கலங்களோ வரிசைகளோ நெடுவரிசைகளோ குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் பொருந்தினால் உரை அல்லது பின்னணி வண்ணத்தை மாற்றுவதற்காக அவை வடிவமைக்கப்படும். உதாரணமாக அவை குறிப்பிட்ட சொல்லையோ எண்ணையோ உள்ளடக்கியிருப்பின்.
- உங்கள் கம்ப்யூட்டரில் Google Sheetsஸில் ஒரு விரிதாளைத் திறக்கவும்.
- வடிவமைப்பு விதிகளைப் பயன்படுத்த விரும்பும் கலங்களைத் தேர்ந்தெடுக்கவும்.
- வடிவம்
நிபந்தனை வடிவமைப்பு என்பதைக் கிளிக் செய்யவும். வலதுபுறத்தில் கருவிப்பட்டி ஒன்று திறக்கும்.
- விதியை உருவாக்கவும்.
- ஒற்றை வண்ணம்: "இவ்வாறு இருந்தால் கலங்களை வடிவமை" என்பதற்குக் கீழ் நீங்கள் செயல்படுத்த விரும்பும் விதிக்கான நிபந்தனையைத் தேர்ந்தெடுக்கவும். "வடிவமைப்பு நடைக்குக்" கீழ் நிபந்தனைகள் பொருந்தும்போது எந்தக் கலம் காட்டப்பட வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- வண்ண அளவு: "மாதிரிக்காட்சிக்குக்" கீழ் வண்ண அளவைத் தேர்ந்தெடுக்கவும். பிறகு குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச மதிப்பையும் விருப்பத்தேர்வாக நடுத்தர மதிப்பையும் தேர்ந்தெடுக்கவும். மதிப்பிற்கான வகையைத் தேர்ந்தெடுக்க கீழ்நோக்கிய அம்புக்குறியைக்
கிளிக் செய்யவும்.
- முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.
எந்தெந்த மாணவர்கள் 80%க்கும் குறைவான மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர் என்பதைப் பார்ப்பதற்காகத் தேர்வு மதிப்பெண்களை ஆசிரியர் ஹைலைட் செய்ய முடியும்.
- உங்கள் கம்ப்யூட்டரில் Google Sheetsஸில் ஒரு விரிதாளைத் திறக்கவும்.
- தேர்வு மதிப்பெண்களைத் தேர்ந்தெடுக்கவும்.
- வடிவம்
நிபந்தனை வடிவமைப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
- "இவ்வாறு இருந்தால் கலங்களை வடிவமை" என்பதற்குக் கீழ் குறைவாக என்பதைக் கிளிக் செய்யவும். ஏற்கெனவே சூத்திரம் இருந்தால் அதைக் கிளிக் செய்யவும் அல்லது புதிய விதியைச் சேர்
குறைவாக என்பதைக் கிளிக் செய்யவும்.
- மதிப்பு அல்லது சூத்திரம் என்பதைக் கிளிக் செய்து 0.8 என உள்ளிடவும்.
- சிவப்பு வண்ணத்தைப் பயன்படுத்த நிரப்பு
என்பதைக் கிளிக் செய்யவும்.
- முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும். குறைவான மதிப்பெண்கள் சிவப்பு வண்ணத்தில் ஹைலைட் செய்யப்படும்.
மேம்பட்ட நிபந்தனை வடிவமைப்பைப் பயன்படுத்துதல்
பிற கலங்களில் உள்ள உள்ளடக்கங்களைப் பொறுத்து ஒன்று அல்லது அதற்கும் மேறபட்ட கலங்களில் வடிவமைப்பைப் பயன்படுத்துவதற்கு பிரத்தியேக சூத்திரங்களைப் பயன்படுத்த முடியும்.
- உங்கள் கம்ப்யூட்டரில் Google Sheetsஸில் ஒரு விரிதாளைத் திறக்கவும்.
- வடிவமைக்க விரும்பும் கலங்களைத் தேர்ந்தெடுக்கவும்.
- வடிவம்
நிபந்தனை வடிவமைப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
- "சூத்திரம் இவ்வாறு இருந்தால்" என்ற கீழ்த்தோன்றல் மெனுவிற்குக் கீழ் பிரத்தியேக சூத்திரம் இதுவாகும் என்பதைக் கிளிக் செய்யவும். ஏற்கெனவே விதி இருந்தால் அதைக் கிளிக் செய்யவும் அல்லது புதிய விதியைச் சேர்
பிரத்தியேக விதி இதுவாகும் என்பதைக் கிளிக் செய்யவும்.
- மதிப்பு அல்லது சூத்திரம் என்பதைக் கிளிக் செய்து சூத்திரத்தையும் விதிகளையும் சேர்க்கவும்.
- முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.
கவனத்திற்கு: சூத்திரங்களால் வழக்கமான குறியீட்டைப் "(='தாளின் பெயர்'!கலம்)" பயன்படுத்தி அதே தாளை மட்டுமே குறிப்பிட முடியும். சூத்திரத்தில் மற்றொரு தாளைக் குறிப்பிட INDIRECT செயல்பாட்டைப் பயன்படுத்தவும்.
எடுத்துக்காட்டு 1
தரவில் ஒரே மதிப்பு பல முறை இடம்பெறும்போது அதை ஹைலைட் செய்வதற்கு:
- உங்கள் கம்ப்யூட்டரில் Google Sheetsஸில் ஒரு விரிதாளைத் திறக்கவும்.
- வடிவமைக்க விரும்பும் வரம்பைத் தேர்ந்தெடுக்கவும். உதாரணமாக கலங்கள் A1 முதல் A100 வரை.
- வடிவம்
நிபந்தனை வடிவமைப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
- "சூத்திரம் இவ்வாறு இருந்தால்" என்ற கீழ்த்தோன்றல் மெனுவிற்குக் கீழ் பிரத்தியேக சூத்திரம் இதுவாகும் என்பதைக் கிளிக் செய்யவும். ஏற்கெனவே விதி இருந்தால் அதைக் கிளிக் செய்யவும் அல்லது புதிய விதியைச் சேர்
பிரத்தியேக விதி இதுவாகும் என்பதைக் கிளிக் செய்யவும்.
- முதல் வரிசைக்கு விதியை எழுதவும். இந்தச் சமயத்தில் விதி இவ்வாறு இருக்க வேண்டும்: "=COUNTIF($A$1:$A$100,A1)>1."
- வடிவமைப்பிற்கான பிற பண்புகளைத் தேர்ந்தெடுக்கவும்.
- முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.
எடுத்துக்காட்டு 2
ஒட்டுமொத்த வரிசையையும் அதிலுள்ள ஒரு கலத்தின் அடிப்படையில் வடிவமைப்பதற்கு:
- உங்கள் கம்ப்யூட்டரில் Google Sheetsஸில் ஒரு விரிதாளைத் திறக்கவும்.
- வடிவமைக்க விரும்பும் வரம்பைத் தேர்ந்தெடுக்கவும். உதாரணம்: நெடுவரிசைகள் A:E.
- வடிவம்
நிபந்தனை வடிவமைப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
- "சூத்திரம் இவ்வாறு இருந்தால்" என்ற கீழ்த்தோன்றல் மெனுவிற்குக் கீழ் பிரத்தியேக சூத்திரம் இதுவாகும் என்பதைக் கிளிக் செய்யவும். ஏற்கெனவே விதி இருந்தால் அதைக் கிளிக் செய்யவும் அல்லது புதிய விதியைச் சேர்
பிரத்தியேக விதி இதுவாகும் என்பதைக் கிளிக் செய்யவும்.
- முதல் வரிசைக்கு விதியை எழுதவும். உதாரணமாக ஒட்டுமொத்த வரிசையையும் பச்சை வண்ணத்தில் மாற்ற விரும்பினால் B நெடுவரிசையில் "Yes" என்ற மதிப்பு இருந்தால் "=$B1="Yes" என சூத்திரத்தை எழுதவும்.
- வடிவமைப்பிற்கான பிற பண்புகளைத் தேர்ந்தெடுக்கவும்.
- முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.
துல்லியமான -.தொடர்புடைய குறிப்பிடல்கள்
தொடர்புடைய குறிப்பிடல்களுக்குப் (A1 - B1, A2 - B2) பதிலாக துல்லியமான குறிப்பிடல்களைப் பயன்படுத்தி வடிவமைப்பை உள்ளிடுவதற்கு பெரும்பாலும் சூத்திரத்தில் உள்ள எழுத்துக்களுக்கோ எண்களுக்கோ முன்பாக டாலர் குறியைப் ($) பயன்படுத்த வேண்டும்.
பல எக்ஸ்ப்ரெஷன்களுடன் பொருந்துவதற்கு வைல்டுகார்டு எழுத்துகளைப் பயன்படுத்த முடியும். வடிவமைக்கும் போது வைல்டுகார்டு எழுத்துகளை "உரையுள்ள" அல்லது "உரையற்ற" புலங்களில் பயன்படுத்த முடியும்.
- எந்தவொரு ஒற்றை எழுத்தையும் பொருத்துவதற்கு கேள்விக்குறியைப் (?) பயன்படுத்தவும். உதாரணமாக் "a?c" என்பதை உள்ளடக்கிய உரை விதி கலங்களை "abc," என வடிவமைக்குமே தவிர "ac" எனவோ "abbc" எனவோ வடிவமைக்காது.
- பூஜ்ஜியத்தையோ (0) பல எழுத்துகளையோ பொருத்துவதற்கு நட்சத்திரக் குறியீட்டைப் பயன்படுத்தவும் (*) . உதாரணமாக உரை விதி "a*c" என்பதை உள்ளடக்கியிருந்தால் கலங்களை "abc," "ac," மற்றும் "abbc" என வடிவமைக்குமே தவிர "ab" எனவோ "ca" எனவோ வடிவமைக்காது.
- உரையில் கேள்விக்குறியையோ நட்சத்திரக் குறியையோ பொருத்துவதற்கு வைல்டுகார்டு எழுத்துகளுக்கு முன்பாக அலைகுறியைச் (~) சேர்ப்பதன் மூலம் அவற்றைத் தவிர்க்கலாம். உதாரணாமாக உரை விதி "a~?c" என உள்ளடக்கியிருந்தால் கலங்களை "a?c" என வடிவமைக்குமே தவிர "abc" எனவோ "a~?c" எனவோ வடிவமைக்காது.
குறிப்புகள்:
- விதியை அகற்றுவதற்கு விதியின் மீது கர்சரை வைத்து அகற்று
என்பதைக் கிளிக் செய்யவும்.
- கீழே பட்டியலிடப்பட்டுள்ள வரிசையின்படி விதிகள் மதிப்பீடு செய்யப்படும். சரி என கண்டறியப்படும் முதல் விதி கலத்தின் அல்லது வரம்பின் வடிவமைப்பை வரையறுக்கும். விதிகளை மறுவரிசைப்படுத்த நகர்த்து என்பதைத் தட்டி அவற்றை இழுக்கவும்.
- வடிவமைப்பு விதிகளைக் கொண்ட கலத்திலிருந்தோ வரம்பிலிருந்தோ நகலெடுத்து ஒட்டினால் தரவை நகலெடுத்து ஒட்டும்போது இந்த விதிகள் பயன்படுத்தப்படும்.