பைவட் டேபிளைத் தனிப்பயனாக்குதல்


               

உங்கள் பிசினஸிற்கு மேம்பட்ட Google Workspace அம்சங்கள் தேவையா?

இன்றே Google Workspaceஸைப் பயன்படுத்திப் பாருங்கள்!

 

 

உங்கள் பைவட் டேபிள் தரவு எவ்வாறு பட்டியலிடப்படுகிறது, வரிசைப்படுத்தப்படுகிறது, தொகுக்கப்படுகிறது அல்லது வடிகட்டப்படுகிறது என்பதை மாற்றலாம்.

நெடுவரிசைகள் அல்லது வரிசைகளை ஒழுங்குபடுத்துதல், வரிசைப்படுத்துதல்

பைவட் டேபிள் வரிசை அல்லது நெடுவரிசைப் பெயர்கள் அல்லது ஒருங்கிணைந்த மதிப்புகள் ஆகியவற்றின் மூலம் உங்கள் தரவை வரிசைப்படுத்தலாம், ஒழுங்குபடுத்தலாம்.

  1. கம்ப்யூட்டரில் Google Sheetsஸில் ஒரு விரிதாளைத் திறக்கவும்.
  2. பைவட் டேபிளின் கீழே உள்ள பாப்-அப்பில் திருத்து பட்டனைக் கிளிக் செய்யவும்.
  3. "வரிசைகள்" அல்லது "நெடுவரிசைகள்" என்பதன் கீழே "ஒழுங்குபடுத்து" அல்லது "இதன்படி வரிசைப்படுத்து" என்பதன் கீழேயுள்ள அம்புக்குறியைக் கிளிக் செய்யவும்.

குறிப்பு: வரிசை அல்லது நெடுவரிசையின் மொத்தங்களைக் காட்ட, மொத்தங்களைக் காட்டு என்பதைச் சரிபார்க்கவும்.

உங்கள் பைவட் டேபிளின் தோற்றத்தை மாற்றுதல்

மேற்குறிப்பின் பெயரை மாற்றுதல்

நெடுவரிசையின் மேற்குறிப்பை மாற்ற:

  1. கம்ப்யூட்டரில் Google Sheetsஸில் ஒரு விரிதாளைத் திறக்கவும்.
  2. பைவட் டேபிளின் கீழே உள்ள பாப்-அப்பில் திருத்து பட்டனைக் கிளிக் செய்யவும்.
  3. வரிசை அல்லது நெடுவரிசையின் பெயரைக் கிளிக் செய்து புதிய பெயரை உள்ளிடவும்.

கவனத்திற்கு:

  • பைவட் அட்டவணையை உருவாக்கியபிறகு Sheetsஸில் ஒரு புலத்தின் பெயரை மாற்றினால், பைவட் அட்டவணை எடிட்டரில் புலத்தின் முந்தைய பெயரையும் அதை அடுத்து அடைப்புக் குறிகளுக்குள் புதிய பெயரையும் குறிப்பிட்டு அந்தப் புலத்தை Sheets மறுபெயரிடும். உதாரணமாக, பைவட் அட்டவணையில் ஒரு யூனிட்டுக்கான சராசரி விலை என்ற புலத்தின் பெயரை சராசரி விலை என்று மாற்றினால், பைவட் அட்டவணை எடிட்டரில் அந்தப் புலத்தில் பெயர் யூனிட்டுக்கான விலை (சராசரி விலை) என்று காட்டப்படும்.
  • குறிப்பு: "மொத்தம்" என்பதை மறுபெயரிட முடியாது.
மதிப்பைச் சதவீதமாகக் காட்டுதல்

(அக்டோபர் விற்பனை போன்ற) மதிப்பை (வருடாந்திர விற்பனை போன்ற) மொத்தத்தின் சதவீதமாகக் காட்டலாம்.

  1. கம்ப்யூட்டரில் Google Sheetsஸில் ஒரு விரிதாளைத் திறக்கவும்.
  2. பைவட் டேபிளின் கீழே உள்ள பாப்-அப்பில் திருத்து பட்டனைக் கிளிக் செய்யவும்.
  3. "மதிப்புகள்" என்பதன் கீழ் "இவ்வாறு காட்டு" என்பதன் கீழே உள்ள இயல்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. மெனுவிலிருந்து விருப்பத்தைத் தேர்வுசெய்யவும்.
தரவை ஒன்றிணைத்துக் குழுவாக்குதல்

பைவட் டேபிளில் மதிப்புகளின் தொகுப்பைத் தேர்வு செய்து, கைமுறையாக அல்லது விதியின் மூலம் ஒன்றிணைத்துக் குழுவாக்கலாம்.

  1. கம்ப்யூட்டரில் Google Sheetsஸில் ஒரு விரிதாளைத் திறக்கவும்.
  2. பைவட் டேபிளின் கீழே உள்ள பாப்-அப்பில் திருத்து பட்டனைக் கிளிக் செய்யவும்.

நீங்களே குழுவாக்க:

  1. கலங்களை வலது கிளிக் செய்து, பிறகு பைவட் குழுவை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. ஒன்றாகக் குழுவாக்க வேண்டிய கலங்களைத் தேர்ந்தெடுக்கவும்.

விதியின் மூலம் வரிசைகளை ஒன்றிணைத்துக் குழுவாக்க: 

  1. கலத்தை வலது கிளிக் செய்து, பிறகு பைவட் குழு விதியை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. எண்களுக்காக, இடைவெளி அளவைத் தேர்வுசெய்யவும். விருப்பத்திற்குரியது: உங்கள் குழுக்கள் எப்போது தொடங்கலாம், முடியலாம் எனத் தேர்வுசெய்யலாம்.
  3. முடித்தபிறகு, சரி என்பதைக் கிளிக் செய்யவும்.

தேதி அல்லது நேரம் மூலம் வரிசைகளை ஒன்றிணைத்துக் குழுவாக்க: 

  1. தேதி வடிவமைக்கப்பட்ட தரவு உள்ள கலத்தை வலது கிளிக் செய்து, பிறகு பைவட் தேதிக் குழுவை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. குழுவாக்குவதற்கான தேதி அல்லது நேர அளவைத் தேர்வுசெய்யவும்.

விருப்பத்திற்குரியது: குழு நீக்க, குழுவாக்கப்பட்டதை வலது கிளிக் செய்து பைவட் டேபிள் தரவைக் குழு நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

பைவட் டேபிளில் தரவை வடிகட்டுதல்

உங்கள் டேபிளில் காட்ட விரும்பாத தரவை மறைக்கலாம்.

  1. கம்ப்யூட்டரில் பைவட் டேபிள் உள்ள ஒரு விரிதாளைத் திறக்கவும்.
  2. பைவட் டேபிளின் கீழே உள்ள பாப்-அப்பில் திருத்து பட்டனைக் கிளிக் செய்யவும்.
  3. வலதுபுறத்தில் "வடிப்பான்கள்" என்பதற்கு அடுத்துள்ள சேர் என்பதைக் கிளிக் செய்யவும். ஒரு விருப்பத்தைத் தேர்வுசெய்யவும்.
  4. "எல்லாவற்றையும் காட்டுகிறது" என்பதற்கு அடுத்ததாக, கீழ் அம்புக்குறி கீழ்நோக்கிய அம்புக்குறி என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. வடிகட்ட விரும்பும் விதத்தைத் தேர்வுசெய்யவும்:
    • நிபந்தனையின்படி வடிகட்டு: நிபந்தனையை நீங்களே டைப் செய்யவும் அல்லது இதுபோன்ற நிபந்தனைகள் அடங்கிய பட்டியலில் இருந்து தேர்வுசெய்யவும்: கலம் காலியாக இல்லாவிட்டால், குறிப்பிட்ட எண்ணைவிடத் தரவு சிறியதாக இருந்தால், குறிப்பிட்ட எழுத்தோ சொற்றொடரோ தரவில் இடம்பெற்றிருந்தால்.
    • மதிப்புகளின்படி வடிகட்டு: மறைக்க விரும்புபவற்றைத் தேர்வுநீக்கிய பிறகு சரி என்பதைக் கிளிக் செய்யவும்.

குறிப்புகள்

  • மதிப்பின்படி வடிகட்டினால் உங்கள் மூலத்தரவைப் புதுப்பிக்கவும். பைவட் டேபிளில் அந்தத் தரவைக் காட்ட விரும்பினால் பைவட் டேபிள் வடிப்பானைப் புதுப்பிக்க வேண்டியிருக்கும்.
  • நிபந்தனையின்படி வடிகட்டும் போது, உங்கள் தரவிலிருந்து மதிப்பு, கலக் குறிப்பு, புலம் ஆகியவற்றை உள்ளிடலாம். உதாரணமாக "இதை விட அதிகமானது" என்பதைத் தேர்ந்தெடுத்தால் 10, =Sheet1!A1 என டைப் செய்யலாம் அல்லது உங்கள் தரவில் 'வருவாய்' என்ற புலம் இருந்தால் =வருவாய் என டைப் செய்யலாம்.

தொடர்புடைய கட்டுரைகள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
16322151342732477515
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false