Google Driveவில் ஃபைல்களுக்கு லேபிள்களைப் பயன்படுத்துதல்

பணி அல்லது பள்ளிக் கணக்கின் மூலம் Driveவைப் பயன்படுத்தினால், ஃபைல்களை ஒருங்கிணைக்க லேபிள்களை உங்கள் நிறுவனம் அமைக்கக்கூடும்.  

உதவிக்குறிப்புகள்: 

  • ஒவ்வொரு ஃபைலுக்கும் அதிகபட்சம் 5 லேபிள்களைப் பயன்படுத்தலாம்.
  • நிர்வாகிகளால் மட்டுமே லேபிள்களை உருவாக்க முடியும்.
  • ஃபைலுக்கு லேபிள்களைப் பயன்படுத்த, அவற்றை அணுகுவதற்கும் ஃபைலைத் திருத்துவதற்கும் தேவையான அனுமதியை நிர்வாகி உங்களுக்கு வழங்கியிருக்க வேண்டும்.
  • ஃபைலுக்குப் பயன்படுத்தப்படும் லேபிள்களைக் கண்டறியவோ லேபிள்களின் அடிப்படையில் ஃபைல்களைத் தேடவோ உங்களுக்கு இவை தேவை: 
    • ஃபைலுக்கான அணுகல்
    • லேபிளைப் பார்ப்பதற்கான அனுமதி

திறக்காத ஃபைலுக்கு லேபிள்களைப் பயன்படுத்துதல்

  1. கம்ப்யூட்டரில் Driveவிற்குச் செல்லவும்.
  2. ஃபைலை வலது கிளிக் செய்து அதன் பிறகு லேபிள்கள்  அதன் பிறகு லேபிள்களைப் பயன்படுத்து  என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. பயன்படுத்த விரும்பும் லேபிளைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. லேபிளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட புலங்கள் இருந்தால், அவற்றிலிருந்து தேர்வுசெய்யவும் அல்லது மதிப்புகளை உள்ளிடவும்.

உதவிக்குறிப்புகள்:

  • ஃபைலில் இருந்து லேபிளை அகற்ற வேண்டும் என்றால் அகற்ற விரும்பும் லேபிளைக் கண்டறிந்து, ‘அகற்று’ ஐகானை அகற்று கிளிக் செய்யவும்.
  • லேபிள்கள் பிரிவு உங்களுக்குக் காட்டப்படவில்லை எனில், உங்கள் நிர்வாகி லேபிள்களை அமைக்காமலோ அவற்றுக்கான அணுகலை உங்களுக்கு வழங்காமலோ இருக்கலாம். உங்கள் நிர்வாகியைத் தொடர்புகொள்ளவும்.

லேபிள்களை மொத்தமாகப் பயன்படுத்துதல் 

  1. கம்ப்யூட்டரில் Driveவிற்குச் செல்லவும்.
  2. லேபிளிட விரும்பும் ஃபைல்களைத் தேர்வுசெய்யவும் (அதிகபட்சம் 100 ஃபைல்கள் வரை).
  3. மவுஸை வலது கிளிக் செய்து, லேபிள்கள் அதன் பிறகு லேபிளைப் பயன்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. ஃபைலுக்குப் பயன்படுத்த ஒரு லேபிளைத் தேர்ந்தெடுத்து அதன் புலங்களின் மதிப்புகளில் ஒன்றைத் தேர்வுசெய்யவும்.

Docs, Sheets, Slides போன்றவற்றில் உள்ள ஃபைல்களுக்கு லேபிள்களைப் பயன்படுத்துதல் 

  1. கம்ப்யூட்டரில் Docs, Sheets அல்லது Slidesஸிற்குச் செல்லவும். 
  2. ஃபைல் அதன் பிறகு லேபிள்கள்  என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. பக்கவாட்டு பேனலில் உள்ள லேபிள்களைச் சரிபார்த்து, புதியவற்றைப் பயன்படுத்தவும். 
  4. ஃபைலில் இருந்து லேபிளை அகற்ற லேபிளைத் தேர்ந்தெடுத்து, அகற்று அகற்று என்பதைக் கிளிக் செய்யவும்.

Drive மாதிரிக்காட்சியில் Google அல்லாத ஃபைல்களுக்கு லேபிள்களைப் பயன்படுத்துதல் 

  1. கம்ப்யூட்டரில் Driveவிற்குச் செல்லவும்.
  2. Drive மாதிரிக்காட்சியில் ஃபைலைப் பார்க்க, மூன்று புள்ளி மெனுவை மேலும் கிளிக் செய்து அதன் பிறகு  லேபிள்கள்  என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. பக்கவாட்டு பேனலில் உள்ள லேபிள்களைச் சரிபார்த்து, புதியவற்றைப் பயன்படுத்தவும். 
  4. ஃபைலில் இருந்து லேபிளை அகற்ற லேபிளைத் தேர்ந்தெடுத்து, அகற்று அகற்று என்பதைக் கிளிக் செய்யவும்.

லேபிளிடப்பட்ட ஃபைல்களைத் தேடுதல்

குறிப்பிட்ட லேபிள்கள் அல்லது புலங்களைக் கொண்ட உள்ளடக்கத்தைக் கண்டறிய Drive தேடல் விருப்பங்களைப் பயன்படுத்துதல். 

  1. கம்ப்யூட்டரில் Driveவிற்குச் செல்லவும்.
  2. மேலே உள்ள Driveவில் தேடு அதன் பிறகு தேடல் விருப்பங்களைக் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. “லேபிள்கள்” என்பதற்கு அடுத்துள்ள லேபிள்களைத் தேடு என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. லேபிளைக் கிளிக் செய்யவும். நீங்கள் புலத்தைத் தேர்ந்தெடுத்து மதிப்பைக் குறிப்பிடலாம்.
  5. தேடு என்பதைக் கிளிக் செய்யவும்.

உதவிக்குறிப்பு: உங்களுக்கு அணுகல் உள்ள ஃபைல்கள் மட்டுமே தேடல் முடிவுகளில் காட்டப்படும்.

true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
15206093883076250930
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
99950
false
false