தவறான பயன்பாட்டிற்கான திட்டக் கொள்கைகளும் அமலாக்கமும்

கீழே உள்ள திட்டக் கொள்கைகள் Drive, Docs, Sheets, Slides, Forms, புதிய Sites ஆகியவற்றிற்குப் பொருந்தும். Google தயாரிப்புகளைப் பயன்படுத்தும் அனைவருக்கும் திருப்திகரமான அனுபவத்தைத் தொடர்ந்து வழங்குவதில் இந்தக் கொள்கைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
இந்தச் சேவைகளை வழங்குவதற்கான எங்கள் திறனைப் பாதிக்கக்கூடிய தவறான பயன்பாடுகளை நாங்கள் தடுக்க வேண்டும். மேலும் இந்த இலக்கை அடைய உதவும் வகையில் கீழே உள்ள கொள்கைகளை அனைவரும் கடைப்பிடிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். இந்தக் கொள்கைகளை மீறும் உள்ளடக்கத்தை நாங்கள் மதிப்பாய்வு செய்து நடவடிக்கை எடுக்க நேரிடலாம். உள்ளடக்கத்திற்கான அணுகலைக் கட்டுப்படுத்துதல், உள்ளடக்கத்தை அகற்றுதல், Google தயாரிப்புகளுக்கான பயனரின் அணுகலைக் கட்டுப்படுத்துதல் அல்லது நிறுத்துதல் ஆகியவை இந்த மதிப்பாய்வில் அடங்கும். இந்தக் கொள்கைகளுக்கு ஏதேனும் கட்டுப்பாடு இருந்தால் தனியாகக் குறிப்பிடப்படாத வரை அவை பொதுவாகப் பயன்படுத்தப்படும். மேலும், மறுபரிசீலனைக் கோரிக்கை ஏற்கப்படும் வரை உள்ளடக்கக் கட்டுப்பாடுகள் தொடரும்.
இந்தக் கொள்கைகளைப் பயன்படுத்தும்போது, கலை, கல்வி, ஆவணமாக்கல் அல்லது அறிவியல் சார்ந்த பரிசீலனைகளின் அடிப்படையிலோ பொதுமக்களுக்குக் குறிப்பிடத்தக்க நன்மைகள் கிடைக்கும்பட்சத்திலோ உள்ளடக்கத்தின் மீது Google நடவடிக்கை எடுக்காமல் விதிவிலக்குகளை அளிக்கக்கூடும்.
சேமிப்பக வரம்புகளை மீறும் கணக்குகளின்மீது Google நடவடிக்கை எடுக்கக்கூடும். உதாரணமாக, நீங்கள் சேமிப்பக வரம்பை மீறினாலோ போதிய சேமிப்பகத்தைப் பெறவில்லை என்றாலோ புதிய பதிவேற்றங்களை நாங்கள் நிராகரிக்கக்கூடும், ஏற்கெனவே உள்ள உள்ளடக்கத்தைச் சுருக்கக்கூடும் அல்லது உள்ளடக்கத்தை நீக்கக்கூடும். சேமிப்பக வரம்புகள் குறித்து மேலும் அறிக.
இந்தக் கொள்கைகள் மாறக்கூடும் என்பதால் அவ்வப்போது சரிபார்த்துக் கொள்ளவும். மேலும் தகவலுக்கு Googleளின் சேவை விதிமுறைகளைப் பார்வையிடவும்.

தவறான பயன்பாடு எனப் புகாரளி

கீழே உள்ள கொள்கைகளை ஒருவர் மீறுவதாக நீங்கள் நினைத்தால் தவறான பயன்பாடு குறித்துப் புகாரளிக்கவும்.

பதிப்புரிமை மீறல் அல்லது பிற சட்டச் சிக்கல்கள் குறித்துப் புகாரளிக்க, இந்தக் கருவியைப் பயன்படுத்தவும், இது பொருந்தக்கூடிய சட்டங்களின் அடிப்படையில் Googleளின் சேவைகளிலிருந்து அகற்ற வேண்டிய தேவை இருப்பதாக நீங்கள் நம்பும் உள்ளடக்கத்தைப் புகாரளிப்பதற்கான முழுச் செயல்முறையையும் காட்டும்.

திட்டக் கொள்கைகள்

கணக்கு அபகரிப்பு
மற்றொரு பயனரின் கணக்கை அவருடைய அனுமதியின்றி அணுகக்கூடாது. கணக்கு அபகரிப்பை நாங்கள் கண்டறிந்தால் எங்களின் சில தயாரிப்புகளுக்கான அணுகலை அகற்றுதல், உங்கள் Google கணக்கை முடக்குதல் போன்ற நடவடிக்கைகளை நாங்கள் எடுக்க நேரிடும்.
கணக்கின் செயலற்ற நிலை
செயலில் இருப்பதற்கு தயாரிப்பைப் பயன்படுத்தவும். குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது தயாரிப்பின் உள்ளடக்கத்தை அணுகுதல் அல்லது தயாரிப்பில் புதிய உள்ளடக்கத்தைச் சேமித்தல் இதில் அடங்கும். செயலில் இல்லாத கணக்குகளைப் பொருத்தவரை தயாரிப்பில் இருந்து உள்ளடக்கத்தை நீக்குவது போன்ற நடவடிக்கையை நாங்கள் எடுக்கக்கூடும். இங்கே மேலும் அறிக.
சிறாரைப் பாலியல் ரீதியாகக் கொடுமைப்படுத்துதல் & பயன்படுத்துதல்

குழந்தைகளைத் தவறாக வழிநடத்தும் அல்லது தவறாகப் பயன்படுத்தும் உள்ளடக்கத்தை உருவாக்கவோ பதிவேற்றவோ பகிரவோ கூடாது. சிறார் பாலியல் கொடுமை சார்ந்த அனைத்து உள்ளடக்கமும் இதில் அடங்கும். குழந்தையைத் தவறாக வழிநடத்தக்கூடிய உள்ளடக்கத்தை Google தயாரிப்பில் கண்டறிந்தால் அதைக் குறித்து புகாரளிக்க “தவறான பயன்பாடு எனப் புகாரளி” என்பதைக் கிளிக் செய்யவும்.  இணையத்தில் வேறு எங்காவது அத்தகைய உள்ளடக்கத்தைப் பார்த்தால் உங்கள் நாட்டிலுள்ள அதற்குரிய ஏஜென்சியை நேரடியாகத் தொடர்புகொள்ளவும்.

பொதுவாக, குழந்தைகளுக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய வகையில் எங்கள் தயாரிப்புகளைப் பயன்படுத்துவதை Google தடைசெய்கிறது. குழந்தைகளிடம் தகாதபடி நடந்துகொள்ளுதல் மட்டுமின்றி இது போன்ற செயல்களும் இதில் அடங்கும்:

  • ‘குழந்தைகளைத் தவறான எண்ணத்துடன் அணுகுதல்’ (எடுத்துக்காட்டு: ஒரு குழந்தையை ஆன்லைன்/ஆஃப்லைனில் பாலியல் ரீதியாகத் தொடர்புகொள்ளும் வகையில் ஆன்லைனில் அவர்களுடன் நட்பாகப் பழகுதல், பாலியல் ரீதியான படங்களை அந்தக் குழந்தையுடன் பரிமாறிக்கொள்ளுதல் போன்றவை);
  • ‘ஒருவரின் பாலியல் ரீதியான படங்களைக் காட்டி, அவரை மிரட்டி பணம் பறித்தல் அல்லது பாலியல் ரீதியாகத் துன்புறுத்துதல்’ (எடுத்துக்காட்டு: குழந்தையின் அந்தரங்கப் படங்களைக் காட்டியோ அவற்றை வைத்திருப்பதாகக் கூறியோ அவரை அச்சுறுத்துதல் அல்லது மிரட்டுதல்); 
  • வயது வராதோரைப் பாலியல் ரீதியாகப் பயன்படுத்துதல் (எடுத்துக்காட்டு: குழந்தைகளைப் பாலியல் ரீதியாகத் தவறாகப் பயன்படுத்துவதைக் காட்டும், ஆதரிக்கும் அல்லது ஊக்குவிக்கும் படங்கள்; அல்லது குழந்தைகளைப் பாலியல் செயல்களில் பயன்படுத்துவதற்கு வழிவகுக்கும் வகையில் சித்தரித்தல்); மற்றும் 
  • குழந்தைக் கடத்தல் (உதாரணமாக, வர்த்தக நோக்கத்துடன் பாலியல் ரீதியாகப் பயன்படுத்த சிறாரை விளம்பரப்படுத்துதல் அல்லது அழைத்தல்).  

 
நாங்கள் அத்தகைய உள்ளடக்கத்தை அகற்றுவதுடன் தகுந்த நடவடிக்கைகளையும் எடுப்போம். நேஷனல் சென்டர் ஃபார் மிஸ்ஸிங் அன்ட் எக்ஸ்ப்ளாய்டெட் சில்ட்ரன் (National Center for Missing & Exploited Children, NCMEC) அமைப்பிடம் புகாரளித்தல், தயாரிப்பின் அம்சங்களுக்கான அணுகலைக் கட்டுப்படுத்துதல், கணக்குகளை முடக்குதல் ஆகியவை இதில் அடங்கக்கூடும். குழந்தை ஆபத்தில் இருப்பதாகவோ சிறார் பாலியல் வன்கொடுமை, தவறாக வழிநடத்துதல், கடத்துதல் போன்றவற்றுக்கு ஆளாகியிருப்பதாகவோ நம்பினால் உடனடியாகக் காவல் துறையைத் தொடர்புகொள்ளுங்கள். காவல் துறையிடம் ஏற்கெனவே புகார் அளித்திருந்தும் கூடுதலாக உதவி தேவைப்பட்டால் இந்த நடத்தை குறித்து Googleளிடம் புகாரளிக்கலாம்.

ஏமாற்றுதல்

எங்கள் கொள்கைகளைத் தவிர்ப்பது, உங்கள் கணக்கிற்கான கட்டுப்பாடுகளை மீறுவது, பிற Google தயாரிப்புகளில் அகற்றப்பட்ட உள்ளடக்கத்தை விநியோகிப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்.

இதற்கான சில உதாரணங்கள் பின்வருமாறு:

  • பல கணக்குகளை உருவாக்குவது/பயன்படுத்துவது, முன்பே தடைசெய்யப்பட்ட ஒரு செயலில் ஈடுபடும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் பிற செயல்முறைகள் போன்றவை.
  • Google Play டெவெலப்பர் கொள்கைகளால் இடைநிறுத்தம் செய்யப்பட்ட ஆப்ஸைப் பொதுவில் பகிர்தல்.
  • YouTube சமூக வழிகாட்டுதல்களுக்கு இணங்காத வீடியோக்களைப் பொதுவில் பகிர்தல்.

ஏமாற்றும் செயல்பாடுகள் பற்றித் தெரியவந்தால், கோப்புகள் பகிர்வதைக் கட்டுப்படுத்துதல், சில தயாரிப்புகளுக்கான அணுகலை அகற்றுதல் அல்லது உங்கள் Google கணக்கை முடக்குதல் உள்ளிட்ட தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

ஆபத்தான, சட்டவிரோத நடவடிக்கைகள்
சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கோ பொதுமக்களுக்கோ விலங்குகளுக்கோ தீவிரமாகவும் நேரடியாகவும் தீங்கு விளைவிக்கக்கூடிய செயல்பாடுகள், பொருட்கள், சேவைகள், தகவல்கள் ஆகியவற்றை ஊக்குவிப்பதற்காகவோ இந்தத் தயாரிப்பைப் பயன்படுத்தக்கூடாது. இந்த உள்ளடக்கத்தைப் பற்றிய கல்வி, ஆவணப்படம், அறிவியல், கலை போன்ற நோக்கங்களுக்கான பொதுவான தகவல்களை நாங்கள் அனுமதிக்கும் அதேநேரத்தில், நேரடியாகத் தீங்குவிளைவிக்கக்கூடிய அல்லது சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடக்கூடிய உள்ளடக்கத்திற்கான வரையறைகளை வகுத்துள்ளோம். சட்டத்திற்குப் புறம்பான செயல்பாடுகளை நாங்கள் கண்டறிந்தால் தகுந்த அதிகாரிகளிடம் புகாரளித்தல், எங்களின் சில தயாரிப்புகளுக்கான அணுகலை அகற்றுதல், உங்கள் Google கணக்கை முடக்குதல் போன்ற நடவடிக்கைகளை எடுப்போம்.
ஏமாற்றக்கூடிய செயல்பாடுகள், மோசடி மற்றும் ஸ்கேம்கள்
நிதி ஆதாயத்திற்காகவோ தனிநபருக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கத்திலோ பயனர்களை ஏமாற்றவோ தவறாக வழிநடத்தவோ குழப்பவோ கூடாது. ஸ்கேம்கள் மற்றும் மோசடிகளுக்கான வழிமுறைகளை வழங்குவது, அதைச் செய்வதற்காக ஆள்சேர்ப்பது, அதற்கு உதவியாக இருப்பது ஆகியவை இவற்றில் அடங்கும். ஏமாற்றக்கூடிய உள்ளடக்கத்தில் போலியான கருத்துகள் மட்டுமல்ல, “விரைவில் பணக்காரர் ஆகும்” திட்டங்கள், முன்பணம் பெறுவது, காதல், குலுக்கல் பரிசுச்சீட்டுகள், முதலீட்டு மோசடிகள் ஆகியவையும் அடங்கும்.
உபத்திரவம், மிரட்டுதல் மற்றும் அச்சுறுத்தல்கள்
பிறருக்கு உபத்திரவம் அளிக்கவோ பிறரை மிரட்டவோ அச்சுறுத்தவோ கூடாது. மேலும் இந்தத் தயாரிப்பைப் பயன்படுத்தி பிறரை இந்தச் செயல்பாடுகளில் ஈடுபடச் செய்வதற்கோ அவற்றைச் செய்யத் தூண்டுவதற்கோ நாங்கள் அனுமதிப்பதில்லை. தீங்கிழைக்கும் வகையில் தவறாகப் பயன்படுத்துவதற்காக ஒருவரைத் தனிமைப்படுத்துதல், தீவிரமான தீங்கிழைப்பதாகப் பிறரை அச்சுறுத்துதல், வேண்டாத வழியில் யாருக்காவது பாலியல் தொந்தரவு அளித்தல், மிரட்டவோ இழிவுப்படுத்தவோ வன்முறை/துன்பத்தை ஏற்படுத்தும் வகையில் சிறுமைப்படுத்தவோ பயன்படுத்தும் நோக்கத்தில் வேறு ஒருவரின் தனிப்பட்ட தகவல்களை வெளியிடுதல் போன்றவையும் இந்தச் செயல்களில் ஈடுபடுவதற்கோ வேறு வழிகளில் ஒருவரை துன்புறுத்துவதற்கோ பிறரைத் தூண்டிவிடுவதும் அடங்கும். ஆன்லைன் உபத்திரவம் பல இடங்களில் சட்டவிரோதமானது என்பதையும் உபத்திரவம் கொடுப்பவரும் அதனால் பாதிக்கப்படுபவரும் ஆன்லைனைத் தாண்டியும் மன உளைச்சலுக்கு உள்ளாக நேரிடும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். தீங்கிழைக்கும் வகையிலான அச்சுறுத்தல்களையோ மற்ற அபாயகரமான சூழ்நிலைகளையோ நாங்கள் கண்டறிந்தால் தகுந்த அதிகாரிகளிடம் புகாரளித்தல், எங்களின் சில தயாரிப்புகளுக்கான அணுகலை அகற்றுதல், உங்கள் Google கணக்கை முடக்குதல் போன்ற நடவடிக்கைகளை எடுக்க நேரிடும்.
வெறுப்பைத் தூண்டும் பேச்சு
வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசக்கூடாது. தனி நபரிடமோ குழுவுக்கு எதிராகவோ, அவர்களின் இனம், பிறப்பு, மதம், இயலாமை, வயது, பிறந்த நாடு, சேவை நிலை, பாலியல் நாட்டம், பாலினம், பாலின அடையாளம், ஒழுங்குமுறைப் பாகுபாடு அல்லது தீண்டாமையுடன் தொடர்புடைய பிற பண்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் வெறுப்பைத் தூண்டுவதை முக்கிய நோக்கமாகக் கொண்டிருக்கும், வன்முறையைத் தூண்டும் அல்லது ஏற்றுக்கொள்ளும் உள்ளடக்கம் வெறுப்பைத் தூண்டும் பேச்சென்று கருதப்படும்.
ஆள்மாறாட்டமும் தவறான பிரதிநிதித்துவமும்

ஒரு நபர்/நிறுவனத்தைப் போல ஆள்மாறாட்டம் செய்யவோ உங்களை நீங்களே தவறாகப் பிரதிநிதித்துவம் செய்துகொள்ளவோ கூடாது. ஏதேனும் நபர்/நிறுவனங்களைப் போல (நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்தாத) ஆள்மாறாட்டம் செய்வதும் ஒரு பயனர்/தளத்தின் அடையாளம், தகுதிகள், உடைமையுரிமை, நோக்கம், தயாரிப்புகள், சேவைகள், வணிகம் ஆகியவை குறித்து தவறாக வழிநடத்தும் தகவல்களை வழங்குவதும் இதில் அடங்கும்.

மேலும் இதில் உள்ளடக்கம் அல்லது கணக்குகள் அவற்றின் உரிமையை தவறாகச் சித்தரித்தல் அல்லது மறைத்தல், அரசியல், சமூகப் பிரச்சினைகள் அல்லது உங்களுடையதல்லாத வேறு ஒரு நாட்டிலுள்ள பயனர்களுக்குப் பொது அக்கறை உள்ள விஷயங்களைப் பற்றிய உள்ளடக்கத்தை வெளியிடும்போது நீங்கள் பிறந்த நாடு அல்லது உங்களைப் பற்றிய பிற உலகியல் விவரங்களைத் தவறாகச் சித்தரித்தல் அல்லது வேண்டுமென்றே மறைத்தல் போன்றவையும் உள்ளடங்கும். பகடியான, நையாண்டியான, அடையாளத்தைத் திரித்துக் கூறுகின்ற பெயர்கள் அல்லது புனைப்பெயர்களைப் பயன்படுத்துவதை அனுமதிக்கிறோம். எனினும் உங்களுடைய உண்மையான அடையாளத்தைப் பற்றி வாடிக்கையாளர்களைத் தவறாக வழிநடத்தச் சாத்தியமுள்ள உள்ளடக்கத்தைத் தவிர்க்கவும்.

மால்வேர் மற்றும் அதே மாதிரியான தீங்கிழைக்கும் உள்ளடக்கம்
மால்வேரையோ நெட்வொர்க்குகள், சேவையகங்கள், இறுதிப் பயனரின் சாதனங்கள், பிற உள்கட்டமைப்பு ஆகியவற்றின் செயல்பாட்டிற்குப் பாதிப்பு/இடையூறை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு உள்ளடக்கத்தையோ பரப்பக்கூடாது. மால்வேர், வைரஸ்கள், அழிவை ஏற்படுத்தும் குறியீடு, பிற தீங்கு விளைவிக்கக்கூடிய/தேவையற்ற மென்பொருள் அல்லது இது போன்ற உள்ளடக்கத்தை நேரடியாக ஹோஸ்டிங் செய்வது, உட்பொதிப்பது, பரப்புவது போன்றவையும் இதில் அடங்கும். வைரஸ்களைப் பரப்புகின்ற, பாப்-அப்களைக் காட்டுகின்ற, பயனரின் அனுமதியில்லாமல் மென்பொருளை நிறுவ முயல்கின்ற அல்லது தீங்குவிளைவிக்கும் குறியீடு மூலம் பயனர்களுக்கு இடையூறு ஏற்படுத்துகின்ற உள்ளடக்கமும் இதில் அடங்கும். கூடுதல் தகவல்களுக்கு பாதுகாப்பு உலாவல் குறித்த கொள்கைகளைப் பார்க்கவும்.
தவறாக வழிநடத்தும் உள்ளடக்கம்

பயனர்களை ஏமாற்றுகிற, தவறாக வழிநடத்துகிற அல்லது குழப்புகிற உள்ளடக்கத்தை விநியோகிக்கக் கூடாது. இதில் அடங்குபவை:

குடிமை மற்றும் ஜனநாயகச் செயல்பாடுகளைப் பற்றித் தவறாக வழிநடத்தும் உள்ளடக்கம்: வெளிப்படையாகவே தவறு எனத் தெரிகின்ற மற்றும் குடிமை/ஜனநாயகச் செயல்பாடுகளை நம்புவதை அல்லது அவற்றில் பங்கேற்பதைக் கணிசமாகக் குறைக்கின்ற உள்ளடக்கம். பொது வாக்களிப்பு நடைமுறைகள், வயது/பிறந்த இடத்தின் அடிப்படையில் போட்டியிடுபவரின் அரசியல் ரீதியிலான தகுதி, தேர்தல் முடிவுகள், அரசின் அதிகாரப்பூர்வப் பதிவேடுகளுக்கு நேர்மாறான கணக்கெடுப்பில் பங்கேற்பது ஆகியவற்றைப் பற்றிய தகவல்கள் இதில் உள்ளடங்கும். ஓர் அரசியல்வாதியோ அரசு அதிகாரியோ இறந்துவிட்டார், விபத்தில் சிக்கிவிட்டார் அல்லது திடீரென மோசமான நோயால் அவதிப்படுகிறார் எனத் தவறான தகவலைத் தெரிவிப்பதும் இதில் உள்ளடங்கும்.

தீங்கு விளைவிக்கும் சதிக் கோட்பாடுகள் தொடர்பாகத் தவறாக வழிநடத்தும் உள்ளடக்கம்: தனிநபர்களாகவோ குழுக்களாகவோ பரவலான தீங்கை ஏற்படுத்தக்கூடிய செயல்களை முறையாகச் செய்கின்றனர் என்ற நம்பிக்கையைப் பரப்புகின்ற அல்லது வழங்குகின்ற உள்ளடக்கம். இந்த உள்ளடக்கம் முறையான ஆதாரங்களுக்கு முரணாக இருப்பதுடன் வன்முறை ஏற்படவோ அதைத் தூண்டவோ வழிவகுக்கும்.

தீங்கு விளைவிக்கும் உடல்நல நடைமுறைகள் தொடர்பாகத் தவறாக வழிநடத்தும் உள்ளடக்கம்: தனிநபர்களுக்கு உடல் அல்லது மனரீதியாகக் கடுமையான தீங்கை விளைவிக்கக்கூடிய அல்லது பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நடைமுறைகளைப் பரப்புவது, அவற்றில் ஈடுபட மற்றவர்களை ஊக்குவிப்பது மட்டுமின்றி தவறாகவும் வழிநடத்துகின்ற, உடல்நலம் அல்லது மருத்துவம் சார்ந்த உள்ளடக்கம்.

உள்நோக்குடன் மாற்றியமைக்கப்பட்ட மீடியா: பயனர்களைத் தவறாக வழிநடத்தும் வகையில் தொழில்நுட்ப ரீதியில் உள்நோக்குடன் மாற்றியமைக்கப்பட்டுள்ள அல்லது ஏமாற்றும் நோக்கத்துடன் மாற்றப்பட்டுள்ள மற்றும் கடுமையான தீங்கை விளைவிக்கும் மோசமான அபாயத்தை ஏற்படுத்தக்கூடிய மீடியா.

 

அனுமதியளிக்கப்படாத அந்தரங்கப் படம் (Non-Consensual Intimate Imagery - NCII)

சம்பந்தப்பட்டவரின் ஒப்புதல் இல்லாமல் அவரின் தனிப்பட்ட நிர்வாணம், வெளிப்படையான பாலியல் அல்லது அந்தரங்கப் படங்கள்/வீடியோக்களைச் சேமிக்கவோ பகிரவோ கூடாது. உங்களின் தனிப்பட்ட நிர்வாணம், வெளிப்படையான பாலியல் அல்லது அந்தரங்கப் படங்கள்/வீடியோக்களை யாராவது அனுப்பினால் அதுகுறித்து எங்களிடம் இங்கே புகாரளிக்கவும்.

தனிப்பட்ட மற்றும் ரகசியத் தகவல்கள்
மற்ற நபர்களின் தனிப்பட்ட தகவல்களையோ ரகசியத் தகவல்களையோ அவர்களின் அனுமதியின்றிச் சேமிக்கவோ பகிரவோ கூடாது. ​அமெரிக்க தேசிய அடையாள எண்கள், வங்கிக் கணக்கு எண்கள், கிரெடிட் கார்டு எண்கள், கையொப்பங்களின் படங்கள், தனிப்பட்ட உடல்நல ஆவணங்கள் போன்ற அதிமுக்கியத் தகவலின் பயன்பாடும் இதில் அடங்கும். பெரும்பாலான சமயங்களில் இந்தத் தகவல்கள் (அரசாங்க இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள தேசிய அடையாள எண்கள் போன்றவை) இணையத்திலோ பொதுப் பதிவுகளிலோ பரவலாகக் கிடைக்கும், வேறு இடங்களில் நாங்கள் பொதுவாக அமலாக்க நடவடிக்கைகளைச் செயல்படுத்த மாட்டோம்.
ஃபிஷிங்
இந்தத் தயாரிப்பை ஃபிஷிங் செய்வதற்குப் பயன்படுத்தக்கூடாது. கடவுச்சொற்கள், நிதி விவரங்கள், தேசிய அடையாள எண்கள் போன்ற பாதுகாக்கப்பட வேண்டிய தனிப்பட்ட தரவைக் கோருதல்/சேகரித்தல் இதில் அடங்கும். 
நெறிமுறைப்படுத்தப்பட்ட பொருட்களும் சேவைகளும்
நெறிமுறைப்படுத்தப்பட்ட பொருட்களையும் சேவைகளையும் விற்கவோ விளம்பரப்படுத்தவோ விற்பதற்கு உதவவோ கூடாது. மதுபானம், சூதாட்டம், மருந்துகள், அங்கீகரிக்கப்படாத மூலப்பொருட்கள், புகையிலை, வெடிப்பொருட்கள், ஆயுதங்கள் அல்லது உடல்நல/மருத்துவச் சாதனங்கள் போன்றவை நெறிமுறைப்படுத்தப்பட்ட பொருட்கள் & சேவைகளில் அடங்கும்.
பாலியல் ரீதியில் வெளிப்படையான உள்ளடக்கம்
நிர்வாணம், பாலியல் நடவடிக்கைகளைக் கொண்ட படம், ஆபாசமான உள்ளடக்கம் போன்ற வெளிப்படையான பாலியல் உள்ளடக்கத்தைப் பகிரக்கூடாது. வணிகரீதியான ஆபாசப் படங்கள் உள்ள தளங்களுக்கு மக்களை அழைத்துச் செல்லுதலும் இதில் அடங்கும். கல்வி, ஆவணப்படம், அறிவியல், கலை போன்ற நோக்கங்களுக்கான நிர்வாண உள்ளடக்கங்களை அனுமதிக்கிறோம்.
ஸ்பேம்
ஸ்பேம் செய்யக்கூடாது. தேவையற்ற விளம்பரம் அல்லது வணிக உள்ளடக்கம், தன்னியக்க நிரல் மூலம் உருவாக்கப்படும் தேவையற்ற உள்ளடக்கம், ஒரே மாதிரியான தேவையற்ற உள்ளடக்கம், அர்த்தமற்ற உள்ளடக்கம், அதிகமான விளம்பரங்களைக் காட்டக்கூடிய உள்ளடக்கம் போன்றவை இதில் அடங்கும்.
சிஸ்டம் குறுக்கீடும் தவறான பயன்பாடும்
இந்தத் தயாரிப்பைத் தவறாகப் பயன்படுத்தவோ Google அல்லது பிற நிறுவனத்தின் நெட்வொர்க்குகள், சாதனங்கள், பிற உள்கட்டமைப்பு ஆகியவற்றின் செயல்பாட்டில் பாதிப்பு, தரங்குறைப்பு, எதிர்மறையான தாக்கம் போன்றவற்றை ஏற்படுத்தவோ கூடாது. தயாரிப்பு அல்லது அதன் சேவைகளின் எந்தவொரு அம்சத்திற்கும் இடையூறு விளைவிப்பது, முடக்குவது, எதிர்மறையாகக் குறுக்கிடுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவதும் இதில் அடங்கும். சிஸ்டம் குறுக்கீடு, தவறான பயன்பாடு ஆகியவற்றை நாங்கள் கண்டறியும்போது எங்கள் தயாரிப்புகளில் சிலவற்றிற்கான அணுகலை அகற்றுதல், உங்கள் Google கணக்கை முடக்குதல் போன்ற நடவடிக்கைகளை எடுப்போம்.
அங்கீகரிக்கப்படாத, வயது வராதோரின் படங்கள்
வயது வராதோரின் படங்களை அவர்களின் பெற்றோர், காப்பாளர் அல்லது சட்டப்பூர்வப் பிரதிநிதியிடமிருந்து வெளிப்படையான ஒப்புதலைப் பெறாமல் சேமிக்கவோ பகிரவோ கூடாது. தேவையான ஒப்புதல் இல்லாமல் யாராவது வயது வராதோரின் படத்தைச் சேமித்தாலோ பகிர்ந்தாலோ அதைப் பற்றி எங்களிடம் இங்கே புகாரளிக்கவும்.
வன்முறையும் கொடூரமும்
நிஜ உலக மனிதர்களையோ விலங்குகளையோ உள்ளடக்கிய அல்லது அதிர்ச்சியூட்டும், குழப்பத்தை ஏற்படுத்தும், தீங்கு உண்டாக்கும் வகையிலான வன்முறையான/கொடூரமான உள்ளடக்கத்தைச் சேமிக்கவோ பகிரவோ கூடாது. வெட்டப்பட்ட உறுப்பு, சிதைந்த சடலங்களின் நெருக்கமான காட்சி போன்ற அதிகமாகக் கிராஃபிக் செய்யப்பட்ட வன்முறைச் செயல்பாடு இதில் அடங்கும். குறிப்பிட்ட அளவிலான ரத்தத்தைக் கொண்ட உள்ளடக்கம் போன்ற கிராஃபிக் உள்ளடக்கமானது கல்வி, ஆவணப்படம், அறிவியல் அல்லது கலை வேலைப்பாட்டுச் சூழலில் அனுமதிக்கப்படலாம், ஆனால் அந்தச் சூழலை மக்கள் புரிந்துகொள்ள உதவுவதற்குப் போதிய தகவலை வழங்குங்கள். சில சந்தர்ப்பங்களில், உள்ளடக்கம் அதீத வன்முறை கொண்டதாகவோ அதிர்ச்சியூட்டும்படியாகவோ இருக்கும்பட்சத்தில் எந்தச் சூழலுக்காகவும் அவற்றை எங்கள் இயங்குதளங்களில் அனுமதிக்க முடியாது. இறுதியாக, வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட பிறரை ஊக்குவிக்கக் கூடாது.
வன்முறையைத் தூண்டும் அமைப்புகளும் இயக்கங்களும்

எந்த நோக்கத்திற்காகவும் இந்தத் தயாரிப்பைப் பயன்படுத்த, வன்முறையைத் தூண்டுவதாக அறியப்பட்ட அரசு சாரா அமைப்புகளுக்கும் இயக்கங்களுக்கும் அனுமதியில்லை. ஆட்சேர்ப்பு, ஆன்லைன்/ஆஃப்லைனில் செயல்பாடுகளை ஒருங்கிணைத்தல், தீங்கு விளைவிக்கக்கூடிய கையேடுகள்/பிற ஆவணங்களைப் பகிர்தல், வன்முறையைத் தூண்டும் அரசு சாரா அமைப்புகளின் கருத்துகளையும் தீவிரவாத நடவடிக்கைகளையும் ஊக்குவித்தல், வன்முறையைத் தூண்டுதல், வன்முறையைத் தூண்டும் அரசு சாரா அமைப்புகளின் தாக்குதல்களைக் கொண்டாடுதல் போன்ற செயல்களில் ஈடுபடும் இதுபோன்ற குழுக்களை ஊக்குவிப்பது அல்லது அதற்கு துணைபோவது மாதிரியான உள்ளடக்கத்தைப் பகிரக்கூடாது. உள்ளடக்கத்தைப் பொறுத்து, பயனருக்கு எதிராக நடவடிக்கையும் எடுக்கப்படலாம். வன்முறையைத் தூண்டும் அரசு சாரா அமைப்புகள் தொடர்பான உள்ளடக்கமானது கல்வி, ஆவணப்படம், அறிவியல் அல்லது கலை சார்ந்த சூழலில் அனுமதிக்கப்படலாம். ஆனால் அந்தச் சூழலை மக்கள் புரிந்துகொள்ள உதவுவதற்குப் போதுமான தகவல்களை வழங்க வேண்டும்.

கூடுதல் கொள்கைகள்

உள்ளடக்கப் பயன்பாடும் சமர்ப்பிப்பும்

டெம்ப்ளேட் கேலரிக்கான கொள்கைகள்

Google Docsஸில் உள்ள கேலரிகள் மூன்றாம் தரப்பு உள்ளடக்கத்தை ("உள்ளடக்கக் கேலரிகள்") கொண்டிருக்கலாம். உள்ளடக்கக் கேலரிகளில் அடங்குபவை (வரம்பற்றவை): டெம்ப்ளேட்டுகள் கேலரியும் Google தனது விருப்பத்தின்படி உங்களுக்காகத் தேர்வுசெய்யும் எந்தவொரு கேலரியும்.
டெம்ப்ளேட்டுகள் போன்று உள்ளடக்கக் கேலரிகளிலுள்ள தகவல்கள் ("கேலரி உள்ளடக்கம்") Google அல்லது மூன்றாம் தரப்பினரால் உருவாக்கப்பட்டதாகும். உங்களுக்கும் கேலரி உள்ளடக்கத்தின் கிரியேட்டர்களுக்கும் இடையே அறிவுசார் உடைமை அல்லது தனியுடைமை உரிமைகள் இருந்தால் அவை கிரியேட்டர்களிடமே இருக்கும்.
கேலரி உள்ளடக்கம்: (a) பரிந்துரையாக மட்டும் செயல்படும்; (b) தொழில்முறை ஆலோசனைக்கோ குறிப்பிட்ட அதிகாரப்பூர்வத் தகவல்/அறிவுறுத்தலுக்கோ மாற்று அல்ல.
கேலரி உள்ளடக்கத்தை உங்கள் நோக்கங்களுக்குப் பயன்படுத்தலாம் என்றோ வைரஸ்கள், பிழைகள் அல்லது பாதிக்கக்கூடிய வேறு எதுவும் இல்லாமல் பாதுகாப்பாக இருக்கும் என்றோ Google உறுதியளிக்காது. கேலரி உள்ளடக்கம் எந்தவித உத்திரவாதமும் இல்லாமல் "உள்ளபடியே" வழங்கப்படுகிறது. கேலரி உள்ளடக்கத்தைப் பயன்படுத்துவதால் ஏற்படும் இடர்களுக்கு நீங்களே முழுப்பொறுப்பு. கேலரி உள்ளடக்கம் தொடர்பாகத் தெளிவான வாரண்டிகள், உத்திரவாதங்கள் மற்றும் நிபந்தனைகளை Google மற்றும் அதன் சப்ளையர்கள் வழங்க மாட்டார்கள். பொருந்தக்கூடிய சட்டத்தின்கீழ் விற்பனைத்தரத்தின் அனுமானிக்கப்பட்ட உத்திரவாதங்கள் மற்றும் நிபந்தனைகள், குறிப்பிட்ட நோக்கத்திற்கான தகுதி, நிபுணத்துவ முயற்சி, தலைப்பு, மீறல் அல்லாதவை போன்றவற்றை Google தவிர்க்கும்.
உள்ளடக்கக் கேலரிகளின் பகுதியாவதற்கு உள்ளடக்கத்தைச் சமர்ப்பிக்கும்படி தேர்வுசெய்தால் Googleளையும் அதன் இணை நிறுவனங்களையும் உங்கள் கேலரிச் சமர்ப்பிப்பை Google Docsஸுக்குள் ஹோஸ்ட் செய்யவும், இணைக்கவும், பிற வழிகளில் இணைத்துக்கொள்ளவும் கேட்டுக்கொள்கிறீர்கள் மற்றும் அங்கீகரிக்கிறீர்கள். Google மற்றும் உலகம் முழுவதும் இருக்கும் அதன் இறுதிப் பயனர்களுக்கு கேலரியில் உரிமையை கீழே கொடுக்கப்பட்டுள்ளது போன்று பயன்படுத்துவதற்கான ராயல்டி இல்லாத, பிரத்தியேகமல்லாத உரிமத்தை வழங்குகிறீர்கள்:
  • கேலரிச் சமர்ப்பிப்பை மீண்டும் உருவாக்குவது;
  • கேலரிச் சமர்ப்பிப்பின் வருவிக்கப்பெற்ற படைப்புகளை உருவாக்குவது மீண்டும் உருவாக்குவது;
  • கேலரிச் சமர்ப்பிப்பின் நகல்களைப் பொதுவில் காட்டுவது மற்றும் வழங்குவது;
  • கேலரிச் சமர்ப்பிப்பின் வருவிக்கப்பெற்ற படைப்புகளின் நகல்களைப் பொதுவில் காட்டுவது மற்றும் வழங்குவது.

Google இறுதிப் பயனர்களுக்கு நீங்கள் வழங்கும் உரிமம் நிரந்தரமானது என்பதை ஏற்கிறீர்கள். மேலும் சந்தேகத்திற்கு இடமில்லாதவாறு நீங்கள் Google Docs மூலம் சமர்ப்பித்த கேலரிச் சமர்ப்பிப்பை விநியோகிப்பதற்கும் Google வழங்கும் சேவைகளுடன் இணைத்து கேலரிச் சமர்ப்பிப்பைப் பயன்படுத்துவதற்கும் Googleளுக்கு உரிமை உள்ளதுடன், நீங்களும் Googleளுக்கு உரிமை வழங்கியுள்ளீர்கள். Google Docs உள்ளடக்கக் கேலரிகள் மூலம் கேலரிச் சமர்ப்பிப்பை விநியோகிப்பதை எந்த நேரத்திலும் நிறுத்துவதற்கான உரிமை உங்களுக்கு உள்ளது; இருப்பினும் இந்தச் சேவை விதிமுறைகளின்படி இதுபோன்ற தேர்வின் மூலம் Google இறுதிப் பயனர்களுக்கு வழங்கிய உரிமங்கள் திரும்பப்பெறப்படாது. Google Docs உள்ளடக்கக் கேலரிகள் மூலம் கேலரிச் சமர்ப்பிப்புகளை விநியோகிப்பதை நிறுத்த இந்தச் சேவையுடன் வழங்கிய அகற்றுவதற்கான செயல்பாடுகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதால் கேலரிச் சமர்ப்பிப்பை அகற்றுவதை சரியான கால அளவில் திறம்படச் செய்ய முடியும்.

(a) Google Docs மூலம் நீங்கள் சமர்ப்பித்த கேலரிச் சமர்ப்பிப்புகள் அனைத்தையும் வழங்குவதற்கான சட்டப்பூர்வ உரிமைகள் உங்களுக்கு உள்ளன அல்லது பெற்றுள்ளீர்கள் என்பதுடன், Google இறுதிப் பயனர்களுக்கு கேலரிச் சமர்ப்பிப்புகள் கிடைக்கும் வரை இந்த உரிமைகளைத் தக்கவைத்திருப்பீர்கள்; மேலும் (b) Google Docs மூலம் நீங்கள் சமர்ப்பித்த கேலரிச் சமர்ப்பிப்புகள் அனைத்தும் கூறப்பட்ட திட்டக் கொள்கைகளுக்கு உட்பட்டிருக்கும் என்பதை ஏற்றுக்கொண்டு உத்திரவாதம் அளிக்கிறீர்கள்.

Google Docs மூலம் நீங்கள் சமர்ப்பிக்கும் எந்த கேலரிச் சமர்ப்பிப்புக்கும் Google உரிமைகோராது. பதிப்புரிமையும் கேலரிச் சமர்ப்பிப்பில் உங்களுக்கு ஏற்கெனவே உள்ள எல்லா அறிவுசார் சொத்துரிமைகள் உட்பட பிற எல்லா உரிமைகளும் உங்களிடமே இருக்கும். அந்த உரிமைகளைப் பாதுகாப்பதும் அமலாக்குவதும் உங்கள் பொறுப்பு என்பதையும் அதை உங்கள் சார்பாக Google செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை என்பதையும் ஏற்கிறீர்கள்.

நீங்கள் சமர்ப்பிக்கும் எந்தவொரு கேலரிச் சமர்ப்பிப்புக்கும் நீங்களே பொறுப்பு என்பதையும் அதற்காக உங்களுக்கோ எந்தவொரு மூன்றாம் தரப்பிற்கோ Google பொறுப்பேற்காது என்பதையும் ஏற்கிறீர்கள். உங்கள் கேலரிச் சமர்ப்பிப்பை அணுகும் Google இறுதிப் பயனர்கள் தொடர்ச்சியாகப் பயன்படுத்துவதற்கோ தவறாகப் பயன்படுத்துவதற்கோ எந்தவிதத்திலும் Google பொறுப்பேற்காது.

Google தனது விருப்புரிமையில் எந்தவொரு அல்லது எல்லாக் கேலரிச் சமர்ப்பிப்புகளையும் அகற்றுவதற்கு முழு அதிகாரம் கொண்டுள்ளது.

Google உங்கள் டெம்ப்ளேட் சமர்ப்பிப்புகளை எப்படிப் பயன்படுத்தலாம்?

உள்ளடக்கக் கேலரிகளின் பகுதியாவதற்கு உள்ளடக்கத்தைச் சமர்ப்பிக்கும்படி தேர்வுசெய்தால் Googleளையும் அதன் இணை நிறுவனங்களையும் உங்கள் கேலரிச் சமர்ப்பிப்பை Google Docsஸுக்குள் ஹோஸ்ட் செய்யவும், இணைக்கவும், பிற வழிகளில் இணைத்துக்கொள்ளவும் கேட்டுக்கொள்கிறீர்கள் மற்றும் அங்கீகரிக்கிறீர்கள். Google மற்றும் உலகம் முழுவதும் இருக்கும் அதன் இறுதிப் பயனர்களுக்கு கேலரியில் உரிமையை கீழே கொடுக்கப்பட்டுள்ளது போன்று பயன்படுத்துவதற்கான ராயல்டி இல்லாத, பிரத்தியேகமல்லாத உரிமத்தை வழங்குகிறீர்கள்:

  • கேலரிச் சமர்ப்பிப்பை மீண்டும் உருவாக்குவது;
  • கேலரிச் சமர்ப்பிப்பின் வருவிக்கப்பெற்ற படைப்புகளை உருவாக்குவது மீண்டும் உருவாக்குவது;
  • கேலரிச் சமர்ப்பிப்பின் நகல்களைப் பொதுவில் காட்டுவது மற்றும் வழங்குவது;
  • கேலரிச் சமர்ப்பிப்பின் வருவிக்கப்பெற்ற படைப்புகளின் நகல்களைப் பொதுவில் காட்டுவது மற்றும் வழங்குவது.

Google இறுதிப் பயனர்களுக்கு நீங்கள் வழங்கும் உரிமம் நிரந்தரமானது என்பதை ஏற்கிறீர்கள். மேலும் சந்தேகத்திற்கு இடமில்லாதவாறு நீங்கள் Google Docs மூலம் சமர்ப்பித்த கேலரிச் சமர்ப்பிப்பை விநியோகிப்பதற்கும் Google வழங்கும் சேவைகளுடன் இணைத்து கேலரிச் சமர்ப்பிப்பைப் பயன்படுத்துவதற்கும் Googleளுக்கு உரிமை உள்ளதுடன், நீங்களும் Googleளுக்கு உரிமை வழங்கியுள்ளீர்கள். Google Docs உள்ளடக்கக் கேலரிகள் மூலம் கேலரிச் சமர்ப்பிப்பை விநியோகிப்பதை எந்த நேரத்திலும் நிறுத்துவதற்கான உரிமை உங்களுக்கு உள்ளது; இருப்பினும் இந்தச் சேவை விதிமுறைகளின்படி இதுபோன்ற தேர்வின் மூலம் Google இறுதிப் பயனர்களுக்கு வழங்கிய உரிமங்கள் திரும்பப்பெறப்படாது. Google Docs உள்ளடக்கக் கேலரிகள் மூலம் கேலரிச் சமர்ப்பிப்புகளை விநியோகிப்பதை நிறுத்த இந்தச் சேவையுடன் வழங்கிய அகற்றுவதற்கான செயல்பாடுகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதால் கேலரிச் சமர்ப்பிப்பை அகற்றுவதை சரியான கால அளவில் திறம்படச் செய்ய முடியும்.

(a) Google Docs மூலம் நீங்கள் சமர்ப்பித்த கேலரிச் சமர்ப்பிப்புகள் அனைத்தையும் வழங்குவதற்கான சட்டப்பூர்வ உரிமைகள் உங்களுக்கு உள்ளன அல்லது பெற்றுள்ளீர்கள் என்பதுடன், Google இறுதிப் பயனர்களுக்கு கேலரிச் சமர்ப்பிப்புகள் கிடைக்கும் வரை இந்த உரிமைகளைத் தக்கவைத்திருப்பீர்கள்; மேலும் (b) Google Docs மூலம் நீங்கள் சமர்ப்பித்த கேலரிச் சமர்ப்பிப்புகள் அனைத்தும் கூறப்பட்ட திட்டக் கொள்கைகளுக்கு உட்பட்டிருக்கும் என்பதை ஏற்றுக்கொண்டு உத்திரவாதம் அளிக்கிறீர்கள்.

Google Docs மூலம் நீங்கள் சமர்ப்பிக்கும் எந்த கேலரிச் சமர்ப்பிப்புக்கும் Google உரிமைகோராது. பதிப்புரிமையும் கேலரிச் சமர்ப்பிப்பில் உங்களுக்கு ஏற்கெனவே உள்ள எல்லா அறிவுசார் சொத்துரிமைகள் உட்பட பிற எல்லா உரிமைகளும் உங்களிடமே இருக்கும். அந்த உரிமைகளைப் பாதுகாப்பதும் அமலாக்குவதும் உங்கள் பொறுப்பு என்பதையும் அதை உங்கள் சார்பாக Google செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை என்பதையும் ஏற்கிறீர்கள்.

நீங்கள் சமர்ப்பிக்கும் எந்தவொரு கேலரிச் சமர்ப்பிப்புக்கும் நீங்களே பொறுப்பு என்பதையும் அதற்காக உங்களுக்கோ எந்தவொரு மூன்றாம் தரப்பிற்கோ Google பொறுப்பேற்காது என்பதையும் ஏற்கிறீர்கள். உங்கள் கேலரிச் சமர்ப்பிப்பை அணுகும் Google இறுதிப் பயனர்கள் தொடர்ச்சியாகப் பயன்படுத்துவதற்கோ தவறாகப் பயன்படுத்துவதற்கோ எந்தவிதத்திலும் Google பொறுப்பேற்காது.

Google தனது விருப்புரிமையில் எந்தவொரு அல்லது எல்லாக் கேலரிச் சமர்ப்பிப்புகளையும் அகற்றுவதற்கு முழு அதிகாரம் கொண்டுள்ளது.

Google சேவை விதிமுறைகள் முழுவதையும் படிக்கவும்.

பதிப்புரிமை மீறல்
பதிப்புரிமைச் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டுச் செயல்படவும். பதிப்புரிமை பெற்ற உள்ளடக்கத்தை அனுமதி பெறாமல் பகிரவோ பதிப்புரிமை பெற்ற உள்ளடக்கத்தின் அங்கீகரிக்கப்படாத பதிவிறக்கங்களுக்கு வழிவகுக்கும் தளங்களுக்கான இணைப்புகளை உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு வழங்கவோ வேண்டாம். கூறப்படும் பதிப்புரிமை மீறல் குறித்த தெளிவான அறிவிப்புகளுக்குப் பதிலளிப்பது எங்கள் கொள்கையாகும். பதிப்புரிமை உட்பட அறிவுசார் சொத்துரிமைகளை மீண்டும் மீண்டும் மீறினால் கணக்கு முடிக்கப்படும். Googleளின் பதிப்புரிமைக் கொள்கைகள் மீறப்படுவதை நீங்கள் பார்த்தால் பதிப்புரிமை மீறல் குறித்துப் புகாரளிக்கவும்.
உள்ளடக்க விநியோகம் 

வீடியோ உள்ளடக்கத்தைச் சேமிக்கவும் பகிரவும் ஸ்ட்ரீம் செய்யவும் Google Drive அனுமதிக்கும், ஆனால் உள்ளடக்கத்தை விநியோகிப்பதற்கான நெட்வொர்க்குக்கு மாற்றாக இதைப் பயன்படுத்தக் கூடாது. பெரிய அளவில் பொதுவில் ஸ்ட்ரீம் செய்ய YouTube ஆப்ஸ் பொருத்தமானதாகும். Google Driveவில் பெரிய அளவில் பொதுவில் ஸ்ட்ரீம் செய்தால் அதன் பயன்பாடு வரம்பிடப்படும். மீண்டும் மீண்டும் மேற்கொள்ளப்படும் மீறல்களால் உங்கள் கணக்கு நீக்கப்படுவது, Google Drive அணுகல் முடக்கப்படுவது போன்ற கூடுதல் நடவடிக்கை எடுக்கப்படக்கூடும்.

உங்களின் வசதிக்காக எங்கள் கொள்கைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இந்தக் கொள்கை உள்ள மொழிப் பதிப்பிற்கும் கொள்கையின் ஆங்கிலப் பதிப்பிற்கும் இடையே வேறுபாடு இருந்தால் கொள்கையின் ஆங்கிலப் பதிப்பிற்கே முன்னுரிமை வழங்கப்படும். 
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
17136498202377896410
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false