தனிப்பட்ட அந்தரங்கமான உள்ளடக்கத்தையோ பாலியல் உள்ளடக்கத்தையோ அகற்றும்படி கோரிக்கை விடுத்தல்

ஒப்புதல் இல்லாமல் உங்களின் தனிப்பட்ட, நிர்வாணமான, பாலியல் ரீதியில் வெளிப்படையான அல்லது அந்தரங்கமான படங்களையும் வீடியோக்களையும் பகிர்வது மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடும் என்பதைப் புரிந்துகொள்கிறோம். இரகசியமாக இருக்க வேண்டுமென்று அதிகம் எதிர்பார்க்கப்படுகின்ற இடத்தை (படுக்கையறை, குளியலறை போன்றவை) காட்டுவது மற்றும் சூழலை (ஆடை அணிந்து போஸ் கொடுப்பது) காட்டுவது அந்தரங்க உள்ளடக்கத்தில் அடங்கும்.

பின்வரும் உள்ளடக்கங்களை அகற்ற உங்களுக்கோ உங்கள் சார்பாகச் செயல்படுவதற்கு நீங்கள் அனுமதித்துள்ள வேறொருவருக்கோ Google உதவக்கூடும்:

  • அனுமதியில்லாமல் வெளியிடப்படும் நிர்வாணமான, அந்தரங்கமான, வெளிப்படையான பாலியல் உள்ளடக்கம் (உதாரணமாக, உங்கள் படங்கள் அல்லது வீடியோக்கள்); அல்லது
  • போலியாகவோ தவறாகவோ உங்களை நிர்வாணமாக அல்லது வெளிப்படையான பாலியல் ரீதியாகச் சித்தரிக்கும் உள்ளடக்கம்; அல்லது
  • நிர்வாணமான அல்லது வெளிப்படையான பாலியல் படங்கள் அல்லது அது காட்டப்படும் சூழலில் உங்களையோ உங்கள் பெயரையோ தவறாகத் தொடர்புபடுத்தும் உள்ளடக்கம்

பின்வருபவை உட்பட, பிற Google தயாரிப்புகளிலும் இந்தப் படங்கள் மற்றும் வீடியோக்கள் பகிரப்படுவதைக் கட்டுப்படுத்த நீங்கள் கோரிக்கை விடுப்பதற்கு இந்தப் படிவம் உதவும்.

  • Blogger
  • Drive
  • Groups
  • Photos
  • Sites
  • Classroom

 அகற்றுதல் கோரிக்கையைத் தொடங்குகள்

நீங்கள் கோரிக்கையைச் சமர்ப்பித்ததும்:

  1. கோரிக்கையைப் பெற்றுக்கொண்டோம் என்பதை உறுதிப்படுத்தும் தானியங்கு உறுதிப்படுத்தல் மின்னஞ்சலைப் பெறுவீர்கள்
  2. உங்கள் கோரிக்கையை மதிப்பாய்வு செய்வோம்.
  3. தேவைப்பட்டால், கூடுதல் தகவல்களைச் சேகரிப்போம். சில சமயங்களில் உங்களிடம் கூடுதல் தகவல்களை நாங்கள் கேட்கக்கூடும். கோரிக்கையை மதிப்பீடு செய்வதற்குப் போதிய தகவல்கள் இல்லையென்றால் (URLகள் இல்லாதிருப்பது போன்றவை) அதற்கென்று குறிப்பிட்ட வழிமுறைகளைப் பகிர்ந்து உங்கள் கோரிக்கையை மீண்டும் சமர்ப்பிக்கும்படி கேட்போம்.
  4. நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதுகுறித்த அறிவிப்பைப் பெறுவீர்கள். அகற்றுவதற்கான நிபந்தனைகளின்படி உங்கள் கோரிக்கை இல்லையென்றால் அதற்கான சிறு விளக்கத்தையும் வழங்குவோம். உங்கள் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட பின்னர் புகார் தொடர்பான கூடுதல் ஆவணங்கள் கிடைக்கும்பட்சத்தில் கோரிக்கையை மீண்டும் சமர்ப்பிக்கலாம்.
  5. படம் அல்லது வீடியோ பகிரப்படுவதைக் கட்டுப்படுத்துவதற்கான கோரிக்கை வந்துள்ளதைச் சம்பந்தப்பட்ட நபருக்கும் தெரிவிப்போம்.

பொதுவான கேள்விகள்

மதிப்பாய்விற்கு எந்தெந்த URLகளைச் சமர்ப்பிக்க வேண்டும்?

Google தயாரிப்புகளில் இருந்து அகற்றுவதற்கு நாங்கள் மதிப்பாய்வு செய்ய வேண்டிய அனைத்து பக்க URLகளையும் நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும். பக்கத்தில் அதிகளவு படங்கள் இருப்பது குறித்து உங்களுக்கு மாற்றுக் கருத்து இருந்தால் நீங்கள் ஸ்கிரீன்ஷாட்டை வழங்கலாம் அல்லது நீங்கள் படத்தைச் சமர்ப்பித்தால் பக்க URL மட்டுமின்றி படத்தின் URLலையும் வழங்கலாம். (URLலைக் கண்டறிவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்)

ஒன்றுக்கு மேற்பட்ட URLலை மதிப்பாய்விற்குச் சமர்ப்பிப்பது எப்படி?

படிவத்தில் உள்ள URL புலத்தில் ஒவ்வொரு வரியிலும் ஒரு URLலைச் சேர்க்கவும். 1,000 URLகள் வரை சமர்ப்பிக்கலாம்.

எனது படத்திற்கு ஏன் கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை?

சில நேரங்களில், படம் பகிரப்படுவதை எங்களால் கட்டுப்படுத்த முடியாது. உதாரணமாக, செய்தி அறிவிப்புகள், ஆவணப்படம், வலுவான பொது நலனைக் கொண்ட படங்கள், அடையாளம் காண முடியாத வகையில் நபர்கள் இருக்கும் படங்கள் மற்றும் படங்களாக எடுத்துக்கொள்ள முடியாதவை பகிரப்படுவதை எங்களால் கட்டுப்படுத்த முடியாமல் போகலாம். அத்துடன் சம்பந்தப்பட்ட படங்களை எங்களால் கண்டறிய முடியவில்லை என்றாலும் கட்டுப்படுத்த முடியாமல் போகலாம். உங்களின் படத்திற்கு ஏன் கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை என்பதற்கான சிறு விளக்கத்தை உங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்புவோம்.

இன்னமும் மாற்றுக் கருத்து இருந்தால் நான் வேறு என்னவெல்லாம் செய்யலாம்?

உங்கள் உரிமைகளைத் தெரிந்துகொள்வதும் தேவைப்படும்போது உங்களுக்கான உதவியைப் பெறுவதும் முக்கியம். இது தொடர்பான சில உதவித் தகவல்களை எங்கள் உதவி மையத்தில் பார்க்கலாம்.
true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
3213824900206158494
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
99950
false
false