பகிர்ந்த இயக்ககங்களுக்கு ஃபைல்களையும் ஃபோல்டர்களையும் நகர்த்துதல்

எளிதாகக் கூட்டுப்பணி செய்ய கம்ப்யூட்டரில் ‘எனது Driveவில்’ உள்ள ஃபைல்களையும் ஃபோல்டர்களையும் பகிர்ந்த இயக்ககத்திற்கு நீங்கள் நகர்த்தலாம். இதற்குப் பணி அல்லது பள்ளிக் கணக்கில் உள்நுழைந்திருக்க வேண்டும். இயல்பாக, உங்களுக்குச் சொந்தமான ஃபைல்களையும் ஃபோல்டர்களையும் மட்டுமே நீங்கள் நகர்த்த முடியும். 

  • பகிர்ந்த இயக்ககத்திற்கு ஃபைல்களை நகர்த்த திருத்தக்கூடியவர்களை அனுமதிக்கும் அமைப்பை உங்கள் நிர்வாகி இயக்கினால் திருத்தக்கூடியவராக நீங்கள் இருக்கும் ஃபைல்களை நகர்த்திக்கொள்ளலாம். இந்த 'நிர்வாகி அமைப்பு' குறித்த மேலும் தகவல்களுக்கு பகிர்ந்த இயக்ககத்திற்கு உங்கள் நிறுவனத்தின் உள்ளடக்கத்தை நகர்த்துதல் என்பதற்குச் செல்லவும். 
  • பகிர்ந்த இயக்ககத்தின் நிர்வாகியாக நீங்கள் இருந்தால் மட்டுமே உங்களால் ஃபோல்டரை பகிர்ந்த இயக்ககத்திற்கு நகர்த்த முடியும்.

ஃபைலுக்கான அணுகல் எப்படி மாறுகிறது என்பது குறித்து அறிக

பகிர்ந்த இயக்ககத்திற்கு உள்ளடக்கத்தை நகர்த்தும்போது:

  • பகிர்ந்த இயக்ககத்திற்கு நகர்த்தப்படும் உள்ளடக்கத்திற்கான அணுகலை, பகிர்ந்த இயக்ககத்தில் உறுப்பினராக இல்லாதவர்கள் இழக்கக்கூடும்.
  • பகிர்ந்த இயக்ககத்தின் உறுப்பினர்களுக்கும் ஃபைல் நேரடியாகப் பகிரப்பட்டுள்ளவர்களுக்கும் மட்டுமே உள்ளடக்கத்திற்கான அணுகல் இருக்கும்.
  • ஃபோல்டர்களில் இருந்து பெறப்படும் 'ஃபைலுக்கான அனுமதிகள்' நகலெடுக்கப்படாது. 
    • உபநிலை ஃபோல்டரை, பகிர்ந்த இயக்ககத்திற்கு நகர்த்தினால் முதல்நிலை ஃபோல்டரில் இருந்து பெறப்படும் அனுமதிகள் அதற்கு நகலெடுக்கப்படாது.
    • ஆனால் முதல்நிலை ஃபோல்டரை, பகிர்ந்த இயக்ககத்திற்கு நகர்த்தினால் அந்த அனுமதிகளை உபநிலை ஃபோல்டரில் தொடர்ந்து பெறலாம்.
  • ஃபைலின் அசல் உரிமையாளர் உங்கள் நிறுவனத்தைச் சேர்ந்தவர் என்றாலும் பகிர்ந்த இயக்ககத்தின் உறுப்பினராக அவர் இல்லையெனில் ஃபைலுக்கான உரிமையை அவர் இழந்துவிடுவார். எனினும் அவரால் ஃபைலைத் தொடர்ந்து அணுக முடியும்.

ஃபைல்களையும் ஃபோல்டர்களையும் நகர்த்தும்போது உள்ள கட்டுப்பாடுகளைப் புரிந்துகொள்ளுதல் 

எனது Driveவில் இருந்து பகிர்ந்த இயக்ககத்திற்கு ஃபைல்களையும் ஃபோல்டர்களையும் நகர்த்தும்போது ஏற்படக்கூடிய பொதுவான சிக்கல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:

உங்கள் நிறுவனத்தைச் சாராதவர்களுக்குச் சொந்தமான ஃபைல்களை நகர்த்துதல்

  • உங்கள் நிறுவனத்தைச் சாராதவர்களுக்குச் சொந்தமான ஃபைல்களையோ ஃபோல்டர்களையோ உங்களால் நகர்த்த முடியாது. நகர்த்த வேண்டிய பகிர்ந்த இயக்ககத்தின் உறுப்பினராக அவர் இருந்தாலும்கூட உங்களால் அது முடியாது. 
  • நிறுவனத்தைச் சாராதவர்களுக்குச் சொந்தமான ஃபோல்டரின் ஒரு பகுதியாக இருக்கின்ற, நிறுவனத்தைச் சார்ந்தவரின் துணை ஃபோல்டர்களை உங்களால் நகர்த்த முடியாது.

Google Sites ஃபைல்களை பகிர்ந்த இயக்ககங்களுக்கு நகர்த்துதல்

  • தளத்தின் அசல் உரிமையாளர், பகிர்ந்த இயக்ககம் இருக்கும் அதே நிறுவனத்தைச் சேர்ந்தவராக இருந்தால் வெளியிடப்பட்ட தளம் தொடர்ந்து காட்டப்படும். எந்தப் பயனர்களுடன் தளம் முன்னர் பகிரப்பட்டதோ அவர்களால் அந்தத் தளத்துடன் தொடர்புடைய Sites ஃபைலைத் தொடர்ந்து அணுக முடியும்.
  • தளத்தின் அசல் உரிமையாளர், பகிர்ந்த இயக்ககம் இருக்கும் நிறுவனத்திற்கு மாறாக வேறொரு நிறுவனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் வெளியிடப்பட்ட தளம் தொடர்ந்து காட்டப்படும். எனினும், இதற்கு முன்னர் அவர்களுக்குப் பகிரப்பட்டிருந்தாலும் பகிர்ந்த இயக்ககத்தின் உறுப்பினர்களாக இல்லாவிட்டால் அந்தத் தளத்துடன் தொடர்புடைய ஃபைலை அவர்களால் அணுக முடியாது.

Drive ஃபோல்டர்களை பகிர்ந்த இயக்ககத்திற்கு நகர்த்துவதில் உள்ள பிற கட்டுப்பாடுகளைப் புரிந்துகொள்ளுதல்

  • நகர்த்த முடியாத எந்தவொரு ஃபைலுக்கும் ஷார்ட்கட்கள் உருவாக்கப்பட்டிருக்கும். எனது Driveவில் இருந்து பகிர்ந்த இயக்ககத்திற்கு ஃபோல்டரை நகர்த்தும்போது, அனுமதி அல்லது அணுகல் சிக்கல்களின் காரணமாக ஏதேனும் ஃபைலை நகர்த்த முடியவில்லை எனில் தற்போதைய ஃபோல்டர் படிநிலையைத் தக்கவைக்க பகிர்ந்த இயக்ககத்தில் ஷார்ட்கட் ஒன்றை இது உருவாக்கும். இதைச் செய்வதற்காக, ஃபோல்டரை நகர்த்தும்போது பின்வரும் கட்டுப்பாடுகளை விதிக்கிறோம்:
    • நகர்த்த முடியாத 25 ஃபைல்கள் இருக்கும் ஃபோல்டர்களையோ 10% நகர்த்த முடியாத ஃபைல்கள் இருக்கும் ஃபோல்டர்களையோ நகர்த்த முடியாது (ஒரு ஃபோல்டரில் 10% ஃபைல்கள் என்பது 25 ஃபைல்களுக்கும் குறைவாக இருந்தால், 25 ஃபைல்களுக்குப் பதிலாக 10% ஃபைல்கள் அதன் வரம்பாக அமையும்).
    • மொத்தமாக 1,00,000க்கும் மேற்பட்ட ஃபைல்களை நகர்த்த முடியாது.
  • ஷார்ட்கட்கள் உருவாக்கப்படும்போது அசல் ஃபைல்கள் உரிமையாளரின் ‘எனது Drive’ ஃபோல்டருக்கு நகர்த்தப்படும்.
  • பகிர்ந்த இயக்ககத்திற்கு வரம்பை மீறக்கூடிய வகையில் அதிகளவிலான ஃபோல்டர்களை நகர்த்தும் முன்பு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை நீங்கள் பெறக்கூடும்.

நகர்த்துவதற்கு முந்தைய உரையாடலும் நகர்த்துவதற்கு முந்தைய பதிவிறக்கமும் ஏன் பொருந்தவில்லை எனப் புரிந்துகொள்ளுதல்

  • நகர்த்துவதற்கு முந்தைய உரையாடலில் காட்டப்படும் நகர்த்தக்கூடிய ஃபைல்களின் எண்ணிக்கையும் நகர்த்துவதற்கு முந்தைய பதிவிறக்கத்தில் காட்டப்படும் ஃபைல்களின் எண்ணிக்கையும் பொருந்தாமல் போகலாம். ஏனெனில்: 
    • நகர்த்துவதற்கு முந்தைய உரையாடலில் உங்களுக்கு அணுகல் இல்லாத ஃபைல்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். ஆனால் பதிவிறக்குவதற்கு முந்தைய உரையாடலில் அவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது.
    • பிற ஃபோல்டர்களோ ஃபைல்களோ உள்ள ஒரு ஃபோல்டர் (முதல்நிலை ஃபோல்டர்) நகர்த்த முடியாததாக இருந்து, அந்த முதல்நிலை ஃபோல்டரில் நகர்த்த முடியாத பல ஃபைல்கள் இருந்தால் அந்த முதல்நிலை ஃபோல்டர் மட்டுமே பட்டியலிடப்படும். அந்த முதல்நிலை ஃபோல்டரில் உள்ள ஃபைல்கள் நகர்த்தக்கூடிய ஃபைல்களாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது.

பிழைக் குறியீடுகளைப் புரிந்துகொள்ளுதல்

ஃபைல்களை நகர்த்த முடியாது என்ற அறிவிப்பு காட்டப்பட்டால் ஃபைல் பட்டியலை (CSV) பதிவிறக்கு என்ற விருப்பம் காட்டப்படும். இதைக் கிளிக் செய்தால் நகர்த்த முடியாத ஃபைல்களையும் அவற்றுக்கான பிழைக் குறியீட்டையும் கொண்ட CSV ஃபைல் பதிவிறக்கப்படும். ஒவ்வொரு பிழைக் குறியீட்டையும் பற்றிய கூடுதல் தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

UNKNOWN_UNMOVABLE_REASON மற்றும் OTHER
பல்வேறு காரணங்களால் ஃபைல்களை நகர்த்த முடியாது.
INSUFFICIENT_PERMISSION
தேவையான அனுமதிகள் உங்களிடம் இல்லாததால் ஃபைல்களை நகர்த்த முடியாது. ஃபைலின் உரிமையாளரிடம் அனுமதி கோரவும்.
DIFFERENT_CUSTOMER
நகர்த்துவதை அனுமதிக்காத நிறுவனத்திற்குச் சொந்தமாக இருப்பதால் ஃபைல்களை நகர்த்த முடியாது.
ABUSE
தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கம் இருப்பதால் ஃபைல்களை நகர்த்த முடியாது.
BLOCKED_TYPE
பகிர்ந்த இயக்ககத்தில் இந்த ஃபைல் வகைகள் ஆதரிக்கப்படவில்லை என்பதால் ஃபைல்களை நகர்த்த முடியாது.
SHARED_DRIVE_NOT_FOUND
நகர்த்த வேண்டிய இடம் அகற்றப்பட்டதால் ஃபைல்களை நகர்த்த முடியாது.
ALREADY_IN_SHARED_DRIVE
நகர்த்த வேண்டிய பகிர்ந்த இயக்ககத்தில் இந்த ஃபைல்கள் ஏற்கெனவே இருப்பதால் நகர்த்த முடியாது.
EDITOR_MOVE_IN_DISABLED
பகிர்ந்த இயக்ககத்திற்கு ஃபைல்களை நகர்த்த திருத்தக்கூடியவர்களை உங்கள் டொமைன் அனுமதிக்காததால் இந்த ஃபைல்களை நகர்த்த முடியாது.
OWNER_MUST_BE_MEMBER_OF_DESTINATION_SHARED_DRIVE
பகிர்ந்த இயக்ககத்தின் உறுப்பினராக உரிமையாளர் இல்லாததால் ஃபைல்களை நகர்த்த முடியாது.
CANNOT_MOVE_AS_ADMIN
நிர்வாகப் பயனரிடம் நகர்த்துவதற்கான சிறப்புரிமைகள் இல்லாததால் ஃபைல்களை நகர்த்த முடியாது.
true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
14493293603206200478
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
99950
false
false