உங்கள் படிவத்திற்கான கேள்வியைத் தேர்வுசெய்தல்

உங்கள் படிவத்திலோ வினாடி வினாவிலோ மொத்தத்தில் 2000 வரையிலான விருப்பத்தேர்வுகளைச் சேர்த்து பல்வேறு வகையான பதில்களைச் சேகரிக்கலாம். 

படிவத்தில் கேள்வியைச் சேர்ப்பது எப்படி எனத் தெரிந்துகொள்ளுங்கள்.

பதிலை டைப் செய்தல்

சுருக்கமான பதில்
  • படிவத்தை நிரப்புபவர்கள் ஒருசில வார்த்தைகளில் பதிலளிக்கலாம்.
பத்தி
  • படிவத்தை நிரப்புபவர்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பத்திகளைக் கொண்ட நீண்ட பதில்களை எழுதலாம்.

பட்டியலில் இருந்து தேர்வுசெய்தல்

படிவங்களில் உள்ள கேள்விகளுக்குச் சேர்க்கப்படும் விருப்பங்களில் பேரெழுத்து சிற்றெழுத்து வித்தியாசம் உண்டு. 
 
பல தேர்வு
  • படிவத்தை நிரப்புபவர்கள், விருப்பங்களின் தொகுப்பிலிருந்து பதிலைத் தேர்வுசெய்யலாம்.
  • அவர்களால் ஒரு விருப்பத்தை மட்டுமே தேர்வுசெய்ய முடியும்.
  • "பிற" என்பதை ஒரு விருப்பமாக நீங்கள் சேர்க்கலாம். அதன் கீழ் அவர்கள் சுருக்கமான பதிலை டைப் செய்ய முடியும்.
செக்பாக்ஸ்கள்
  • படிவத்தை நிரப்புபவர்கள், விருப்பங்களின் தொகுப்பிலிருந்து பதிலைத் தேர்வுசெய்யலாம்.
  • அவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட விருப்பங்களைத் தேர்வுசெய்யலாம்.
  • "பிற" என்பதை ஒரு விருப்பமாக நீங்கள் சேர்க்கலாம். அதன் கீழ் அவர்கள் சுருக்கமான பதிலை டைப் செய்ய முடியும்.
கீழ்த்தோன்றல் மெனு
  • படிவத்தை நிரப்புபவர்கள், விருப்பங்களின் தொகுப்பிலிருந்து பதிலைத் தேர்வுசெய்யலாம்.
  • அவர்களால் ஒரு விருப்பத்தை மட்டுமே தேர்வுசெய்ய முடியும்.

ஃபைல்களைப் பதிவேற்றுதல்

ஃபைல் பதிவேற்றம்
படிவத்தை நிரப்புபவர்கள், கேள்விக்கான பதிலாக ஃபைல்களைப் பதிவேற்றலாம்:
  • பதிவேற்றப்பட்ட ஃபைல்கள் கருத்துக்கணிப்பு உரிமையாளரின் Google Drive சேமிப்பகத்தில் சேமிக்கப்படும். Google Drive சேமிப்பிடத்தைக் காலியாக்கி, சேமிப்பகத்தை அதிகரிப்பது எப்படி எனத் தெரிந்துகொள்ளுங்கள்.
    • பதிவேற்றப்பட்ட ஃபைல்கள் புதிய ஃபோல்டரில் சேமிக்கப்படும்.
  • ஒருவர் பதிவேற்றக்கூடிய ஃபைலின் அதிகபட்ச அளவை நீங்கள் தேர்வுசெய்யலாம்.
  • ஒருவர் எந்த வகையான ஃபைல்களைப் பதிவேற்ற வேண்டுமென்பதை நீங்கள் குறிப்பிடலாம்.
  • இந்தக் கேள்விக்குப் பதிலளிக்க, பதிலளிப்பவர்கள் Google கணக்கில் உள்நுழைந்திருக்க வேண்டும்.

முக்கியம்: பகிர்ந்த இயக்ககத்தில் படிவம் சேமிக்கப்பட்டிருந்தாலோ உங்கள் நிர்வாகி தரவு இழப்புத் தடுப்பு அம்சத்தை இயக்கியிருந்தாலோ இந்தக் கேள்வியை நீங்கள் பயன்படுத்த முடியாது. 

கட்டத்தில் இருந்து தேர்வுசெய்தல்

நேரியல் அளவீடு

You can ask responders to provide a rating on a scale.

  • படிவத்தை நிரப்புபவர்கள் அளவீட்டில் உங்கள் கேள்விகளுக்கு ரேட்டிங் வழங்கலாம்.
  • உங்கள் அளவீட்டின் தொடக்க மதிப்பு 0 அல்லது 1 ஆக இருக்கலாம்.
  • உங்கள் அளவீடு 2 முதல் 10 வரையிலான முழு எண்ணுடன் முடிவடையலாம்.
  • உங்கள் அளவீட்டின் இரண்டு முனைகளிலும் லேபிளை அமைத்துக்கொள்ளலாம்.
பல தேர்வுக் கட்டம்

பதிலளிப்பவர்கள் ஒரு வரிசைக்கு ஒரு பதிலை அளிக்கும் வகையில் நீங்கள் ஒரு கட்டத்தை உருவாக்கலாம்.

  • “ஒவ்வொரு வரிசையிலும் பதில் தேவை” நிலைமாற்றும் பட்டனை நீங்கள் இயக்கினால்: பதிலளிப்பவர்கள் ஒவ்வொரு வரிசையிலும் ஒரு பதிலைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அவர்கள் அப்படிச் செய்யவில்லை எனில், பிழைச் செய்தி காட்டப்படும். அத்துடன் பதிலளிப்பவரால் மேற்கொண்டு தொடர முடியாது.
  • பதிலளிப்பவர்கள் ஒரு நெடுவரிசைக்கு ஒரு பதிலைத் தேர்ந்தெடுக்குமாறு வரம்பிடுதல்: ஒரு நெடுவரிசையில் ஒன்றுக்கும் மேற்பட்ட பதில்களைத் தேர்ந்தெடுக்கும்போது பிழைச் செய்தி காட்டப்படும். பதிலளிப்பவர்கள் மேற்கொண்டு தொடர முடியாது.
    1. கீழ் வலதுபுறத்தில் உள்ள மூன்று புள்ளி மெனுவை கிளிக் செய்யவும். 
    2. “ஒரு நெடுவரிசைக்கு ஒரு பதில் என வரம்பிடு” என்பதைத் தேர்வுசெய்யவும். 
  • வரிசையின் நிலையைக் கலைத்தல்: 
    1. கீழ் வலதுபுறத்தில் உள்ள மூன்று புள்ளி மெனுவை கிளிக் செய்யவும்.
    2. “வரிசையின் நிலையைக் கலை” என்பதைத் தேர்வுசெய்யவும்.

“ஒரு நெடுவரிசைக்கு ஒரு பதில் என வரம்பிடு” என்பதற்கான எடுத்துக்காட்டு

உள்ளீடு: 

  • வரிசைகள்: A, B, C
  • நெடுவரிசைகள்: 1, 2, 3

முடிவு: ஒவ்வொரு நெடுவரிசைக்கும் (1, 2, 3) எதிராக, ஒரு வரிசையில் (A, B, C) உள்ளவற்றைப் பதிலளிப்பவர்கள் தேர்வுசெய்யலாம். ஒரு நெடுவரிசையில் பல வரிசைகளைத் தேர்வுசெய்தால் அவர்களுக்குப் பிழைச் செய்தி காட்டப்படும்.

செக்பாக்ஸ் கட்டம்

பதிலளிப்பவர்கள் ஒரு வரிசைக்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பதில்களைத் தேர்ந்தெடுக்கும் வகையில் நீங்கள் ஒரு கட்டத்தை உருவாக்கலாம்.

  • “ஒவ்வொரு வரிசையிலும் பதில் தேவை” நிலைமாற்றும் பட்டனை நீங்கள் இயக்கினால்: பதிலளிப்பவர்கள் ஒவ்வொரு வரிசையிலும் ஒரு பதிலைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அவர்கள் அப்படிச் செய்யவில்லை எனில், பிழைச் செய்தி காட்டப்படும். அத்துடன் பதிலளிப்பவரால் மேற்கொண்டு தொடர முடியாது.
  • பதிலளிப்பவர்கள் ஒரு நெடுவரிசைக்கு ஒரு பதிலைத் தேர்ந்தெடுக்குமாறு வரம்பிடுதல்: ஒரு நெடுவரிசையில் ஒன்றுக்கும் மேற்பட்ட பதில்களைத் தேர்ந்தெடுக்கும்போது பிழைச் செய்தி காட்டப்படும். பதிலளிப்பவர்கள் மேற்கொண்டு தொடர முடியாது.
    1. கீழ் வலதுபுறத்தில் உள்ள மூன்று புள்ளி மெனுவை கிளிக் செய்யவும். 
    2. “ஒரு நெடுவரிசைக்கு ஒரு பதில் என வரம்பிடு” என்பதைத் தேர்வுசெய்யவும்.
  • வரிசையின் நிலையைக் கலைத்தல்: 
    1. கீழ் வலதுபுறத்தில் உள்ள மூன்று புள்ளி மெனுவை கிளிக் செய்யவும்.
    2. “வரிசையின் நிலையைக் கலை” என்பதைத் தேர்வுசெய்யவும்.

“ஒரு நெடுவரிசைக்கு ஒரு பதில் என வரம்பிடு” என்பதற்கான எடுத்துக்காட்டு

உள்ளீடு: 

  • வரிசைகள்: A, B, C
  • நெடுவரிசைகள்: 1, 2, 3

முடிவு: ஒவ்வொரு வரிசையிலும் (A, B, C) உள்ளவற்றிற்கு எதிராக, பல நெடுவரிசைகளை (1, 2, 3) பதிலளிப்பவர்கள் தேர்வுசெய்யலாம். ஒரு நெடுவரிசையில் பல வரிசைகளைத் தேர்வுசெய்தால் அவர்களுக்குப் பிழைச் செய்தி காட்டப்படும்.

தேதியையும் நேரத்தையும் தேர்ந்தெடுத்தல்

தேதி
  • படிவத்தை நிரப்புபவர்கள் இந்தப் பெட்டியில் எந்தத் தேதியையும் நிரப்பலாம்.
  • ஆண்டையோ நேரத்தையோ சேர்க்க, கேள்வியின் கீழ் வலதுபுறத்தில் உள்ள மூன்று புள்ளி மெனுவை மேலும் கிளிக் செய்யவும்.
நேரம்
  • படிவத்தை நிரப்புபவர்கள் நேரத்தையோ கால அளவையோ நிரப்பலாம்.
  • நேரத்திற்கும் கால அளவிற்கும் இடையே மாற, கேள்வியின் கீழ் வலதுபுறத்தில் உள்ள மூன்று புள்ளி மெனுவை மேலும் கிளிக் செய்யவும்.
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
3881494441794916604
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false