.
 3. ஆங்கிலம் என்பதைத் தேர்வுசெய்யவும்.
 4. மேல் இடதுபுறத்தில், மெனு அதன் பிறகு எங்களைத் தொடர்புகொள்க என்பதைக் கிளிக் செய்யவும்.
 5. உங்கள் சிக்கலையும் எங்களை எப்படித் தொடர்புகொள்ள விரும்புகிறீர்கள் என்பதையும் தேர்வுசெய்யவும்.

கவனத்திற்கு: இதை முடித்தவுடன் உங்களுக்குப் பிடித்தமான மொழிக்கு மீண்டும் மாற்றிக்கொள்ளலாம்.

தேடல்
தேடலை அழிக்கும்
தேடலை மூடும்
Google ஆப்ஸ்
முதன்மை மெனு
உதவி மையத்தில் தேடுக
true
99950
false