விளக்கப்படத்தின் அச்சுகளைத் திருத்துதல்

உங்கள் பிசினஸிற்கு மேம்பட்ட Google Workspace அம்சங்கள் தேவையா?

இன்றே Google Workspaceஸைப் பயன்படுத்திப் பாருங்கள்!

இரண்டாவது Y அச்சைச் சேர்த்தல்

கோடு, பரப்பு அல்லது நெடுவரிசை விளக்கப்படத்தில் இரண்டாவது Y அச்சைச் சேர்க்கலாம்.

  1. கம்ப்யூட்டரில் Google Sheetsஸில் ஒரு விரிதாளைத் திறக்கவும்.
  2. மாற்ற விரும்பும் விளக்கப்படத்தின் மீது இரு கிளிக் செய்யவும்.
  3. வலதுபுறத்தில் பிரத்தியேகமாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. தொடர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. கட்டாயமல்ல "இதற்குப் பயன்படுத்து" என்பதற்கு அருகில், வலது அச்சில் காண்பிக்க விரும்பும் தரவுத் தொடரைத் தேர்வு செய்யவும்.
  6. "அச்சு" என்பதற்குக் கீழே, வலது அச்சு என்பதைத் தேர்வு செய்யவும்.
  7. அச்சைப் பிரத்தியேகமாக்க, வலது செங்குத்து அச்சு என்பதைக் கிளிக் செய்யவும். அதன்பிறகு மாற்றங்களைச் செய்யவும்.

உதவிக்குறிப்பு: இரண்டாவதாக ஒரு X-அச்சைச் சேர்க்க முடியாது, ஆனால் தொடர் தொகுப்புகளைச் சேர்க்கலாம்.

விளக்கப்படத்தில் வரிசைகளையும் நெடுவரிசைகளையும் மாற்றுதல்

  1. கம்ப்யூட்டரில் Google Sheetsஸில் ஒரு விரிதாளைத் திறக்கவும்.
  2. மாற்ற விரும்பும் விளக்கப்படத்தின் மீது இரு கிளிக் செய்யவும்.
  3. வலதுபுறத்தில் உள்ள அமைவு என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. வரிசைகள் / நெடுவரிசைகளை மாற்று என்பதைக் கிளிக் செய்யவும்.

அச்சுகளைப் பிரத்தியேகமாக்குதல்

செங்குத்து அச்சை மாற்றுதல்

லேபிள்களை வடிவமைக்கலாம், குறைந்தபட்ச / அதிகபட்ச மதிப்புகளை அமைக்கலாம், அளவுகோலை மாற்றலாம்.

  1. கம்ப்யூட்டரில் Google Sheetsஸில் ஒரு விரிதாளைத் திறக்கவும்.
  2. மாற்ற விரும்பும் விளக்கப்படத்தின் மீது இரு கிளிக் செய்யவும்.
  3. வலதுபுறத்தில் பிரத்தியேகமாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. செங்குத்து அச்சு என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. விரும்பும் மாற்றங்களைச் செய்யவும்.

உதவிக்குறிப்பு: செங்குத்து அச்சுக் கோட்டை மறைப்பதற்கு, "அச்சுக் கோட்டை காட்டு" என்பதற்கு அடுத்துள்ள பெட்டியைத் தேர்வுநீக்கவும்.

கிடைமட்ட அச்சில் எந்தத் தரவைக் காட்ட வேண்டும் என்பதைத் தேர்வு செய்தல்
  1. கம்ப்யூட்டரில் Google Sheetsஸில் ஒரு விரிதாளைத் திறக்கவும்.
  2. விளக்கப்படத்தில் சேர்க்க விரும்பும் கலங்களைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. செருகு அதன் பிறகு விளக்கப்படம் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. வலதுபுறத்தில் உள்ள அமைவு என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. "x-அச்சு" என்பதற்கு அருகில் உள்ள பெட்டியில் மேலும் மேலும் அதன் பிறகு திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. செங்குத்து அச்சில் காட்ட விரும்பும் கலங்களைத் தேர்ந்தெடுக்கவும்.
  7. சரி என்பதைக் கிளிக் செய்யவும்.
கிடைமட்ட அச்சை மாற்றுதல்

லேபிள்களை வடிவமைக்கலாம், அச்சு வரிசையைத் தலைகீழாக்கலாம்.

உதவிக்குறிப்பு: விளக்கப்படத்தில் நேரத் தொடர் அல்லது எண் தரவு இருந்தால், குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச மதிப்பையும் மாற்றிக் கொள்ளலாம்.

  1. கம்ப்யூட்டரில் Google Sheetsஸில் ஒரு விரிதாளைத் திறக்கவும்.
  2. மாற்ற விரும்பும் விளக்கப்படத்தின் மீது இரு கிளிக் செய்யவும்.
  3. வலதுபுறத்தில் பிரத்தியேகமாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. கிடைமட்ட அச்சு என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. விரும்பும் மாற்றங்களைச் செய்யவும்.

கிடைமட்ட அச்சுத் தரவுகளைக் குழுவாக்குதல்

கூடுதல் தகவல்களைக் காட்ட, கிடைமட்ட அச்சில் உள்ள நெடுவரிசைகளின் குழுக்களுக்கு லேபிள்களைச் சேர்க்கலாம்.

  1. கம்ப்யூட்டரில் Google Sheetsஸில் ஒரு விரிதாளைத் திறக்கவும்.
  2. தரவுகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட X-அச்சு நெடுவரிசை இருப்பதை உறுதிசெய்துகொள்ளவும். உதாரணம்: ஆண்டு, காலாண்டு, மாதம்.
  3. மாற்ற விரும்பும் விளக்கப்படத்தின் மீது இரு கிளிக் செய்யவும்.
  4. வலதுபுறத்தில் உள்ள அமைவு என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. “குழுவாக்குதல்” என்பதற்கு அருகிலுள்ள சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. விருப்பமான குழுவைத் தேர்வுசெய்யவும்.
  7. மேலும் குழுக்களைச் சேர்க்க சேர் என்பதை மீண்டும் கிளிக் செய்யவும்.

தொடர் தொகுப்புகளைச் சேர்த்தல் (டொமைன் தொகுப்புகள்)

தரவுத் தொகுப்புகளை அருகருகே காட்ட, உங்கள் விரிதாளுக்கும் விளக்கப்படத்திற்கும் X-அச்சு நெடுவரிசைகளைச் சேர்க்கலாம். பார் விளக்கப்படங்களுக்கு Y-அச்சு நெடுவரிசைகளையும் சேர்க்கலாம்.

  1. கம்ப்யூட்டரில் Google Sheetsஸில் ஒரு விரிதாளைத் திறக்கவும்.
  2. மாற்ற விரும்பும் விளக்கப்படத்தின் மீது இரு கிளிக் செய்யவும்.
  3. வலதுபுறத்தில் உள்ள அமைவு என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. கீழே உள்ள அச்சு & தொடர் தொகுப்பைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. X-அச்சையும் தொடரையும் தேர்வுசெய்யவும்.
மேலும் தொடர் தொகுப்புகளைச் சேர்க்க, அச்சு & தொடர் தொகுப்பைச் சேர் என்பதை மீண்டும் கிளிக் செய்யவும்.

அச்சுத் தலைப்புகளையும் தேர்வுக்குறிகளையும் மாற்றுதல்

அச்சுத் தலைப்புகளைச் சேர்த்தல், திருத்துதல்
  1. கம்ப்யூட்டரில் Google Sheetsஸில் ஒரு விரிதாளைத் திறக்கவும்.
  2. மாற்ற விரும்பும் விளக்கப்படத்தின் மீது இரு கிளிக் செய்யவும்.
  3. வலதுபுறத்தில் பிரத்தியேகமாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. விளக்கப்படம் & அச்சுத் தலைப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. "வகை" என்பதற்கு அடுத்து மாற்ற விரும்பும் தலைப்பைத் தேர்வு செய்யவும்.
  6. "தலைப்பு உரை" என்பதற்குக் கீழ் தலைப்பை உள்ளிடவும்.
  7. தலைப்பிலும் எழுத்து வடிவத்திலும் மாற்றங்களைச் செய்யவும்.
டிக் குறிகளைச் சேர்த்தல் & மாற்றுதல்
  1. கம்ப்யூட்டரில் Google Sheetsஸில் ஒரு விரிதாளைத் திறக்கவும்.
  2. மாற்ற விரும்பும் விளக்கப்படத்தின் மீது இரு கிளிக் செய்யவும்.
  3. வலதுபுறத்தில் பிரத்தியேகமாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. "கட்டக்கோடுகள் மற்றும் டிக்குகள்" என்பதற்குக் கீழ், "பெரிய டிக்குகள்" என்பதற்கு அடுத்துள்ள பெட்டியைத் தேர்வுசெய்யவும்.
  • விருப்பத்திற்குட்பட்டது: "சிறிய டிக்குகள்" என்பதற்கு அடுத்துள்ள பெட்டியைத் தேர்வுசெய்து பெரிய டிக்குகளுக்கு இடையில் சிறிய டிக்குகளைப் பெறலாம்.

உதவிக்குறிப்பு: உங்கள் அச்சைப் பிரத்தியேகமாக்க, டிக்குகளின் இடைவெளி, கோட்டின் தடிமன், வண்ணம் ஆகியவற்றை மாற்றலாம்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
2771175379991903843
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false