செக்பாக்ஸ்களைச் சேர்த்தல் & பயன்படுத்தல்

விரிதாளில் உள்ள கலங்களுக்குச் செக்பாக்ஸ்களைச் சேர்க்கலாம். திட்டப்பணியைக் கண்காணிப்பது, வருகையைப் பதிவுசெய்வது, செய்யவேண்டியவை பட்டியலில் தேர்வுசெய்வது போன்ற பல நோக்கங்களுக்காகச் செக்பாக்ஸ்களைப் பயன்படுத்தலாம்.

செக்பாக்ஸ்களைச் செருகுதல்

  1. உங்கள் கம்ப்யூட்டரில், Google Sheets இல் விரிதாளைத் திறக்கவும்.
  2. செக்பாக்ஸ்கள் தேவைப்படும் கலங்களைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. மேலே உள்ள மெனுவில், செருகு அதன் பிறகு செக்பாக்ஸ் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. செக்பாக்ஸ்களை அகற்ற, அகற்ற விரும்பும் செக்பாக்ஸ்களைத் தேர்ந்தெடுத்து, நீக்கு என்பதை அழுத்தவும்.

குறிப்பு: விளக்கப்படங்கள், வடிப்பான்கள், பைவட் டேபிள்கள், சார்புகள் ஆகியவற்றுடன் செக்பாக்ஸ்களைப் பயன்படுத்தலாம்.

தனிப்பயன் செக்பாக்ஸ் மதிப்புகளைச் சேர்த்தல்

தனிப்பயன் மதிப்புகளுடன் செக்பாக்ஸ்களைச் சேர்க்கலாம். எடுத்துக்காட்டாக, சரிபார்க்கப்பட்ட தனிப்பயன் மதிப்பு "ஆம்" எனவும் சரிபார்க்கப்படாத தனிப்பயன் மதிப்பு "இல்லை" எனவும் இருக்கக்கூடும்.

  1. உங்கள் கம்ப்யூட்டரில், Google Sheets இல் விரிதாளைத் திறக்கவும்.
  2. செக்பாக்ஸ்கள் தேவைப்படும் கலங்களைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. மேலே உள்ள மெனுவில், தரவு அதன் பிறகு தரவுச் சரிபார்ப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. "நிபந்தனை" என்பதற்கு அடுத்ததாக, செக்பாக்ஸ் என்பதைத் தேர்வுசெய்யவும்.
  5. தனிப்பயன் கல மதிப்புகளைப் பயன்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. "சரிபார்க்கப்பட்டது" என்பதற்கு அடுத்ததாக, மதிப்பை உள்ளிடவும்.
  7. விருப்பத்திற்குரியது: "சரிபார்க்கப்படாதது" என்பதற்கு அடுத்ததாக, மதிப்பை உள்ளிடவும்.
  8. சேமி என்பதை கிளிக் செய்யவும்.

தொடர்புடைய கட்டுரைகள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
13995504602124034569
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false