ஸ்மார்ட் கம்போஸ் மற்றும் ஸ்மார்ட் ரிப்ளை அம்சங்களைப் பயன்படுத்துதல்

முக்கியம்: பணி/பள்ளிக் கணக்கைப் பயன்படுத்துபவர்களுக்கு 'ஸ்மார்ட் கம்போஸ்' அம்சம் ஆங்கிலம், ஸ்பானிஷ், போர்ச்சுகீஸ், ஃபிரெஞ்சு ஆகிய மொழிகளில் கிடைக்கிறது. Google Docs, Slides ஆகியவற்றில் 'ஸ்மார்ட் ரிப்ளை' அம்சம் ஆங்கில மொழியில் கிடைக்கிறது.

'ஸ்மார்ட் கம்போஸ்' & 'ஸ்மார்ட் ரிப்ளை' அம்சங்கள் பரிந்துரைகளை வழங்கும், பதில்களை அல்ல. அத்துடன் அவை எப்போதும் சரியானவற்றைப் பரிந்துரைக்கும் என்றும் சொல்ல முடியாது. பரிந்துரைகளை வழங்க, இரண்டு அம்சங்களும் மெஷின் லேர்னிங்கைப் பயன்படுத்துகின்றன.

Google Docs, Slides, Sheets, Drawings ஆகியவற்றில் ஸ்மார்ட் கம்போஸ் அம்சம்

Google Docs, Slides, Sheets, Drawings ஆகியவற்றில் உள்ள ஆவணங்களில் விரைவாகவும் மிக எளிதாகவும் பணியாற்ற ஸ்மார்ட் கம்போஸ் அம்சத்தைப் பயன்படுத்தலாம்.
Google Slides, Drawings ஆகியவற்றில் கருத்து தெரிவிக்கும்போதும் ‘ஸ்மார்ட் கம்போஸ்’ அம்சத்தைப் பயன்படுத்தலாம்.

ஸ்மார்ட் கம்போஸை இயக்குதல்/முடக்குதல்

  1. ஒரு ஃபைலைத் திறக்கவும். 
  2. மேற்பகுதியில் உள்ள கருவிகள்அதன் பிறகுவிருப்பத்தேர்வுகள் என்பதைக் கிளிக் செய்யவும். 
  3. ஸ்மார்ட் கம்போஸை இயக்க/முடக்க, ஸ்மார்ட் கம்போஸ் பரிந்துரைகளைக் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. சரி என்பதைக் கிளிக் செய்யவும்.
உதவிக்குறிப்பு: Google Docsஸில் ‘ஸ்மார்ட் கம்போஸ்’ அம்சத்தை முடக்கினால் திருத்துவதற்கான முதன்மைச் சாளரத்திலோ கருத்துகளிலோ ஸ்மார்ட் கம்போஸ் பரிந்துரைகள் காட்டப்படாது. Google Sheetsஸில் ‘ஸ்மார்ட் கம்போஸ்’ அம்சத்தை முடக்க முடியாது.

பரிந்துரையை ஏற்றுக்கொள்ளுதல்/நிராகரித்தல்

ஸ்மார்ட் கம்போஸ் பரிந்துரையை ஏற்க:

  • Tab விசையை அழுத்தவும்
  • வலது அம்புக்குறி விசையை அழுத்தவும்
  • Android/iOS சாதனத்தில்: பரிந்துரைக்கப்படும் உரையை வலதுபுறம் ஸ்வைப் செய்யவும்
ஸ்மார்ட் கம்போஸ் பரிந்துரையை நிராகரிக்க உள்ளிடுதலைத் தொடரவும்.

Google Docs, Slides ஆகியவற்றில் ஸ்மார்ட் ரிப்ளை அம்சத்தைப் பயன்படுத்துதல்

Google Docs, Slides ஆகியவற்றில் கருத்துகளுக்குப் பதில் அளிக்கும்போது 'ஸ்மார்ட் ரிப்ளை' அம்சத்தைப் பயன்படுத்தி நேரத்தை மிச்சப்படுத்தலாம்.

ஸ்மார்ட் ரிப்ளை அம்சத்தை இயக்குதல்/முடக்குதல்

  1. ஒரு ஃபைலைத் திறக்கவும். 
  2. மேலே உள்ள கருவிகள்அதன் பிறகுவிருப்பத்தேர்வுகள் என்பதைக் கிளிக் செய்யவும். 
  3. ஸ்மார்ட் ரிப்ளையை இயக்க/முடக்க, ஸ்மார்ட் ரிப்ளை பரிந்துரைகளைக் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. சரி என்பதைக் கிளிக் செய்யவும்.

உதவிக்குறிப்பு: ஸ்மார்ட் ரிப்ளை அம்சத்தை முடக்கினால் கருத்துகளில் ஸ்மார்ட் ரிப்ளை பரிந்துரைகள் காட்டப்படாது.

பரிந்துரைக்கப்படும் பதிலை ஏற்றுக்கொள்ளுதல்/நிராகரித்தல்

ஸ்மார்ட் ரிப்ளை பரிந்துரையை ஏற்றுக்கொள்ள:

  • பரிந்துரையின் மீது கிளிக் செய்யவும்
  • ரிப்ளை பாக்ஸை ஃபோகஸ் செய்துவிட்டு Tab பட்டனை அழுத்தி பரிந்துரையைத் தேர்வுசெய்த பின்னர் Enter பட்டனை அழுத்தவும்
  • ஸ்கிரீன் ரீடரைப் பயன்படுத்துபவர்கள் குரல்வழி வழிகாட்டல்களைப் பின்பற்றவும்

ஸ்மார்ட் ரிப்ளை பரிந்துரையை நிராகரிக்க, ரிப்ளை பாக்ஸில் வேறு ஏதேனும் வார்த்தையை டைப் செய்யவும்.

மெஷின் லேர்னிங் குறித்த அறிமுகம்

மொழியைப் புரிந்துகொள்ளும் மாதிரிகள் கோடிக்கணக்கான பொதுவான சொற்றொடர்களையும் வாக்கியங்களையும் பயன்படுத்தி உலகைப் பற்றித் தானாகப் புரிந்துகொண்டாலும் மனிதனின் அறிவாற்றல் சார்ந்த வேறுபாடுகளையும் பிரதிபலிக்கின்றன. இதைப் பற்றித் தெரிந்துகொள்வது நல்ல தொடக்கமாகும், அத்துடன் இதை எப்படிக் கையாள்வது என்பது குறித்த உரையாடலும் செயலிலுள்ளது. அனைவருக்கும் நன்றாக வேலை செய்யும், நோக்கமல்லாத வேறுபாட்டையும் தீவிரத்தன்மையைக் குறைக்கும் யுக்திகளையும் தொடர்ந்து ஆராயும் தயாரிப்புகளை உருவாக்க Google கடமைப்பட்டுள்ளது.
true
Visit the Learning Center

Using Google products, like Google Docs, at work or school? Try powerful tips, tutorials, and templates. Learn to work on Office files without installing Office, create dynamic project plans and team calendars, auto-organize your inbox, and more.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
15554649637989545586
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false