Google Docs, Sheets, Slides ஃபைல்களைத் திருத்தும்போது ஏற்படும் பிழைகளைக் கண்டறிந்து திருத்துதல்

Docs, Slides, Sheets ஃபைல்களைத் திருத்தும்போது “பிழை ஏற்பட்டது" என்ற மெசேஜ் காட்டப்பட்டு உங்களால் திருத்தமுடியவில்லை என்றால், அந்தச் சிக்கலை நீங்கள் பிழையறிந்து திருத்தலாம். ஃபைலை உடனடியாக அணுகி நீங்கள் செய்த மாற்றங்களைத் தொடர வேண்டியிருந்தால், இந்த வழிகளைப் பின்பற்றலாம்.

ஆவணம் திறக்காதபோது இந்த மெசேஜ்கள் காட்டப்படலாம்:

  • "பிழை ஏற்பட்டது. இந்தப் பக்கத்தை மீண்டும் ஏற்றி முயலவும் அல்லது ஒரு சில நிமிடங்கள் கழித்து மீண்டும் திறக்கவும்."
  • “சேவையகப் பிழை ஏற்பட்டது. உலாவியில் ரெஃப்ரெஷ் செய் என்பதை அழுத்தவும்."

இந்த மெசேஜ்கள் காட்டப்பட்டால் 5 நிமிடத்திற்குப் பிறகு பக்கத்தை ரெஃப்ரெஷ் செய்யவும்.

பிழையறிந்து திருத்துதல் செயல்முறைகள்

நீட்டிப்புகளை முடக்குதல்
Docs, Slides, Sheets ஆகியவற்றில் ஃபைலைத் திறக்கும்போது உங்கள் உலாவியில் உள்ள சில நீட்டிப்புகள் இடையூறுகளை ஏற்படுத்தலாம். உங்கள் Google கணக்கில் உள்நுழைந்து ஃபைலைத் திறக்க, உலாவியின் மறைநிலைப் பயன்முறையைப் பயன்படுத்தவும். எடிட்டருக்கு எது இடையூறாக இருக்கிறது என்பதைக் கண்டறிய, ஒவ்வொன்றாக நீட்டிப்புகளை முடக்கலாம்.
உதவிக்குறிப்பு: நீங்கள் Safari, Firefox, Microsoft Edge போன்ற உலாவிகளைப் பயன்படுத்தினால் அவற்றிலும் நீட்டிப்புகளை முடக்கலாம்.
உலாவிய தரவை அழித்தல்
உலாவிய தரவு, குக்கீகள், தற்காலிக நினைவகத்தில் சேமிக்கப்பட்ட ஃபைல்கள் ஆகியவற்றை அழிக்கலாம். Chromeமில் உங்கள் தற்காலிக நினைவகத்தில் சேமிக்கப்பட்டவற்றையும் குக்கீகளையும் அழிப்பது எப்படி எனத் தெரிந்துகொள்ளுங்கள். உலாவிய தரவை அழித்தபிறகு உங்கள் கணக்கில் மீண்டும் உள்நுழைய வேண்டியிருக்கலாம்.
உதவிக்குறிப்பு: நீங்கள் Safari, Firefox, Microsoft Edge போன்ற உலாவிகளைப் பயன்படுத்தினால் அவற்றிலும் தற்காலிக நினைவகத்தில் சேமிக்கப்பட்டவற்றையும் குக்கீகளையும் அழிக்கலாம்.
ஐந்து நிமிடங்கள் காத்திருந்து ரெஃப்ரெஷ் செய்தல்
சில நேரங்களில் பிழைச் செய்தி காட்டப்பட்ட பிறகு, அது தானாகவே சரியாகக்கூடும். 5 நிமிடங்கள் காத்திருந்து பக்கத்தை ரெஃப்ரெஷ் செய்யவும்.
இணைய இணைப்பை மேம்படுத்துதல்
இணைய இணைப்பு மோசமாக இருந்தால் இணைப்பு நன்றாகக் கிடைக்கக்கூடிய இடத்திற்குச் சென்று முயற்சி செய்யலாம். வாய்ப்பு இருந்தால் கேபிள் இணைப்பைப் பயன்படுத்தியும் முயற்சி செய்யலாம்.
பழைய மென்பொருளைப் புதுப்பித்தல் அல்லது சாதனத்தை மாற்றுதல்
பழைய கம்ப்யூட்டரையோ உலாவியையோ பயன்படுத்தினால் Docs, Slides, Sheets ஆகியவற்றுக்கான சிஸ்டம் தேவைகள் பூர்த்தி செய்யப்படாமல் இருக்கக்கூடும். அந்த ஃபைலை வேறொரு சாதனத்திலும் திறக்க முயற்சி செய்யலாம். உங்களால் வேறொரு கம்ப்யூட்டரில் அந்த ஃபைலைத் திறக்க முடிந்தால் உங்கள் சாதனத்தினால் சிக்கல் ஏற்பட்டிருக்கக்கூடும். உலாவியைச் சமீபத்திய பதிப்பிற்குப் புதுப்பிக்கலாம்.
திறந்துள்ள பக்கங்களையும் சாளரங்களையும் உலாவி சேமிக்கும், மீண்டும் தொடங்கும்போது அவற்றைத் தானாகத் திறக்கும். Chrome மீண்டும் தொடங்கும்போது மறைநிலைச் சாளரங்கள் மீண்டும் திறக்கப்படாது.
வேறொரு உலாவியைப் பயன்படுத்துதல்
வழக்கமான உலாவியைப் பயன்படுத்தும்போது அடிக்கடி பிழைச் செய்தி காட்டப்பட்டால் வேறொரு உலாவியைப் பயன்படுத்திப் பார்க்கவும்.
திருத்துவதற்கான அணுகலைப் பிற கணக்குகளுடன் பகிர்தல்
உங்கள் ஃபைலைத் திருத்துவதற்கான அணுகலை மற்றொரு கணக்குடன் பகிர்ந்து அந்தக் கணக்கைப் பயன்படுத்தி ஃபைலைத் திருத்தலாம். Google Driveவில் உள்ள ஃபைலைத் திறக்காமலேயே பகிரலாம்.

பணியைத் தொடருதல்

Driveவில் உங்கள் ஃபைலின் நகலை உருவாக்குதல்
முக்கியம்: நகலெடுக்கப்பட்ட ஃபைலில் இதுவரையான மாற்றங்கள் போன்ற சில அம்சங்கள் இருக்காது.
  1. கம்ப்யூட்டரில் Google Driveவைத் திறக்கவும்.
  2. ஃபைலின் மீது வலது கிளிக் செய்யவும்.
  3. நகலெடு என்பதைக் கிளிக் செய்யவும்.
உதவிக்குறிப்பு: அசல் ஃபைல் இருக்கும் இடத்தில் நகலெடுக்கப்பட்ட ஃபைல் காட்டப்பட சில வினாடிகள் ஆகலாம்.
ஃபைலைப் பதிவிறக்குதல் மற்றும் பதிவேற்றுதல்
முக்கியம்: பதிவிறக்கப்பட்ட ஃபைலில் இதுவரையான மாற்றங்கள் போன்ற சில அம்சங்கள் இருக்காது.
ஃபைலைப் பதிவிறக்குதல்
  1. கம்ப்யூட்டரில் Google Driveவைத் திறக்கவும்.
  2. ஃபைலின் மீது வலது கிளிக் செய்யவும்.
  3. பதிவிறக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
    • ஃபைலை ஆதரிக்கும் மென்பொருளை நீங்கள் நிறுவியிருந்தால், ஃபைலைப் பதிவிறக்கியும் சாதனத்தில் பணியாற்றலாம்.
ஃபைலைப் பதிவேற்றுதல்
  1. கம்ப்யூட்டரில் Google Driveவைத் திறக்கவும்.
  2. புதிது என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. ஃபைல் பதிவேற்றம் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. ஃபைலைப் பதிவேற்றவும்.
புதிய விரிதாளில் உங்கள் ஃபைலின் தரவை இறக்குதல் (Google Sheetsஸில் மட்டும்)
முக்கியம்: IMPORTRANGE() செயல்பாட்டைப் பயன்படுத்தி புதிய Sheetsஸில் தரவை இறக்கினால் அசல் தாளில் உள்ள சூத்திரங்கள் இறக்கப்படாது.
உங்கள் தரவைப் புதிய விரிதாளில் இறக்கவும் தரவைப் பாதுகாக்கவும், இந்தச் சூழல்களில் மட்டும் IMPORTRANGE செயல்பாட்டைப் பயன்படுத்தவும்:
  • Google Sheetஸில் சிக்கல் ஏற்படுதல்.
  • Driveவில் உங்கள் ஃபைலின் நகலை உருவாக்கியபிறகும் அதைப் பயன்படுத்த முடியாமல் இருத்தல்.
IMPORTRANGE() செயல்பாட்டைப் பயன்படுத்த அசல் ஃபைலின் URL, பக்கத்தின் பெயர் ஆகியவை உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

எங்கள் மேம்பாட்டிற்கு உதவுங்கள் & சமூகத்தினரிடம் உதவி பெறுங்கள்

ரெஃப்ரெஷ் செய்வது தொடர்பான பிழைகள் இன்னமும் காட்டப்பட்டால் உதவி கேட்கலாம் அல்லது சிக்கலைப் புகாரளிக்கலாம்.
  • வேறு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உதவிக்கு, Google Docs எடிட்டர் உதவி மன்றப் பக்கத்தைப் பார்க்கலாம்.
  • சிக்கலைப் புகாரளிக்க Docs, Sheets அல்லது Slides ஃபைலைத் திறந்து மேலே உள்ள உதவி அதன் பிறகு மேம்படுத்த உதவுங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
8418794332068225568
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false