வினாடி வினாக்களுக்காகப் பூட்டுப் பயன்முறையைப் பயன்படுத்துதல்

மாணவர்கள் அவர்களுடைய Chromebooks இல் வினாடிவினாவிலும் தேர்வுகளிலும் பங்கேற்கும் போது, அவர்கள் கவனத்தைச் செலுத்த உதவலாம். பூட்டுப் பயன்முறையில் மாணவர்கள் வினாடி வினாவில் பங்கேற்கும்போது, அவர்களால் பிற இணையதளங்களில் உலாவவோ வேறு ஏதேனும் ஆப்ஸைத் திறக்கவோ முடியாது.

பூட்டுப் பயன்முறை பற்றிய அறிமுகம்

'பூட்டிய நிலை' பதிலளிப்பவர்களின் மின்னஞ்சல் முகவரிகளைச் சேகரிப்பதுடன் உங்கள் டொமைனில் உள்ளவர்கள் மட்டுமே வினாடி வினாவில் கலந்துகொள்ள அனுமதிக்கும். பூட்டிய நிலையில்:

  • மாணவர்களால் பிற ஆப்ஸைப் பயன்படுத்த முடியாது. 
  • சில நீட்டிப்புகளும் கீபோர்ட் ஷார்ட்கட்களும் முடக்கப்பட்டுள்ளன.
  • மாணவர் வினாடி வினாவில் இருந்து வெளியேறினாலோ உலாவியில் வேறு ஏதேனும் பக்கத்தைத் திறந்தாலோ ஆசிரியருக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
  • மாணவர் 30 நாட்களுக்குள் மீண்டும் வினாடி வினாவைத் திறந்தால் ஆசிரியருக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
    • கவனத்திற்கு: மாணவர் வினாடி வினாவைக் கடைசியாகத் திறந்ததில் இருந்து 30 நாட்களுக்குப் பிறகு மீண்டும் திறந்தால் அறிவிப்புகள் எதுவும் அனுப்பப்படாது.
  • திட்டமிடப்பட்ட நேரங்களில் மட்டுமே உங்களால் வினாடி வினாவை அணுக முடியும்.

முக்கியம்: பூட்டிய நிலையைப் பயன்படுத்த இவை தேவை:

பூட்டுப் பயன்முறையை இயக்குதல்

  1. Google Formsஸில் வினாடி வினாவைத் திறக்கவும்.
  2. வினாடி வினாவின் மேலே உள்ள அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. “Chromebook அமைப்புகள்” என்பதற்குக் கீழே உள்ள பூட்டுப் பயன்முறை என்பதை இயக்கவும்.

பூட்டிய பயன்முறையில் அணுகல்தன்மை அம்சங்களும் நீட்டிப்புகளும்

பரிந்துரைக்கப்படும் Chromebook அணுகல்தன்மை அம்சங்கள்
  • ChromeVox (உரையிலிருந்து பேச்சு)
  • உயர் ஒளி மாறுபாட்டுப் பயன்முறை
  • முழுத்திரைப் பெரிதாக்கி
  • நிலையாகப் பொருத்திய பெரிதாக்கி
பரிந்துரைக்கப்படும் Chrome நீட்டிப்புகள்
டான் ஜான்ஸ்டனிடமிருந்து:
  • குவிஸ்பாட்: (ஆசிரியர்களுக்காக) Formsக்கான தானியங்கு வினாவிடை உருவாக்கி.
  • ஸ்நாப்&ரீட்: யோசனைகளை மொழிபெயர்க்க, விவரிக்க, ஒழுங்குபடுத்தக்கூடிய உரை ரீடர். 
  • கோ:ரைட்டர்: வார்த்தைக் கணிப்பு, பேச்சு அறிதல், மொழிபெயர்ப்பு ஆகிய அம்சங்கள் உள்ள எழுதுவதற்கான உதவிக் கருவி.
இந்தக் கருவிகளைப் பற்றி மேலும் அறிய, டான் ஜான்ஸ்டன் தளத்திற்குச் செல்லவும்.
டெக்ஸ்ட்ஹெல்ப்பிலிருந்து:
  • ஈகுவேட்ஐஓ: உங்கள் உள்ளீட்டை, கணிதச் சமன்பாடுகளாக, சூத்திரங்களாக மற்றும் பலவாறாக மாற்றும்.
  • Google Chromeக்காக படித்தல்&எழுதுதல்: பட அகராதிகள், உரைக் கணிப்பான் மற்றும் பலவற்றின் மூலம் உரையிலிருந்து பேச்சு, பேச்சிலிருந்து உரையாக மாற்றும்.

உதவிக்குறிப்பு: அணுகல்தன்மை அம்சத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லையெனில், அதற்குப் பதிலாக அணுகல்தன்மை ஷார்ட்கட்களைப் பயன்படுத்தவும்.

பூட்டிய பயன்முறையைப் பயன்படுத்த முடியாவிட்டால்

வினாடிவினாவை வழங்கும் ஆசிரியர்களுக்காக
வினாடிவினாவை எதிர்கொள்ளும் மாணவர்களுக்காக

இன்னும் வினாடிவினாவைத் தொடங்க முடியவில்லையெனில், உங்கள் ஆசிரியரைத் தொடர்புகொள்ளவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
371974034673859404
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false