வசனங்களுடன் ஸ்லைடுகளின் ஸ்கிரீனைப் பகிர்தல்

ஸ்லைடுகள் ஸ்கிரீனைப் பகிரும்போது, பேசுபவரின் வார்த்தைகளை நிகழ்நேரத்தில் காட்ட தானியங்கி வசனங்களை இயக்கலாம்.

பரிந்துரைக்கப்படும் உலாவியும் ஸ்கிரீன் ரீடர்களும்

Chrome உலாவியையும் இவற்றையும் டாக்ஸ் எடிட்டர் பரிந்துரைக்கிறது:

  • Windowsஸில் NVDA அல்லது JAWS
  • ChromeOSஸில் ChromeVox
  • MacOSஸில் VoiceOver

படி 1: உங்கள் மைக்ரோஃபோனை அமைத்தல்

Google Slidesஸில் வசனங்களைப் பயன்படுத்த, கம்ப்யூட்டரின் மைக்ரோஃபோன் ஆன் செய்யப்பட்டிருக்க வேண்டும். மேலும் அது சரியாக வேலை செய்ய வேண்டும்.

சாதனங்களும் மைக்ரோஃபோன்களும் மாறுபடலாம், வழிமுறைகளுக்கு உங்கள் கம்ப்யூட்டரின் வழிகாட்டியைப் பார்க்கவும். மைக்ரோஃபோன் அமைப்புகள் பொதுவாக Macகில் சிஸ்டம் விருப்பத்தேர்வுகள் என்பதிலோ PCயில் கட்டுப்பாட்டுப் பலகம் என்பதிலோ இருக்கும்.

கம்ப்யூட்டரின் மைக்ரோஃபோன் அல்லது கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்டுள்ள வெளிப்புற மைக்ரோஃபோனை Google Slides பயன்படுத்துகிறது.

படி 2: வசனங்களுடன் வழங்குதல்

  1. இணையத்துடன் இணைக்கவும்.
  2. விளக்கக்காட்சியை Google Slidesஸில் திறக்கவும்.
  3. ஸ்கிரீனைப் பகிர, ஸ்கிரீனைப் பகிர் என்பதைக் கிளிக் செய்யவும் அல்லது உலாவிக்கான ஷார்ட்கட்டை அழுத்தவும்:
    • Chrome OS: Ctrl + Search + 5
    • Windows: Ctrl + F5
    • Mac: ⌘ + Shift + Enter
  4. பகிரப்படும் ஸ்கிரீனின் கீழ் இடதுபுறத்தில் உள்ள மேலும் விருப்பங்கள் அதன் பிறகு வசனங்களுக்கான விருப்பத்தேர்வுகள் அதன் பிறகு வசனங்களைக் காட்டு/மறை என்பதைக் கிளிக் செய்யவும் அல்லது உலாவிக்கான ஷார்ட்கட்டை அழுத்தவும்:
    • Chrome OS அல்லது Windows: Ctrl + Shift + c
    • Mac: ⌘ + Shift + c
  5. நீங்கள் பேசப் பேச, ஸ்கிரீனின் கீழ் பகுதியில் வசனங்கள் காட்டப்படும். வசனங்களில் நிறுத்தற்குறிகள் இருக்காது.
  6. உரையின் நிலையையோ அளவையோ மாற்ற “CC” என்பதற்கு அடுத்துள்ள கீழ் தோன்றும் மெனுவைக் கீழ்நோக்கிய அம்புக்குறி கிளிக் செய்யவும்.
  7. வசனங்களை முடக்க, CC என்பதைக் கிளிக் செய்யவும் அல்லது உலாவிக்கான ஷார்ட்கட்டை அழுத்தவும்.
    • Chrome OS அல்லது Windows: Ctrl + Shift + c
    • Mac: ⌘ + Shift + c

உதவிக்குறிப்பு: வசனங்கள் சேமிக்கப்படாது. 

வசனங்களைப் பயன்படுத்துவதற்கான உதவிக்குறிப்புகள் 

  • வீடியோ கான்ஃபிரன்ஸிங் மென்பொருளில் (Google Meet போன்றவை) ஸ்லைடுகளை வழங்கினால், பகிரப்பட்ட திரையில் வசனங்கள் காண்பிக்கப்படும். உங்கள் பார்வையாளர்களுக்கான எதிர்பார்ப்புகளை முன்கூட்டியே அமைப்பதற்கு, வசனங்கள் Google Slidesஸில் இருந்து வருகின்றன வீடியோ கான்ஃபிரன்ஸிங் மென்பொருளிலிருந்து அல்ல என்றும், பேச்சாளரின் குரல் மட்டுமே வசனங்களாகக் காட்டப்படுகிறது என்றும் அவர்களுக்குச் சொல்வது நல்லது.
  • வசனங்களைப் பார்ப்பதால் சிலரின் கவனம் திசைதிரும்புவதாக இருக்கலாம். எனவே வசனங்களை இயக்குவதற்கு முன்பு உங்கள் பார்வையாளர்களிடம் கேளுங்கள்.
  • உங்கள் கம்ப்யூட்டரில் 30 நிமிடங்களுக்கு எந்தச் செயல்பாடும் இல்லை என்றால் வசனங்களும் உங்கள் மைக்ரோஃபோனும் தானாகவே முடக்கப்படும். 

வசனங்களைப் பிழையறிந்து திருத்துதல்

வசனங்கள் காட்டப்படவில்லை என்றால், இந்த உதவிக்குறிப்புகளை முயன்று பார்க்கவும்: 

  • பின்புல இரைச்சலைக் குறைக்கவும் அல்லது அமைதியான அறைக்குச் செல்லவும்.
  • உங்கள் சிஸ்டம் மற்றும் உலாவி விருப்பத்தேர்வுகளில், உங்கள் மைக்ரோஃபோன் அமைப்புகளைச் சரிபார்க்கவும்.
  • வெளிப்புற மைக்ரோஃபோனைப் பயன்படுத்தவும். 
  • உங்கள் மைக்ரோஃபோன் இணைக்கப்பட்டிருப்பதையும், வேறெந்த ஆப்ஸும் அதைப் பயன்படுத்தவில்லை என்பதையும் சரிபார்க்கவும்.
  • உங்கள் மைக்ரோஃபோனில் உள்ளீட்டு ஒலியை மாற்றவும்.
  • கம்ப்யூட்டரை மீண்டும் தொடங்கவும்.
  • உங்கள் உலாவியின் தற்காலிகச் சேமிப்பை அழிக்கவும்.

உதவிக்குறிப்பு: வசனத்தின் வார்த்தைகள் மெஷின் லேர்னிங் மூலம் வழங்கப்படுகின்றன. இது பேசுபவரின் ஆடியோ உள்ளீட்டைப் பொறுத்தது. பேசுபவரின் உச்சரிப்பு, குரல் ஏற்ற இறக்கம், ஒலிவேறுபாடு ஆகியவை இதில் அடங்கும். மொழியைப் புரிந்துகொள்ளும் மாடல்கள், பேசப்படும் வார்த்தைகளைத் தானாக எழுத்தாக்கம் செய்வதற்காகக் கோடிக்கணக்கான பொதுச் சொற்றொடர்களையும் வாக்கியங்களையும் பயன்படுத்துவதால் மனித அறிவாற்றல் சார்புத் தன்மைகளையும் அவை பிரதிபலிக்கலாம். இதன் காரணமாக, பேசுபவரின் வார்த்தைகளை முழுமையாகவும் துல்லியமாகவும் வசனங்கள் காட்டாமல் போகலாம். அனைவருக்கும் ஏற்ற சிறந்த தயாரிப்புகளை உருவாக்க Google உறுதி கொண்டுள்ளது. தற்செயலாக நிகழும் வேறுபாடுகளையும், அவற்றைக் குறைக்கும் உத்திகளையும், தரத்தை மேம்படுத்துவதற்கான வழிகளையும் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறோம்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
1467066347741398570
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false