Google Docs, Sheets, Slides ஆகியவற்றில் டார்க் தீமினைப் பயன்படுத்துதல்

ஆவணங்கள், விளக்கக்காட்சிகள், விரிதாள்கள் ஆகியவற்றை மொபைல் சாதனத்தில் எளிதாகப் பார்க்கும் வகையில் தீம் அமைப்பை மாற்றிக்கொள்ளலாம். நீங்கள் தேர்வுசெய்யும் தீமினைக் கூட்டுப்பணியாளர்களால் பார்க்க முடியாது.  

தீம் அமைப்பை மாற்றுதல்

  1. உங்கள் Android மொபைலிலோ டேப்லெட்டிலோ Google Docs, Sheets, Slides போன்ற ஆப்ஸைத் திறக்கவும்.
  2. மேல் இடதுபுறத்தில், மெனு மெனு என்பதைத் தட்டவும்.
  3. அமைப்புகள் அமைப்புகள் என்பதைத் தட்டவும்.
  4. தீமினைத் தேர்வுசெய் என்பதைத் தட்டவும்.
  5. டார்க், லைட் அல்லது சிஸ்டத்தின் இயல்புநிலை என்பதைத் தேர்வுசெய்யவும்.

ஆவணம்/தாளின் லைட் தீம் மாதிரிக்காட்சியைப் பார்த்தல்

டார்க் தீமானது ஆவணங்களையும் தாள்களையும் தீமிற்கு ஏற்றவாறு தானாகவே சரிசெய்து காட்சியை மேம்படுத்தும். லைட் தீமில் ஆவணமோ தாளோ கூட்டுப்பணியாளர்களுக்கு எப்படிக் காட்சியளிக்கும் என்று அதன் மாதிரிக்காட்சியைப் பார்க்கலாம்.

  1. Android மொபைலிலோ டேப்லெட்டிலோ Google Docs அல்லது Sheets ஆப்ஸைத் திறக்கவும்.
  2. நீங்கள் பார்க்க விரும்பும் ஆவணத்தையோ தாளையோ திறக்கவும்.
  3. மேல் வலதுபுறத்தில், மேலும் மேலும் என்பதைத் தட்டவும்.
  4. லைட் தீமில் காட்டு என்பதைத் தட்டவும்.
Android iPhone & iPad
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
15691397388552930982
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false