Google Drive விட்ஜெட்டைச் சேர்த்தலும் பிரத்தியேகமாக்கலும்

Android மற்றும் iOS சாதனங்களில் Drive விட்ஜெட்டுகள் மூலம் விரைவாக ஃபைல்களை அணுகலாம், ஸ்கேன் செய்யலாம், தேடலாம் அல்லது Google Driveவில் அவற்றைப் பதிவேற்றலாம். 

முகப்புத் திரையில் Google Drive விட்ஜெட்டைச் சேர்த்தல்

முக்கியம்: iOS 14 மற்றும் அதற்குப் பிந்தைய பதிப்புகளிலும் iPadOS 14 மற்றும் அதற்குப் பிந்தைய பதிப்புகளிலும் மட்டுமே இந்த அம்சம் கிடைக்கும்.

  1. iPhone அல்லது iPadல் முகப்புத் திரையைத் தட்டிப் பிடிக்கவும்.
  2. மேல் இடதுபுறத்தில் உள்ள ‘சேர்’ சேர் என்பதைத் தட்டவும்.
  3. Google Drive ஆப்ஸைத் தேடி அதைத் தட்டவும்.
  4. விட்ஜெட்டின் அளவைத் தேர்ந்தெடுக்க, வலதுபுறமோ இடதுபுறமோ ஸ்வைப் செய்யவும்.
  5. விட்ஜெட்டைச் சேர் என்பதைத் தட்டவும்.
  6. விட்ஜெட்டை உங்கள் முகப்புத் திரையில் வைத்து, மேல் வலதுபுறத்தில் உள்ள முடிந்ததுஎன்பதைத் தட்டவும்.

ஃபைல்கள் பரிந்துரைக்கப்படுவதை முடக்குதல்

  1. iPhone அல்லது iPadல் முகப்புத் திரைக்குச் செல்லவும்.
  2. Google Drive விட்ஜெட்டைத் தட்டிப் பிடிக்கவும்.
  3. விட்ஜெட்டைத் திருத்து என்பதைத் தட்டவும்.
  4. "பரிந்துரைக்கப்படும் ஃபைல்களைக் காட்டு" என்பதை முடக்கவும் முடக்கு.

தொடர்புடைய கட்டுரைகள்

Android iPhone & iPad
false
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
17538519426749416318
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
99950
false
false