Google Sheets இல் பணிகளைத் தன்னியக்கமாக்குதல்

மேக்ரோக்களைப் பயன்படுத்தி, திரும்பத் திரும்பச் செய்யும் பணிகளைத் தன்னியக்கமாக்குவதன் மூலம் நேரத்தைச் சேமிக்கலாம்.

மேக்ரோவை உருவாக்குதல்

  1. கம்ப்யூட்டரில் sheets.google.com தளத்தில் விரிதாளைத் திறக்கவும்.
  2. மேலே உள்ள நீட்டிப்புகள் அதன் பிறகு மேக்ரோக்கள் அதன் பிறகு மேக்ரோவைப் பதிவுசெய் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. கீழே, உங்கள் மேக்ரோவிற்குப் பயன்படுத்த விரும்பும் கலக் குறிப்பின் வகையைத் தேர்வுசெய்யவும்:
    • முழுமையான குறிப்புகளைப் பயன்படுத்த: பதிவுசெய்த அதே கலத்தில் மேக்ரோ பணிகளைச் செய்யும். எடுத்துக்காட்டாக, A1 கலத்தைத் தடிமனாக்கினால், எந்தக் கலத்தில் கிளிக் செய்தாலும், A1 கலத்தை மட்டுமே தடிமனாக்கும்.
    • தொடர்புடைய குறிப்புகளைப் பயன்படுத்த: தேர்ந்தெடுத்த அல்லது அதற்கு அருகிலுள்ள கலங்களில் மேக்ரோ பணிகளைச் செய்யும். உதாரணத்திற்கு, A1, B1 கலங்களின் மதிப்பைத் தடிமனாக்கப் பதிவுசெய்தால் C1, D1 கலங்களின் மதிப்பைத் தடிமனாக்க பின்னர் மேக்ரோ பயன்படுத்தப்படும்.
  4. பதிவுசெய்ய விரும்பும் பணியை முடிக்கவும். முடித்தபிறகு, சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. மேக்ரோவிற்குப் பெயரிட்டு, பிரத்தியேக ஷார்ட்கட்டை உருவாக்கி, சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
    • கவனத்திற்கு: Google Sheetsஸில் நீங்கள் மேக்ரோவை உருவாக்கும்போது, ஒரு ஆப்ஸ் ஸ்கிரிப்ட் உருவாக்கப்படும். இந்த ஆப்ஸ் ஸ்கிரிப்ட்டை மாற்ற, மேலே உள்ள கருவிகள் அதன் பிறகு ஸ்கிரிப்ட் எடிட்டர் என்பதைக் கிளிக் செய்யவும்.

மேக்ரோவைச் செயல்படுத்த, நீட்டிப்புகள் அதன் பிறகு மேக்ரோக்கள் என்பதைக் கிளிக் செய்து அதன் பிறகு செயல்படுத்த விரும்பும் மேக்ரோவைக் கிளிக் செய்யவும்.

மேக்ரோவில் மாற்றங்களைச் செய்தல்

பெயரை மாற்றலாம், கீபோர்ட் ஷார்ட்கட்டைச் சேர்க்கலாம், ஸ்க்ரிப்டைத் திருத்தலாம் அல்லது மேக்ரோவை அகற்றலாம்.

  1. கம்ப்யூட்டரில் sheets.google.com தளத்தில் விரிதாளைத் திறக்கவும்.
  2. மேலே உள்ள நீட்டிப்புகள் அதன் பிறகு மேக்ரோக்கள் அதன் பிறகு மேக்ரோக்களை நிர்வகி என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. மாற்றங்களைச் செய்யவும். மேக்ரோவை அகற்ற, ஸ்க்ரிப்டைத் திருத்த, மேக்ரோவிற்கு அடுத்து, கூடுதல் மேலும் என்பதைக் கிளிக் செய்யவும். 
  4. புதுப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.

உங்கள் மேக்ரோவைத் திட்டமிடல்

செயல்கள், கேலெண்டர் புதுப்பிப்புகள், நேர இடைவெளிகள் அல்லது தேர்வுசெய்த நேரமும் தேதியும் ஆகிய அடிப்படையில், உங்கள் மேக்ரோவை இயக்க, அமைக்கலாம்.

  1. கம்ப்யூட்டரில் sheets.google.com தளத்தில் விரிதாளைத் திறக்கவும்.
  2. கருவிகள் அதன் பிறகு ஸ்க்ரிப்ட் திருத்தி என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. மேலே, திருத்து அதன் பிறகு தற்போதைய திட்டப்பணியின் தூண்டுதல்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. கீழ் வலதுபுறம், தூண்டுதலைச் சேர் என்பதைக் கிளிக் செய்து திட்டமிடல் விருப்பங்களைத் தேர்வு செய்யவும்.
  5. சேமி என்பதை கிளிக் செய்யவும்.

தனிப்பயன் சார்புகளை இறக்குதல்

Google ஆப்ஸ் ஸ்க்ரிப்ட் மூலம் உருவாக்கிய தனிப்பயன் சார்புகளை இறக்கலாம்.

  1. கம்ப்யூட்டரில் sheets.google.com தளத்தில் விரிதாளைத் திறக்கவும்.
  2. மேலே உள்ள நீட்டிப்புகள் அதன் பிறகு மேக்ரோக்கள் அதன் பிறகு மேக்ரோவை இறக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. இறக்க விரும்பும் ஃபங்க்ஷனிற்கு அடுத்துள்ள ஃபங்க்ஷனைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
true
Visit the Learning Center

Using Google products, like Google Docs, at work or school? Try powerful tips, tutorials, and templates. Learn to work on Office files without installing Office, create dynamic project plans and team calendars, auto-organize your inbox, and more.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
10084879180731938769
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false