Google Sheetsஸில் BigQuery தரவை வரிசைப்படுத்துதல் & வடிகட்டுதல்

Google Sheetsஸில் கோடிக்கணக்கான BigQuery தரவு வரிசைகளை வரிசைப்படுத்தலாம் வடிகட்டலாம். இது பணியாற்றுவதற்கு எளிதாக இருக்கும்.

கவனத்திற்கு: Google Sheetsஸில் BigQuery தரவை அணுக, BigQueryயைப் பயன்படுத்துவதற்கான அணுகல் இருக்க வேண்டும். BigQueryயை எப்படிப் பயன்படுத்தத் தொடங்குவது என அறிக.

மாதிரிக்காட்சித் தாவலை வரிசைப்படுத்துதல் & வடிகட்டுதல்

தரவை வரிசைப்படுத்துதல்

  1. உங்கள் கம்ப்யூட்டரில் Google Sheetsஸில் BigQuery தரவுடன் இணைத்துள்ள விரிதாளைத் திறக்கவும். BigQuery தரவில் எவ்வாறு இணைப்பது என்பது பற்றி அறிக.
  2. நெடுவரிசைக்கு மேலே உள்ள வடிகட்டு வடிப்பான் பட்டியல் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. அந்த நெடுவரிசையை வரிசைப்படுத்துவது ஏறுவரிசையிலா இறங்குவரிசையிலா என்பதைத் தேர்வு செய்யவும். இது உரை, எண்கள் என இரண்டையும் வரிசைப்படுத்தும்.
  4. சரி என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. தாளின் கீழ் இடதுபுறத்தில் உள்ள பயன்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
வரிசைப்படுத்தலை அகற்றுதல்
  1. உங்கள் கம்ப்யூட்டரில் Google Sheetsஸில் BigQuery தரவுடன் இணைத்துள்ள விரிதாளைத் திறக்கவும்.
  2. வரிசைப்படுத்தப்பட்ட நெடுவரிசைக்கு மேலே உள்ள வடிகட்டு வடிப்பான் பட்டியல் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. ஹைலைட் செய்த வரிசைப்படுத்தலைக் கிளிக் செய்யவும். 
  4. சரி என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. தாளின் கீழ் இடதுபுறத்தில் உள்ள பயன்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

நிபந்தனையின்படி வடிகட்டுதலைச் சேர்த்தல்

  1. கம்ப்யூட்டரில் Google Sheetsஸில் BigQuery தரவுடன் இணைத்துள்ள விரிதாளைத் திறக்கவும்.
  2. நெடுவரிசைக்கு மேலே உள்ள வடிகட்டு வடிப்பான் பட்டியல் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. “நிபந்தனையின்படி வடிகட்டு” என்பதற்குக் கீழே உள்ள கீழ் தோன்றும் மெனுவை கீழ்நோக்கிய அம்புக்குறி கிளிக் செய்து நிபந்தனையைத் தேர்வுசெய்யவும். 
  4. சரி என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. தாளின் கீழ் இடதுபுறத்தில் உள்ள பயன்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
நிபந்தனையின்படி வடிகட்டுதலை அகற்றுதல்
  1. உங்கள் கம்ப்யூட்டரில் Google Sheetsஸில் BigQuery தரவுடன் இணைத்துள்ள விரிதாளைத் திறக்கவும்.
  2. வரிசைப்படுத்தப்பட்ட நெடுவரிசைக்கு மேலே உள்ள வடிகட்டு வடிப்பான் பட்டியல் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. “நிபந்தனையின்படி வடிகட்டு” என்பதற்குக் கீழே உள்ள கீழ் தோன்றும் மெனுவை கீழ்நோக்கிய அம்புக்குறி கிளிக் செய்து எதுவும் வேண்டாம் என்பதைத் தேர்வுசெய்யவும். 
  4. சரி என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. தாளின் கீழ் இடதுபுறத்தில் உள்ள பயன்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

மதிப்பின்படி வடிகட்டுதலைச் சேர்த்தல்

  1. கம்ப்யூட்டரில் Google Sheetsஸில் BigQuery தரவுடன் இணைத்துள்ள விரிதாளைத் திறக்கவும்.
  2. நெடுவரிசைக்கு மேலே உள்ள வடிகட்டு வடிப்பான் பட்டியல் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. “மதிப்பின்படி வடிகட்டு” என்பதற்குக் கீழே உள்ள வடிப்பானைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
    • உதவிக்குறிப்பு: சிறந்த 500 மதிப்புகளை BigQuery பெறும் என்பதால் அதற்குச் சில வினாடிகள் ஆகலாம்.
  4. மதிப்புகளும் அவற்றுக்கான கால இடைவெளிகளும் பக்கப்பட்டியில் காட்டப்படும்போது நீங்கள் பயன்படுத்த விரும்பும் மதிப்புகளைச் சரிபார்க்கவும்.
  5. சரி என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. தாளின் கீழ் இடதுபுறத்தில் உள்ள பயன்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

தேர்ந்தெடுத்த கல மதிப்பின் மூலமும் வடிகட்டலாம்:

  1. கம்ப்யூட்டரில் Google Sheetsஸில் BigQuery தரவுடன் இணைத்துள்ள விரிதாளைத் திறக்கவும்.
  2. வடிகட்ட விரும்பும் கல மதிப்பை வலது கிளிக் செய்யவும்.
  3. கல மதிப்பின்படி வடிகட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. தாளின் கீழ் இடதுபுறத்தில் உள்ள பயன்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

உதவிக்குறிப்பு: எக்ஸ்ட்ராக்ட் செய்த மதிப்பில் இருந்து தேர்ந்தெடுத்த கல மதிப்பின் மூலமும் வடிகட்டலாம்.

மதிப்பின்படி வடிகட்டுதலை அகற்றுதல்
  1. உங்கள் கம்ப்யூட்டரில் Google Sheetsஸில் BigQuery தரவுடன் இணைத்துள்ள விரிதாளைத் திறக்கவும்.
  2. வரிசைப்படுத்திய நெடுவரிசைக்கு மேலே, வடிகட்டுவதற்கான ஐகானை வடிப்பான் பட்டியல் கிளிக் செய்யவும்.
  3. “மதிப்பின்படி வடிகட்டு” என்பதற்குக் கீழே உள்ள வடிப்பானை மாற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. பக்கப்பட்டியில், அனைத்தையும் தேர்ந்தெடு என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. சரி என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. தாளின் கீழ் இடதுபுறத்தில் உள்ள மாதிரிக்காட்சியை ரெஃப்ரெஷ் செய் என்பதைக் கிளிக் செய்யவும்.

பைவட் டேபிள், எக்ஸ்ட்ராக்ட், விளக்கப்படம் ஆகியவற்றை வரிசைப்படுத்துதல் & வடிகட்டுதல்

பைவட் டேபிள், எக்ஸ்ட்ராக்ட், விளக்கப்படம் ஆகியவற்றை வரிசைப்படுத்துதல்

எக்ஸ்ட்ராக்ட்டுகளையும் விளக்கப்படங்களையும் பயன்படுத்துதல்
  1. To open the right side panel, click the object. 
  2. Under “Chart Editor,” click Setup.
  3. Under “Sort,” click Add.
  4. Select the value you want to sort. 
  5. To change the order, next to the value you want to sort, click வலது அம்புக்குறி Z or Z வலது அம்புக்குறி A.
  6. At the bottom left of the sheet, click Apply or Refresh.
உதவிக்குறிப்பு: வரிசைப்படுத்துவதற்குப் பயன்படுத்திய நிபந்தனைகளை அகற்ற, வலதுபுறப் பக்கவாட்டுப் பேனலில் உள்ள அமைவு என்பதைக் கிளிக் செய்யவும். “வரிசைப்படுத்து” என்பதற்குக் கீழே உள்ள அகற்று மேலோட்டத்திலிருந்து அகற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
பைவட் டேபிள்களைப் பயன்படுத்துதல்
  1. வலதுபுறப் பக்கவாட்டுப் பேனலைத் திறக்க பைவட் டேபிளைக் கிளிக் செய்யவும். 
  2. “விளக்கப்பட எடிட்டர்” என்பதற்குக் கீழே உள்ள அமைவு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. “வரிசை” என்பதற்குக் கீழ் “வரிசைமுறை”, “இதன்படி வரிசைப்படுத்து” ஆகியவற்றுக்குக் கீழே நீங்கள் விரும்பும் விருப்பங்களைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. தாளின் கீழ் இடதுபுறத்தில் உள்ள பயன்படுத்து அல்லது புதுப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.
உதவிக்குறிப்பு: “வரிசைமுறை”, “இதன்படி வரிசைப்படுத்து” ஆகியவற்றுக்குக் கீழே நீங்கள் தேர்வுசெய்த விருப்பங்களை மாற்றிக்கொள்ளலாம்.

பைவட் டேபிள், எக்ஸ்ட்ராக்ட், விளக்கப்படம் ஆகியவற்றை வடிகட்டுதல்

நிபந்தனையின்படி வடிகட்டுதலைச் சேர்த்தல்
  1. வலதுபுறப் பக்கவாட்டுப் பேனலைத் திறக்க பைவட் டேபிள், எக்ஸ்ட்ராக்ட் அல்லது விளக்கப்படத்தைக் கிளிக் செய்யவும். 
  2. “விளக்கப்பட எடிட்டர்” என்பதற்குக் கீழே உள்ள அமைவு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. “வடிப்பான்” என்பதற்குக் கீழே உள்ள சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. “அனைத்தையும் காட்டுகிறது” என்பதற்கு அடுத்துள்ள கீழ் தோன்றும் மெனுவை கீழ்நோக்கிய அம்புக்குறி கிளிக் செய்யவும். 
  5. “நிபந்தனையின்படி வடிகட்டு” என்பதற்குக் கீழே ஏதேனும் ஒரு நிபந்தனையைத் தேர்ந்தெடுக்கவும்.
  6. சரி என்பதைக் கிளிக் செய்யவும்.
  7. தாளின் கீழ் இடதுபுறத்தில் உள்ள பயன்படுத்து அல்லது புதுப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.
உதவிக்குறிப்பு: இப்போதுள்ள வடிப்பான்களை அகற்ற, வலதுபுறப் பக்கவாட்டுப் பேனலில் “வடிப்பான்கள்” என்பதற்குக் கீழே உள்ள அகற்று மேலோட்டத்திலிருந்து அகற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
மதிப்பின்படி வடிகட்டுதலைச் சேர்த்தல்
  1. வலதுபுறப் பக்கவாட்டுப் பேனலைத் திறக்க பைவட் டேபிள், எக்ஸ்ட்ராக்ட் அல்லது விளக்கப்படத்தைக் கிளிக் செய்யவும். 
  2. “விளக்கப்பட எடிட்டர்” என்பதற்குக் கீழே உள்ள அமைவு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. “வடிப்பான்” என்பதற்குக் கீழே உள்ள சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. “அனைத்தையும் காட்டுகிறது” என்பதற்கு அடுத்துள்ள கீழ் தோன்றும் மெனுவை கீழ்நோக்கிய அம்புக்குறி கிளிக் செய்யவும்.
  5. “மதிப்பின்படி வடிகட்டு” என்பதற்குக் கீழே உள்ள வடிப்பானைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. வடிகட்ட மதிப்புகளைத் தேர்ந்தெடுக்கவும். 
  7. சரி அல்லது பயன்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
  8. தாளின் கீழ் இடதுபுறத்தில் உள்ள பயன்படுத்து அல்லது புதுப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.
உதவிக்குறிப்பு: இப்போதுள்ள வடிப்பான்களை அகற்ற, வலதுபுறப் பக்கவாட்டுப் பேனலில் “வடிப்பான்கள்” என்பதற்குக் கீழே உள்ள அகற்று மேலோட்டத்திலிருந்து அகற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
7480850866112151363
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false