ஃபைலைக் கண்டறிதல் அல்லது மீட்டெடுத்தல்

Google Driveவில் ஃபைல்களைக் கண்டறிய முடியவில்லை எனில் இந்த உதவிக்குறிப்புகளைப் பயன்படுத்தி அவற்றை மீட்டெடுக்க முயலலாம். உங்கள் அனுமதியின்றி உங்கள் Google Driveவை எவரேனும் அணுகியிருக்கலாம் என நீங்கள் கருதினால் உங்கள் கணக்கின் பாதுகாப்பை மேம்படுத்தத் தேவையானவற்றைச் செய்யுமாறு பரிந்துரைக்கிறோம்.

Google Driveவின் 'நீக்கியவை' ஃபோல்டரில் இருந்து ஃபைலை மீட்டெடுத்தல்

  1. drive.google.com தளத்திற்குச் செல்லவும்.
  2. இடதுபுறத்தில் உள்ள நீக்கியவை என்பதைக் கிளிக் செய்யவும்.
    • நீங்கள் நீக்கிய ஃபைல்கள் அனைத்தும் ”நீக்கியவை” ஃபோல்டரில் பட்டியலிடப்பட்டிருக்கும்.
    • "நீக்கியவை" ஃபோல்டரில் ஃபைல்கள் சேர்க்கப்பட்ட தேதியைக் கண்டறிய ”நீக்கிய தேதி” அடிப்படையில் ஃபைல்களை வரிசைப்படுத்தலாம்.
  3. ஃபைலை மீட்டெடுக்க:
    1. ஃபைலின் மீது வலது கிளிக் செய்யவும்.
    2. மீட்டெடு என்பதைக் கிளிக் செய்யவும்.

உதவிக்குறிப்பு: நீக்கப்பட்ட ஃபைல்கள் 30 நாட்களுக்கு ‘நீக்கியவை’ ஃபோல்டரில் சேமிக்கப்பட்டிருக்கும். பிறகு நிரந்தரமாக நீக்கப்படும்.

Google Driveவில் நீக்கியவையில் இருந்து ஃபைல்/ஃபோல்டரை மீட்டெடுப்பதற்கான வழிமுறைகள்.

நிரந்தரமாக நீக்கப்பட்ட ஃபைலை மீட்டெடுத்தல்

நிரந்தரமாக நீக்கப்பட்ட உங்கள் ஃபைல்களை இது போன்ற சூழல்களில் மீட்டெடுக்க வாய்ப்புள்ளது:

  1. கடந்த 25 நாட்களில்தான் ஃபைல்கள் நிரந்தரமாக நீக்கப்பட்டன என்று உங்களுக்கு உறுதியாகத் தெரிந்திருக்க வேண்டும்.
  2. நீங்கள் ஃபைல்களின் உரிமையாளராக இருக்க வேண்டும்.

இவற்றைச் செய்திருந்தால், நீங்கள்தான் உரிமையாளர்:

  • அந்த ஃபைல் அல்லது ஃபோல்டரை Google Drive கணக்கில் நீங்கள் உருவாக்கியிருக்க வேண்டும்.
  • அந்த ஃபைல் அல்லது ஃபோல்டரை Google Driveவில் நீங்கள் பதிவேற்றியிருக்க வேண்டும்.
  • அந்த ஃபைலின் உரிமையை அசல் உரிமையாளரிடம் இருந்து நீங்கள் ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும்.

எங்களைத் தொடர்புகொள்ள, உங்கள் Google கணக்கில் உள்நுழையவும்.

Drive ஆதரவு அனைத்து மொழிகளிலும் கிடைப்பதில்லை. ஆங்கிலத்தில் பேசுவீர்கள் எனில் மொழியை மாற்றி Driveவிற்கான வல்லுநரைத் தொடர்புகொள்ள முடியும்.

  1. கம்ப்யூட்டரில் Google Drive உதவி மையத்திற்குச் செல்லவும்.
  2. பக்கத்தின் கீழே உங்கள் மொழியின் மீது கிளிக் செய்யவும்.
  3. ஆங்கிலம் என்பதைத் தேர்வுசெய்யவும்.
  4. மேல் இடதுபுறத்தில் உள்ள மெனு அதன் பிறகு எங்களைத் தொடர்புகொள்க என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. உங்கள் சிக்கலையும், எங்களை எவ்வாறு தொடர்புகொள்ள விரும்புகிறீர்கள் என்பதையும் தேர்வுசெய்யவும்.

கவனத்திற்கு: இதை முடித்தவுடன் உங்களுக்குப் பிடித்தமான மொழிக்கு மீண்டும் மாற்றிக்கொள்ளலாம்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
12104987158242317805
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
99950
false
false