Google Sheetsஸில் Salesforce தரவை இறக்குமதி செய்தல், திருத்துதல், ஒத்திசைத்தல்


               

உங்கள் பிசினஸிற்கு மேம்பட்ட Google Workspace அம்சங்கள் தேவையா?

இன்றே Google Workspaceஸைப் பயன்படுத்திப் பாருங்கள்!

 

 

 முக்கியமானது: இந்தச் செருகு நிரல் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது.

செருகு நிரலைப் பெறுக

Salesforce தரவை Google Sheetsஸில் இறக்குமதி செய்ய, புதுப்பிக்க அல்லது நீக்க, அதற்கான செருகு நிரலை அமைக்க வேண்டும்.

படி 1: செருகு நிரலைப் பதிவிறக்குதல்

  1. Google Sheetsஸில் தாளைத் திறக்கவும்.
  2. மேலே உள்ள நீட்டிப்புகள் அதன் பிறகு செருகு நிரல்கள் அதன் பிறகு செருகு நிரல்களைப் பெறு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. மேல் வலதுபுறத்தில் உள்ள தேடல் பட்டியில் "Salesforceஸுக்கான தரவு இணைப்பான்” என்று தேடவும்
  4. செருகு நிரலுக்கு அருகில் உள்ள “சேர் Plus என்பதைக் கிளிக் செய்யவும்.

படி 2: Salesforce உடன் இணைத்தல்

  1. இதுவரை திறக்கவில்லையெனில் Google Sheetsஸில் தாளைத் திறக்கவும்.
  2. மேலே உள்ள நீட்டிப்புகள் அதன் பிறகு Salesforceஸுக்கான தரவு இணைப்பான் அதன் பிறகு Salesforceஸில் உள்நுழை என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. தொடர்க என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. அனுமதி என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. நீங்கள் உள்நுழைய விரும்பும் Salesforce சூழலை, கீழ் தோன்றும் மெனுவில் இருந்து தேர்வு செய்யவும்.
  6. அங்கீகரி என்பதைக் கிளிக் செய்யவும்.
  7. உங்கள் Salesforce பயனர் பெயரையும் கடவுச்சொல்லையும் பயன்படுத்தி உள்நுழையவும்.

தரவை இறக்குமதி செய்தல், புதுப்பித்தல், நீக்குதல்

தரவை இறக்குமதி செய்தல்

Salesforceஸில் இருந்து தரவை நகலெடுத்து Google விரிதாளில் பயன்படுத்தலாம்.

  1. Google Sheetsஸில் தாளைத் திறக்கவும்.
  2. மேலே உள்ள நீட்டிப்புகள் அதன் பிறகு Salesforceஸுக்கான தரவு இணைப்பான் அதன் பிறகு திற என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. வலதுபுறம் உள்ள விருப்பத்தேர்வுகளில் ஒன்றைத் தேர்வுசெய்யவும்:
    • அறிக்கைகள்: ஏற்கனவே இருக்கும் Salesforce அறிக்கை ஒன்றை உங்கள் விரிதாளில் கொண்டு வரலாம்.
    • இறக்குதல்: எங்களின் வினவல் உருவாக்கும் கருவி அல்லது SOQLலைப் பயன்படுத்தி Salesforceஸில் இருந்து தரவை இறக்கலாம்.
  4. தேடல் பட்டியில் உங்கள் மூல அறிக்கை, பொருள், புலம், வடிப்பான் போன்றவற்றை உள்ளிடவும்.
    • அறிக்கைகள்: உங்கள் அறிக்கையை ஏற்கெனவே உள்ள தாளில் இறக்கும்படியோ புதிய தாளில் இறக்கும்படியோ தேர்வுசெய்யலாம்.
    • இறக்குதல்: 5 மூலப் பொருட்கள், புலங்கள், வடிப்பான்கள் வரை சேர்க்கலாம்.
  5. தரவைப் பெறுக அல்லது முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.

தரவைப் புதுப்பித்தல், நீக்குதல்

முக்கியம்: Google Sheetsஸில் நீங்கள் செய்த மாற்றங்களை உங்கள் Salesforce கணக்கில் புதுப்பிக்க அல்லது நீக்க செருகு நிரலைப் பயன்படுத்த முடியும் என்பதால் எச்சரிக்கையுடன் பயன்படுத்தவும்.

தரவைப் புதுப்பித்தல்

Google விரிதாளில் தரவைத் திருத்தலாம், செய்த மாற்றங்களை Salesforceஸில் புதுப்பிக்கலாம்.

  1. Google Sheetsஸில் தாளைத் திறக்கவும்.
  2. மேலே உள்ள நீட்டிப்புகள் அதன் பிறகு Salesforceஸுக்கான தரவு இணைப்பான் அதன் பிறகு திற என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. மாற்ற விரும்பும் தரவை இதுவரை பதிவிறக்கவில்லை என்றால் அதைச் செய்யவும். தரவை எப்படி பதிவிறக்குவது என்று அறிக.
  4. உங்கள் தரவைத் திருத்தவும்.
  5. மேலே, புதுப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. நீங்கள் புதுப்பிக்க விரும்பும் வரிசைகள், நெடுவரிசைகளைத் தனிப்படுத்தவும்.
  7. தேர்ந்தெடுத்த வரம்பைப் புதுப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.
  8. நீங்கள் புதுப்பிக்க விரும்பும் Salesforce மூலப் பொருளைத் தேர்வு செய்யவும்.
  9. ஒரு விருப்பத்தைத் தேர்வு செய்யவும்:
    • செருகு: விரிதாளில் உள்ள எல்லா தரவையும் Salesforceஸில் புதிய பதிவுகளாக ஏற்றலாம்.
    • புதுப்பி: ஏற்கனவே உள்ள Salesforce பதிவுகளைப் புதுப்பிக்கலாம்.
    • செருகுதல் அல்லது புதுப்பித்தல்: Salesforceஸில் புதிய பதிவுகளை உருவாக்கலாம் அல்லது ஏற்கெனவே உள்ள பதிவுகளைப் புதுப்பிக்கலாம்.
  10. முடிவுகள் நெடுவரிசையைத் தேர்வுசெய்யவும்.
  11. முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.

தரவைப் புதுப்பித்தல்

ஏற்கனவே Sheetsஸில் பதிவிறக்கிய அறிக்கைகளுக்கு உங்கள் தரவை கைமுறையாகப் புதுப்பிக்கலாம் அல்லது திட்டம் அமைத்துப் புதுப்பிக்கலாம்.
  1. Google Sheetsஸில் தாளைத் திறக்கவும்.

  2. மேலே உள்ள நீட்டிப்புகள் அதன் பிறகு Salesforceஸுக்கான தரவு இணைப்பான் அதன் பிறகு திற என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. வலதுபுறம் உள்ள ரெஃப்ரெஷ் செய் என்பதைக் கிளிக் செய்யவும்.

    • தானியங்குப் புதுப்பி நேரத்தை உருவாக்க உருவாக்கு அதன் பிறகு என்பதைக் கிளிக் செய்து கீழ்தோன்றும் மெனுவில் இருந்து நேர இடைவெளியை (4, 8 அல்லது 24 மணிநேரம்) தேர்வு செய்து அதன் பிறகு உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

    • தரவை ஒருமுறை கைமுறையாகப் புதுப்பிக்க, புதுப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.

தரவை நீக்கு

முக்கியம்: Sheetsஸில் நீங்கள் தனிப்படுத்திய பதிவுகளை Salesforceஸில் இருந்து இந்த அம்சம் நீக்கும்; எச்சரிக்கையுடன் பயன்படுத்தவும். நீக்கப்பட்ட தரவை எவ்வாறு மீட்டெடுப்பது என்பதை அறிய Salesforce உதவி மையத்தைப் பார்வையிடவும்.

  1. Google Sheetsஸில் தாளைத் திறக்கவும்.
  2. மேலே உள்ள நீட்டிப்புகள் அதன் பிறகு Salesforceஸுக்கான தரவு இணைப்பான் அதன் பிறகு திற என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. நீங்கள் மாற்ற விரும்பும் தரவை பதிவிறக்கவும். தரவை எப்படி பதிவிறக்குவது என்று அறிக.
  4. செருகு நிரல் பெட்டியில் நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. நீங்கள் நீக்க விரும்பும் வரிசைகள், நெடுவரிசைகளைத் தனிப்படுத்தவும்.
  6. தேர்ந்தெடுத்த வரம்பைப் புதுப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.
  7. நீங்கள் நீக்க விரும்பும் Salesforce மூலப் பொருளைத் தேர்வு செய்யவும்.
  8. முதன்மை விசை நெடுவரிசையைத் தேர்வு செய்யவும்.
  9. நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

ஸ்கிரிப்டுகள் மற்றும் செருகு நிரல்கள் குறித்து அறிக

Google ஆப்ஸ் ஸ்கிரிப்ட் கூடுதல் விதிமுறைகளின் கீழ் செருகு நிரல்கள் இயங்குகின்றன.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
4466207207396604516
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false