Google Docs, Sheets ஆகியவற்றில் படங்கள், வீடியோக்கள், .gif ஃபைல்கள் போன்றவற்றைச் சேர்க்கலாம் அகற்றலாம். Google Slidesஸில் படங்கள், வீடியோக்கள், ஆடியோ, GIFகள், ஸ்டிக்கர்கள் ஆகியவற்றைச் சேர்க்கலாம். இன்னும் சிறப்பான விளக்கக்காட்சியை உருவாக்க, பட ஒதுக்கிடங்களையும் சேர்க்கலாம்.
ஆவணத்திலோ விளக்கக்காட்சியிலோ படத்தைச் சேர்த்தல்
- உங்கள் கம்ப்யூட்டரில் Docs அல்லது Slideஸில் ஆவணத்தையோ விளக்கக்காட்சியையோ திறக்கவும்.
- செருகு படம் என்பதைக் கிளிக் செய்யவும்.
- படத்தை எங்கிருந்து பெற வேண்டும் என்பதைத் தேர்வுசெய்யவும்.
- கம்ப்யூட்டரிலிருந்து பதிவேற்று: உங்கள் சாதனத்தில் சேமித்துள்ள படத்தைச் சேர்க்கலாம்.
- இணையத்தில் தேடு: இணையத்தில் படத்தைத் தேடலாம்.
- GIFகளும் ஸ்டிக்கர்களும்: உங்கள் ஸ்லைடில் GIF அல்லது ஸ்டிக்கரைச் சேர்க்கலாம்.
- Drive: Google Driveவில் சேமித்துள்ள படத்தைப் பயன்படுத்தலாம்.
- Photos: Google Photos லைப்ரரியில் உள்ள படத்தைப் பயன்படுத்தவும்.
- URL மூலமாக: உங்கள் படத்திற்கான இணைப்பைச் செருகவும் அல்லது .gifஃபைச் செருகவும்.
- செருகு அல்லது திற என்பதைக் கிளிக் செய்யவும்.
Sheetsஸில் படங்களைச் சேர்ப்பது எப்படி எனத் தெரிந்துகொள்ளுங்கள்.
- கம்ப்யூட்டரில் Google Slidesஸில் விளக்கக்காட்சியைத் திறக்கவும்.
- திரையின் மேலே மெனுவின் நடுவில் உள்ள செருகு என்பதைக் கிளிக் செய்யவும்.
- காட்டப்படும் கீழ்த்தோன்றல் மெனுவில் படம் GIFகளும் ஸ்டிக்கர்களும் என்பதைக் கிளிக் செய்யவும்.
- வலதுபுறத்தில் திறக்கப்படும் பேனலில் தேடல் பட்டியைக் கிளிக் செய்யவும்.
- தேடல் குறிப்புகளை டைப் செய்யவும்.
- GIFகள் (இயல்பு) அல்லது ஸ்டிக்கர்கள் மூலம் முடிவுகளை வடிகட்டலாம்.
- கம்ப்யூட்டரில் Google Docsஸுக்குச் செல்லவும்.
- ஆவணத்தைத் திறக்கவும்.
- நீங்கள் நகர்த்தவோ திருத்தவோ விரும்பும் படத்தைக் கிளிக் செய்யவும். திருத்துவதற்கான விருப்பங்களுடன் ஒரு பாப்-அப் சாளரம் கீழே திறக்கும்.
- படத்தின் தளவமைப்பை மாற்ற, ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்:
- வரியில்
- உரையை மடி
- உரையைப் பிரி
- உரைக்குப் பின்
- உரைக்கு முன்
முக்கியம்: பக்கவரிசையற்ற வடிவமைப்பில் உள்ள ஆவணங்களில் இந்த அம்சங்களைப் பயன்படுத்த முடியாது. இந்த அம்சங்களைப் பயன்படுத்த, பக்கங்கள் உள்ள வடிவமைப்பில், ஆவணம் அமைக்கப்பட்டு இருப்பதை உறுதிசெய்துகொள்ளவும். - “உரையை மடி” அல்லது “உரையைப் பிரி” என்பதைத் தேர்ந்தெடுத்தால் நிலையை இவ்வாறு மாற்றலாம்:
- உரையுடன் நகர்த்து
- பக்கத்தில் நிலையான இடத்தில் அமை
பின்வரும் விருப்பங்களைப் பயன்படுத்தி, படத்தில் கூடுதல் மாற்றங்களைச் செய்யலாம்:
- பட விருப்பங்கள் பட விருப்பங்கள் அனைத்தும் என்பதைக் கிளிக் செய்யவும்.
-
வலதுபுறத்தில் உள்ள பக்கப்பட்டியில், ஒரு பட விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்:
-
அளவு & சுழற்சி: படத்தின் அளவு, ஸ்கேல், சுழற்சி ஆகியவற்றை அமைக்கலாம்.
-
உரை மடிப்பு: உங்கள் படம் அதைச் சுற்றி உள்ள உரையுடன் சேர்ந்து எப்படித் தோன்ற வேண்டும் என்பதை அமைக்கலாம்.
-
நிலை: ஆவணத்தில் உங்கள் படத்தின் நிலையை அமைக்கலாம்.
-
மறுவண்ணம்: படத்தின் வண்ணத்தை மாற்றலாம்.
-
சீரமைப்புகள்: படத்தின் தெளிவுத்திறன், ஒளிர்வு, ஒளி மாறுபாடு ஆகியவற்றை அமைக்கலாம்.
-
படத்தை இழுத்தல்
முக்கியம்: இந்த அம்சம் Google Sheetsஸில் கிடைக்காது.
- கம்ப்யூட்டரில், கம்ப்யூட்டர்/இணையதளத்தில் உள்ள படத்தைக் கிளிக் செய்யவும்.
- அந்தப் படத்தைப் பிடித்து ஆவணத்திற்குள் இழுக்கவும்.
படத்தை நகலெடுத்து ஒட்டுதல்
- கம்ப்யூட்டரில், கம்ப்யூட்டர்/இணையதளத்தில் உள்ள படத்தை வலது கிளிக் செய்யவும்.
- நகலெடு என்பதைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் ஆவணம், விளக்கக்காட்சி அல்லது விரிதாளுக்குச் செல்லவும்.
- ஒட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
உதவிக்குறிப்பு: படம் காட்டப்பட சிறிது நேரம் ஆகலாம்.
பட ஒதுக்கிடத்தைச் சேர்த்தல்
பட ஒதுக்கிடத்தைச் செருகுதல்
- கம்ப்யூட்டரில் Google Slidesஸில் விளக்கக்காட்சியைத் திறக்கவும்.
- மேலே உள்ள காட்டு தீம் பில்டர் என்பதைக் கிளிக் செய்யவும்.
- செருகு ஒதுக்கிடம் பட ஒதுக்கிடம் என்பதைக் கிளிக் செய்யவும்.
- பட ஒதுக்கிடத்திற்கான வடிவத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
ஒதுக்கிடப் படத்தை மாற்றியமைத்தல்
- கம்ப்யூட்டரில் Google Slidesஸில் ஒதுக்கிடம் உள்ள விளக்கக்காட்சியைத் திறக்கவும்.
- ஒதுக்கிடத்துக்குள் உள்ள ‘படத்தைச் செருகு’ என்பதைக் கிளிக் செய்யவும்.
- படத்தை எங்கிருந்து சேர்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- கம்ப்யூட்டரில், Google Docs அல்லது Slidesஸில் ஆவணத்தையோ விளக்கக்காட்சியையோ திறக்கவும்.
- நீங்கள் மாற்றியமைக்க விரும்பும் படத்தை வலது கிளிக் செய்யவும்.
- படத்தை மாற்றியமை என்பதைக் கிளிக் செய்யவும்.
- படத்தை எங்கிருந்து பெற விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்:
- கம்ப்யூட்டரிலிருந்து
- இணையத்தில் தேடி
- Drive
- Photos
- URL மூலம்
- கேமரா
- படத்தைத் தேர்வுசெய்யவும்.
- மாற்றியமை அல்லது தேர்ந்தெடு என்பதைக் கிளிக் செய்யவும்.
உதவிக்குறிப்பு: Google Slidesஸில், உங்கள் விளக்கக்காட்சியில் உள்ள படத்தை மாற்றுவதற்கு நீங்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் ஒரு படத்தை இழுத்தும் விடலாம்.
விளக்கக்காட்சியில் வீடியோவைச் சேர்த்தல்
- உங்கள் கம்ப்யூட்டரில் Google Slidesஸில் விளக்கக்காட்சியைத் திறக்கவும்.
- வீடியோவைச் சேர்க்க விரும்பும் ஸ்லைடைக் கிளிக் செய்யவும்.
- செருகு வீடியோ என்பதைக் கிளிக் செய்யவும்.
- வீடியோவை எங்கிருந்து பெற விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்:
- YouTubeல் தேடுதல்
- URL மூலம்
- Google Drive
- வீடியோவைத் தேர்வுசெய்யவும்.
- தேர்ந்தெடு என்பதைக் கிளிக் செய்யவும்.
பிற அனிமேஷன், மாறக்கூடிய ஸ்லைடுகள் போன்றவற்றைக் கொண்டுள்ள வீடியோக்களை Google Slides தற்போது தானாகவே பிளே செய்யும்.
வீடியோவைப் பிளே செய்து ஸ்லைடை முன் நகர்த்த, பின்வரும் விருப்பத்தில் ஒன்றைத் தேர்வுசெய்யவும்:
- ஏதேனும் ஒரு விசையை அழுத்துதல்
- மவுஸைக் கிளிக் செய்தல்
- ரிமோட் கன்ட்ரோலைப் பயன்படுத்துதல்
- வீடியோவைத் தேர்ந்தெடுக்கவும்.
- கருவிப்பட்டியில், வடிவமைப்பு விருப்பங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
- வீடியோவை வலது கிளிக் செய்து மெனுவில், வடிவமைப்பு விருப்பங்கள் என்பதையும் தேர்ந்தெடுக்கலாம்.
- பக்கப்பட்டியில், "வீடியோ பிளேபேக்" என்பதன் கீழ் ஒரு விருப்பத்தைத் தேர்வுசெய்யவும்:
- பிளே செய் (கிளிக்கில்): ஸ்லைடை முன் நகர்த்தும்போது வீடியோ பிளே ஆகும். இது இயல்பாக அமைக்கப்பட்டிருக்கும்.
- பிளே செய் (தானாக): கிளிக் செய்யாமலேயே வீடியோ பிளே ஆகும்.
- பிளே செய் (நேரடியாக): ஸ்லைடில் இருக்கும் வீடியோவைக் கிளிக் செய்தால் மட்டுமே வீடியோ பிளே ஆகும். முன்னர் இது இயல்பாக அமைக்கப்பட்டிருந்தது.
விளக்கக்காட்சியில் ஆடியோ கோப்பினைச் சேர்த்தல்
உங்கள் Driveவில் சேமித்துள்ள .mp3, .wav ஆகிய கோப்புகளை விளக்கக்காட்சியில் சேர்க்க முடியும். Google Driveவில் கோப்புகளைப் பதிவேற்றுவது எப்படி என்பதை அறிக.
உதவிக்குறிப்பு: இந்த உலாவிகளில் .wav கோப்புகளைப் பயன்படுத்தலாம்:
- Chrome
- Firefox
- Safari
- Microsoft Edge
- உங்கள் கம்ப்யூட்டரில் Google Slidesஸில் விளக்கக்காட்சியைத் திறக்கவும்.
- ஆடியோ கோப்பைச் சேர்க்க விரும்பும் ஸ்லைடைத் தேர்ந்தெடுக்கவும்.
- செருகு ஆடியோ என்பதைக் கிளிக் செய்யவும்.
- ஆடியோ கோப்பினைத் தேர்வுசெய்யவும்.
- தேர்ந்தெடு என்பதைக் கிளிக் செய்யவும்.
இந்த வடிவக் கோப்புகளைக் கொண்டுள்ள விளக்கக்காட்சிகளைப் புதிதாகப் பயன்படுத்துபவர்களுக்கு ’அணுகல் சரிபார்ப்பு’ அம்சம் தானாகவே அனுமதிகளைப் பரிந்துரைக்கும்:
- ஆடியோ கோப்புகள்
- வீடியோ கோப்புகள்
வீடியோ & ஆடியோ கோப்புகளுடன் உட்பொதிக்கப்பட்ட பகிர்ந்த விளக்கக்காட்சியை வழங்குபவரால் அதைப் பிளே செய்ய முடியும் என்பதை உறுதி செய்துகொள்ள:
- உங்கள் கம்ப்யூட்டரில், Google Slides விளக்கக்காட்சியைத் திறக்கவும்.
- பகிர் என்பதைக் கிளிக் செய்யவும்.
- நபர்கள்/குழுக்களைச் சேர்க்கவும்.
- திருத்தக்கூடியவர், கருத்துத் தெரிவிப்பவர் அல்லது பார்வையாளர் என்பதைத் தேர்வுசெய்யவும்.
- பகிர் என்பதைக் கிளிக் செய்யவும்.
- உதவிக்குறிப்பு: ‘அணுகல் சரிபார்ப்பு’ அம்சம் தானாவே இயங்கக்கூடியது, மேலும் இது அனுமதிகள் தொடர்பான மாற்றங்களையும் பரிந்துரைக்கக்கூடும்.
- மாற்றங்களை உறுதிப்படுத்தவும்.