Microsoft Office ஃபைல்களில் பணியாற்றுதல்

Google Driveவில் Office ஃபைல்களில் பணியாற்ற இரண்டு வெவ்வேறு வழிகள் உள்ளன:
  • Office ஃபைல்களைப் பதிவேற்றி இணையத்தில் Google Drive, Docs, Sheets அல்லது Slides மூலம் பணியாற்றலாம்.
  • Drive for desktop ஆப்ஸைப் பயன்படுத்தி, Office ஃபைல்களில் நிகழ்நேரப் பங்கேற்பு அம்சத்தின் மூலம் பணியாற்றலாம். பணி அல்லது பள்ளிக் கணக்கை வைத்திருக்கும் Windows பயனர்கள் Microsoft Outlook மூலமாகவும் ஃபைல்களை அனுப்பலாம் சேமிக்கலாம்.

இணையத்தில் Google Drive, Docs, Sheets, Slides ஆகியவற்றின் மூலம் Microsoft Office ஃபைல்களில் பணியாற்றுதல்

Office உடன் உங்களால் இவற்றைச் செய்ய முடியும்:

 
Google Driveவில் திறத்தல், திருத்துதல் மற்றும் Office ஃபைல்களாகச் சேமித்தல்

Office ஃபைல்களை Google Driveவில் பதிவேற்றும்போது Google Docs, Sheets, Slides ஆகியவற்றைப் பயன்படுத்தி அவற்றில் உங்களால் நேரடியாகத் திருத்தங்களைச் செய்யவும், கருத்து தெரிவிக்கவும், கூட்டுப்பணி செய்யவும் முடியும்.

மாற்றங்கள் அனைத்தும் ஃபைலில் அதன் அசல் Office வடிவமைப்பில் தானாகவே சேமிக்கப்படும். 'Office எடிட்டிங்' அம்சத்தைப் பயன்படுத்துவது எப்படி எனத் தெரிந்துகொள்ளுங்கள்.

Office ஃபைல்களை Google Docs, Sheets அல்லது Slides ஃபைல்களாக மாற்றுதல்

செருகு நிரல்கள், ஆப்ஸ் ஸ்கிரிப்ட்டுகள், பாதுகாக்கப்பட்ட வரம்புகள், மொழிபெயர்ப்பு விருப்பங்கள் போன்றவற்றைப் பயன்படுத்த விரும்பினால் Office ஃபைலை Google Docs, Sheets அல்லது Slides ஃபைல்களாக மாற்றிக்கொள்ளலாம்.

மாற்றும்போது, உங்கள் Office ஃபைல் நகலெடுக்கப்படும். Office ஃபைலை மாற்றுவது எப்படி எனத் தெரிந்துகொள்ளுங்கள்.

Google Drive மாதிரிக்காட்சியில் Office ஃபைல்களில் கருத்து தெரிவித்தல்
அசல் ஃபைலை மாற்றாமல் Google Drive மாதிரிக்காட்சியில் Office ஃபைல்கள், .pdfகள், படங்கள் மற்றும் பிற ஃபைல்களில் உங்கள் கருத்துகளைப் படிக்கவும் கருத்து தெரிவிக்கவும் முடியும். Google Driveவில் உள்ள Office ஃபைல்களில் கருத்து தெரிவிப்பது எப்படி எனத் தெரிந்துகொள்ளுங்கள்.
Chrome நீட்டிப்பின் மூலம் Office ஃபைல்களைப் பயன்படுத்துதல்

முக்கியம்: இணக்கத்தன்மைச் சிக்கல்களைத் தவிர்க்க, Office எடிட்டிங் பயன்முறையில் ஃபைலைத் திறந்தால் Chrome நீட்டிப்பை முடக்கவும்.

Office-ஐ ஆதரிக்கும் பயன்முறை என்னும் Google Chrome உலாவி நீட்டிப்பைப் பயன்படுத்தி உங்களால் Office ஃபைல்களைத் திறக்கவும் திருத்தவும் முடியும். Office-ஐ ஆதரிக்கும் பயன்முறையில் திருத்துவது எப்படி எனத் தெரிந்துகொள்ளுங்கள்.

Drive for desktop மூலம் Microsoft Office ஃபைல்களைப் பயன்படுத்துதல்

Office உடன் Drive for desktop ஆப்ஸைப் பயன்படுத்தும்போது, உங்களால் இவற்றைச் செய்ய முடியும்:

Officeஸில் பணியாற்றுதல் & Google Driveவில் ஃபைல்களை ஒத்திசைத்தல்

முக்கியம்: Officeஸில் உங்கள் ஃபைலில் நீங்கள் செய்யும் மாற்றங்கள் Google Driveவில் ஒத்திசைக்கப்படும்.

கம்ப்யூட்டரில் Drive for desktop மூலம் Google Driveவில் உள்ள ஃபைல்களைக் கண்டறிந்து திறக்க முடியும். Office ஃபைல்களை Driveவிற்கு நகர்த்தியபின் Officeஸில் அந்த ஃபைல்களில் நீங்கள் தொடர்ந்து பணியாற்றலாம், மாற்றங்களை Google Driveவில் சேமிக்கலாம்.

  1. கம்ப்யூட்டரில் Google Drive for desktop ஆப்ஸை நிறுவவும்.
  2. உங்கள் Office ஃபைலை Google Drive ஃபோல்டரில் சேர்க்கவும்.
  3. Office ஃபைலின் மீது இரு கிளிக் செய்யவும்.
  4. உங்கள் ஃபைலில் மாற்றங்களைச் செய்யவும்.
பிறருடன் இணைந்து நிகழ்நேரத்தில் Office ஃபைல்களில் பணியாற்றுதல்

Microsoft Office 2010 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்புகளில் Drive for desktop ஆப்ஸைப் பயன்படுத்தும்போது, Office ஃபைல்களுக்கான நிகழ்நேரப் பங்கேற்பு அம்சம் மூலம் பதிப்புச் சிக்கல்கள் இன்றி ஒரே ஃபைல்களில் பல பேர் பணியாற்றலாம்.

Office ஃபைலை Drive for desktop ஆப்ஸில் சேமித்து 'நிகழ்நேரப் பங்கேற்பு' அம்சத்தை இயக்கியுள்ளவர்களுடன் அதைப் பகிர்ந்தால், யாராவது அதில் மாற்றங்களைச் செய்யும்போது ஒரு விழிப்பூட்டலைப் பெறுவீர்கள்.

  1. கம்ப்யூட்டரில் Drive for desktop ஆப்ஸைத் திறக்கவும்.
  2. பகிர்ந்த ஃபைலை Word, Excel, PowerPoint போன்றவற்றில் திறக்கவும்.
  3. கீழே வலதுபுறத்தில் நிகழ்நேரப் பங்கேற்பின் நிலை காட்டப்படும். இந்த நிலையின் அடிப்படையில், பின்வரும் விருப்பங்களில் ஒன்று காட்டப்படும்:
    • இப்போது திருத்தலாம்: நீங்கள் ஃபைலில் திருத்தங்களைச் செய்யலாம்.
    • திருத்த காத்திருங்கள்: நீங்கள் இன்னமும் ஃபைலைத் திருத்த முடியாது.
      • ஃபைலை எப்போது திருத்தலாம் என்பதற்கான அறிவிப்பைப் பெற, திருத்தக்கூடியதாக மாறும்போது எனக்குத் தெரிவி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
      • ஃபைலை யார் திருத்துகிறார்கள் அல்லது பார்க்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிய, பட்டியலில் உள்ள ஒருவரின் பெயரைக் கிளிக் செய்யவும்.
    • புதிய பதிப்பு உருவாக்கப்பட்டது: புதிய பதிப்பை யாரோ ஒருவர் உருவாக்கியுள்ளார். புதிய பதிப்பைப் பெற, சமீபத்திய பதிப்பைப் பெறுக என்பதைக் கிளிக் செய்யவும். 
      • உங்கள் பதிப்பையும் சமீபத்திய பதிப்பையும் அருகருகே வைத்து ஒப்பிட்டுப் பார்க்க மாதிரிக்காட்சி என்பதைக் கிளிக் செய்யவும்.
      • ஒரே நேரத்தில் பல பேர் Office ஃபைலைத் திருத்தும்போது அதற்கான புதிய பதிப்புகள் உருவாக்கப்படுகின்றன. அந்த மாற்றங்களை நீங்கள் ஒருங்கமைத்துக் கொள்ள வேண்டும்.

MacOSஸில் நிகழ்நேரப் பங்கேற்பை இயக்குதல்

macOSஸில் Drive for desktop ஆப்ஸைப் பயன்படுத்தினால், திருத்தக்கூடிய மற்றவர்களுடன் நிகழ்நேரத்தில் கூட்டுப்பணி செய்ய நீங்கள் சிஸ்டம் அனுமதிகளை மாற்ற வேண்டும்:

  1. Macகில் சிஸ்டத்தின் விருப்பத்தேர்வுகள் என்பதைக் கிளிக் செய்து அதன் பிறகு பாதுகாப்பு & தனியுரிமை அதன் பிறகு தனியுரிமை அதன் பிறகு அணுகலம்சங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. கீழ் இடதுபுறத்தில் உள்ள பூட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. "Drive for desktop" என்பதற்கு அடுத்துள்ள பெட்டியைத் தேர்வுசெய்யவும்.

நிகழ்நேரப் பங்கேற்பை முடக்குதல்

நிகழ்நேரப் பங்கேற்பு தானாகவே இயக்கப்பட்டிருக்கும். அத்துடன் அது Drive for desktop ஆப்ஸில் Word, Excel அல்லது PowerPoint ஃபைல்களில் யாராவது திருத்தங்களைச் செய்தால் அதுகுறித்த அறிவிப்பை உங்களுக்கு அனுப்பும். நிகழ்நேரத்தில் பிறருடன் இணைந்து Office ஃபைல்களில் பணியாற்றுவது எப்படி எனத் தெரிந்துகொள்ளுங்கள். நிகழ்நேரப் பங்கேற்பு அம்சத்தை முடக்க: 

  1. கம்ப்யூட்டரில் Drive for desktop மெனு ஐகானை Drive நேரடி ஒத்திசைவு கிளிக் செய்யவும்.
  2. அமைப்புகள் அமைப்புகள் அதன் பிறகு விருப்பத்தேர்வுகள் அதன் பிறகு மேம்பட்ட அமைப்புகள் அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. "Microsoft Officeஸில் நிகழ்நேரப் பங்கேற்பு" என்பதற்குக் கீழ் உள்ள பெட்டியைத் தேர்வுநீக்கவும்.
  4. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
Microsoft Outlook மூலம் ஃபைல்களை அனுப்புதல் மற்றும் சேமித்தல்

பணி அல்லது பள்ளிக் கணக்கின் மூலம் Windowsஸில் நீங்கள் Outlookகைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், Drive for desktop உடன் உங்களால் இணைப்புகளை அனுப்பவும் சேமிக்கவும் முடியும்.

Driveவில் இருந்து ஃபைலை அனுப்புதல்

  1. கம்ப்யூட்டரில், Outlook ஆப்ஸின் மேல்புறத்தில் உள்ள புதிய மின்னஞ்சல் என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. இயக்ககத்தைப் பயன்படுத்தி, ஃபைல்களைச் செருகு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. இவற்றில் ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்:
    • இணைப்பாக அனுப்புவதற்கு, Drive இணைப்பாகச் செருகு என்பதைக் கிளிக் செய்யவும்.
    • ஃபைலை இணைக்க, இணைப்பாகச் செருகு என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. அனுப்ப அல்லது இணைக்க விரும்பும் ஃபைலைத் தேர்வுசெய்யவும்.
  5. தேர்ந்தெடு என்பதைக் கிளிக் செய்யவும்.

அக இணைப்பாக அனுப்புதல்

  1. கம்ப்யூட்டரில், Outlook ஆப்ஸின் மேல்புறத்தில் உள்ள புதிய மின்னஞ்சல் என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. ஃபைலை இணை என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. அனுப்ப விரும்பும் ஃபைலைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. சரி என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. ஃபைலைச் சேமிக்க அறிவிப்பைப் பின்பற்றவும்.

உதவிக்குறிப்பு: உங்கள் ஃபைல் மின்னஞ்சலில் அனுப்ப முடியாத அளவிற்கு மிகப் பெரிதாக இருந்தால், Google Driveவில் ஃபைலுக்கான இணைப்பை அனுப்பவும்.

Microsoft Outlook தேவைகள்

Drive for desktop இவற்றை ஆதரிக்கும்:

  • Microsoft Outlook 2010 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பு
  • Windowsஸில் இருக்கும் Microsoft Outlook

தொடர்புடைய தகவல்கள்

 

true
Visit the Learning Center

Using Google products, like Google Docs, at work or school? Try powerful tips, tutorials, and templates. Learn to work on Office files without installing Office, create dynamic project plans and team calendars, auto-organize your inbox, and more.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
Google ஆப்ஸ்
முதன்மை மெனு
13739169183740766266
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false