அளவை மாற்றுதல்/ஆவணத்தின் காட்சியை மாற்றுதல்

ஆவணம், விளக்கக்காட்சி அல்லது விரிதாளின் காட்சியை மாற்றலாம். எ.கா. வார்த்தைகளைப் பெரிதாக்குவது, மேலே உள்ள கருவிப்பட்டியை மறைப்பது.

ஸ்லைடை பெரியதாக்க கீபோர்ட் ஷார்ட்கட்டைப் பயன்படுத்தலாம்.

ஃபைலின் அளவைப் பெரிதாக்குதல் அல்லது சிறிதாக்குதல்

Google Docs/Sheets ஃபைலின் அளவைப் பெரிதாக்குதல் அல்லது சிறிதாக்குதல்

  1. உங்கள் கம்ப்யூட்டரில் Google Docsஸில் ஆவணத்தையோ Google Sheetsஸில் விரிதாளையோ திறக்கவும்.
  2. கருவிப்பட்டியில், 100% என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. வார்த்தைகள் எவ்வளவு பெரிதாக இருக்க வேண்டும் என்பதைத் தேர்வுசெய்யவும் அல்லது 50க்கும் 200க்கும் இடைப்பட்ட எண்ணை டைப் செய்யவும்.
    • உதவிக்குறிப்பு: Google Docsஸில், உலாவிச் சாளரத்தின் அளவிற்கு ஆவணத்தை விரிவாக்க பொருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

Google Slides ஃபைலின் அளவைப் பெரிதாக்குதல் அல்லது சிறிதாக்குதல்

  1. கம்ப்யூட்டரில் Google Slidesஸில் விளக்கக்காட்சியைத் திறக்கவும்.
  2. கருவிப்பட்டியில், பொருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. கீழ்த்தோன்றும் மெனுவில் இருந்து எந்த அளவிற்கு மாற்ற வேண்டும் என்பதைத் தேர்வுசெய்யவும் அல்லது 25க்கும் 1600க்கும் இடைப்பட்ட எண்ணை டைப் செய்யவும்.
    1. உதவிக்குறிப்பு: உலாவிச் சாளரத்தின் அளவிற்குக் கேன்வாஸை விரிவாக்க பொருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

காட்சியை மாற்றுதல்

  1. கம்ப்யூட்டரில் ஆவணம், விரிதாள் அல்லது விளக்கக்காட்சியைத் திறக்கவும்.
  2. கருவிப்பட்டியில், காட்டு என்பதைக் கிளிக் செய்து ஒரு விருப்பத்தைக் கிளிக் செய்யவும்.
    • முழுத்திரை: இது மெனுவையும் கருவிப்பட்டியையும் மறைக்கும். முழுத்திரையில் இருந்து வெளியேற, உங்கள் கீபோர்டில் Esc அல்லது Escape பட்டனை அழுத்தவும். நீங்கள் தொடுதிரையைப் பயன்படுத்தினால் ஸ்கிரீனைத் தொட்டுப் பிடித்திருந்து சூழல் மெனுவைத் திறந்து அதன் பிறகு அதன்பிறகு, முழுத்திரையில் இருந்து வெளியேறு என்பதைத் தட்டவும்.  
    • அச்சிடல் தளவமைப்பைக் காட்டு: பக்கங்கள் உள்ள வடிவமைப்பிலான Google Docsஸில் மட்டுமே இந்த விருப்பம் இருக்கும். நீங்கள் ஆவணத்தை அச்சிட்டது போல பக்கங்களில் மேற்குறிப்புகள், அடிக்குறிப்புகள் மட்டுமின்றி அவற்றுக்கு இடையே ஓரங்களும் இருக்கும்.

உதவிக்குறிப்பு: நீங்கள் மிகச் சமீபத்தில் பார்த்தவற்றை Google Docs, Sheets, Slides ஆகியவை நினைவில் வைத்துக்கொள்ளும். உங்களின் காட்சியை நீங்கள் மாற்றினால் ஃபைலைப் பார்த்துக்கொண்டிருப்பவர்களின் காட்சி மாற்றப்படாது.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
3964620389274510144
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false