வினவலை எழுதுதல் & திருத்துதல்

மிகவும் சிக்கலான பகுப்பாய்வைச் செய்ய விரும்பினால் (உதாரணத்திற்கு, ஒன்றுக்கும் மேற்பட்ட BigQuery டேபிள்களின் தரவை இணைத்தல்) ஒரு பிரத்தியேக வினவலை எழுதலாம்.

முக்கியம்:

  1. கம்ப்யூட்டரில் Google Sheetsஸில் ஒரு விரிதாளைத் திறக்கவும்.
  2. மேலுள்ள மெனுவில் தரவு அதன் பிறகு தரவு இணைப்பான்கள் அதன் பிறகு BigQueryயில் இணை என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. திட்டப்பணியைத் தேர்வு செய்யவும்.
  4. பிரத்தியேக வினவலை எழுது என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. வினவலை உள்ளிடவும்.
    • உங்கள் வினவல் எவ்வளவு தரவை ஸ்கேன் செய்கிறது என்பதன் மாதிரிக்காட்சியைப் பார்க்க, எடிட்டரின் கீழ் வலதுபுறத்தில் முடிவுகளின் மாதிரிக்காட்சியைக் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. முடிவுகளைச் செருகு என்பதைக் கிளிக் செய்யவும்.
தரவை ஒப்பிட, தரவு வகையை மாற்ற வேண்டியிருக்கலாம். உதாரணத்திற்கு, BigQueryயில் ஒரு நெடுவரிசையில் வார்த்தைத் தரவு இருந்தால் Sheetsஸில் அது எளிய உரையாக இருக்க வேண்டும். அப்போதுதான் அது சரியாக ஒப்பிட்டுப் பார்க்கும்.
உங்கள் வினவலில் அளவுருக்களைச் சேர்த்தல்

கலத்தில் உள்ள ஒரு மதிப்பை வினவலில் பயன்படுத்த அளவுருவை அமைக்க வேண்டும்.

  1. வினவல் எடிட்டரின் வலதுபுறத்தில் அளவுருக்கள் அதன் பிறகு சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. அளவுருவின் பெயரையும் மேற்கோள் காட்ட விரும்பும் கலத்தையும் உள்ளிடவும்.
  3. சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
Sheets மற்றும் BigQueryயில் தரவை ஒப்பிடும்போது
தரவை ஒப்பிட, தரவு வகையை மாற்ற வேண்டியிருக்கலாம். உதாரணத்திற்கு, BigQueryயில் ஒரு நெடுவரிசையில் வார்த்தைத் தரவு இருந்தால் Sheetsஸில் அது எளிய உரையாக இருக்க வேண்டும். அப்போதுதான் அது சரியாக ஒப்பிட்டுப் பார்க்கும்.
விரிதாளிலும் BigQueryயிலும் உள்ள தரவு வகை வேறுபட்டிருந்தால் நீங்கள் பின்வருவதைச் செய்யலாம்:

வினவலுக்கான உதாரணங்கள்

எளிய வினவல்:

SELECT
word,
SUM(word_count) AS word_count
FROM
`bigquery-public-data.samples.shakespeare`
WHERE word IN ('நான்', 'எனது', 'நீங்கள்')
GROUP BY word;

அளவுரு சேர்க்கப்பட்ட வினவல்:

SELECT SUM(kw_total)
FROM `bigquery-public-data.sunroof_solar.solar_potential_by_censustract`
WHERE state_name = @STATENAME;

அடுத்து: Sheetsஸில் BigQuery தரவு தொடர்பான சிக்கல்களைச் சரிசெய்தல்

தொடர்புடைய கட்டுரைகள்

Sheetsஸில் BigQuery தரவைப் பயன்படுத்தத் தொடங்குதல்
Sheetsஸில் BigQuery தரவை வரிசைப்படுத்துதல் & வடிகட்டுதல்
Sheetsஸில் BigQuery தரவு தொடர்பான வினவலைப் பகுப்பாய்வு செய்தல் & புதுப்பித்தல்
Sheetsஸில் BigQuery தரவு தொடர்பான சிக்கல்களைச் சரிசெய்தல்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
1787949104085884511
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false