உங்கள் படிவத்திற்கான கேள்வி வகையைத் தேர்வுசெய்தல்

மெனுவில் இருந்து கேள்விகளின் வகைகளை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்:

  1. Google Formsஸில் படிவத்தைத் திறக்கவும்.
  2. வலதுபுறத்தில் உள்ள சேர் ஐகானைக் கிளிக் செய்யவும்.
  3. கேள்வித் தலைப்பின் வலதுபுறத்தில் நீங்கள் விரும்பும் கேள்வி வகையைத் தேர்வுசெய்யவும்.
  4. (விரும்பினால்) உங்கள் கேள்விகளுக்குப் பயனர்கள் அவசியம் பதிலளிக்க வேண்டும் என்றால், அவசியம் என்பதை இயக்கலாம்.
  5. (விரும்பினால்) “விளக்கம்” என்ற புலத்தைச் சேர்க்க, மூன்று புள்ளி மெனுவை கிளிக் செய்து அதன் பிறகு விளக்கம் என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. (விரும்பினால்) ஒவ்வொரு கேள்விக்கும் கூடுதல் விருப்பங்களைக் கண்டறிய, மூன்று புள்ளி மெனுவை கிளிக் செய்யவும்.
சுருக்கமான பதில்
பத்தி
பல தேர்வு
  • விருப்பங்களின் தொகுப்பை நீங்கள் வழங்கலாம். பதிலளிப்பவர்கள் ஒரு விருப்பத்தை மட்டுமே தேர்வுசெய்ய முடியும்.

  • "பிற" என்பதை ஒரு விருப்பமாக நீங்கள் சேர்க்கலாம். பதிலளிப்பவர்கள் சுருக்கமான பதிலை டைப் செய்யலாம்.

செக்பாக்ஸ்கள்
  • விருப்பங்களின் தொகுப்பை நீங்கள் வழங்கலாம். பதிலளிப்பவர்கள் பல பதில்களைத் தேர்ந்தெடுக்க முடியும்.

  • "பிற" என்பதை ஒரு விருப்பமாக நீங்கள் சேர்க்கலாம். பதிலளிப்பவர்கள் சுருக்கமான பதிலை டைப் செய்யலாம்.

கீழ்த்தோன்றல் மெனு
  • விருப்பங்களின் தொகுப்பை நீங்கள் வழங்கலாம். பதிலளிப்பவர்கள் ஒரு விருப்பத்தை மட்டுமே தேர்வுசெய்ய முடியும்.
ஃபைல் பதிவேற்றம்

உங்கள் படிவத்தில் ஃபைலைப் பதிவேற்றும்படி பதிலளிப்பவரிடம் நீங்கள் கேட்கலாம்.

முக்கியம்:

  • பின்வரும் சூழல்களில் இந்தக் கேள்வி வகையை உங்களால் பயன்படுத்த முடியாது:
  • இந்தக் கேள்விக்குப் பதிலளிக்க, பதிலளிப்பவர்கள் Google கணக்கில் உள்நுழைய வேண்டும்.
  • படிவத்தின் உரிமையாளருக்கு, பதிவேற்றப்பட்ட ஃபைல்கள் Google Driveவில் புதிய ஃபோல்டரில் சேமிக்கப்பட்டிருக்கும்.

ஃபைல் பதிவேற்றக் கேள்வியை அமைக்க, நீங்கள்:

  • பதிலளிப்பவர்கள் எந்த வகையான ஃபைல்களைப் பதிவேற்றலாம் என்பதைக் குறிப்பிடலாம்.
  • பதிலளிப்பவர்கள் பதிவேற்றக்கூடிய அதிகபட்ச ஃபைல்களின் எண்ணிக்கையை அமைக்கலாம்.
  • பதிலளிப்பவர்கள் பதிவேற்றக்கூடிய ஃபைலின் அதிகபட்ச அளவைத் தேர்வுசெய்யலாம்.
நேரியல் அளவீடு

ரேட்டிங்கை அளவீட்டில் வழங்கும்படி பதிலளிப்பவர்களிடம் நீங்கள் கேட்கலாம்.

  • உங்கள் அளவீட்டின் தொடக்க மதிப்பு 0 அல்லது 1 ஆக இருக்கலாம்.
  • உங்கள் அளவீடு 2 முதல் 10 வரையிலான முழு எண்ணுடன் முடிவடையலாம்.
  • அளவீட்டின் இரண்டு முனைகளிலும் லேபிளை நீங்கள் அமைத்துக்கொள்ளலாம்.
பல தேர்வுக் கட்டம்
  • பதிலளிப்பவர்கள் ஒரு வரிசைக்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பதில்களைத் தேர்ந்தெடுக்கும் வகையில் நீங்கள் ஒரு கட்டத்தை உருவாக்கலாம்.
  • விருப்பங்களின் வகைக்கு ரேட்டிங் வழங்க இந்த வகைக் கேள்வி பெரும்பாலும் பயன்படுத்தப்படும்.
  • வரிசைகளுக்கும் நெடுவரிசைகளுக்கும் நீங்கள் விருப்பங்களைச் சேர்க்கலாம், அத்துடன் விரும்பினால் பயன்படுத்தக்கூடிய வகையிலான விதிகளையும் (எ.கா. ஒரு நெடுவரிசைக்கு ஒரு விருப்பம் மட்டும்) அமைக்கலாம். உங்கள் படிவத்திற்கு விதிகளை எப்படி அமைப்பது என்று தெரிந்துகொள்ளுங்கள்.
செக்பாக்ஸ் கட்டம்

தேதி

பதிலளிப்பவர்கள் mm/dd/yyyy என்ற வடிவத்தில் தேதியை வழங்கலாம்.

வருடத்தையோ நேரத்தையோ சேர்க்க, கேள்வியின் கீழ் வலதுபுறத்தில் உள்ள, மூன்று புள்ளி மெனுவை கிளிக் செய்யவும்.

நேரம்

பதிலளிப்பவர்கள்:

  • hh:mm AM/PM வடிவத்தில் நேரத்தை வழங்கலாம்
  • Hrs Min Sec வடிவத்தில் கால அளவை வழங்கலாம்

நேரத்திற்கும் கால அளவிற்கும் இடையே மாற, கேள்வியின் கீழ் வலதுபுறத்தில் உள்ள மூன்று புள்ளி மெனுவை கிளிக் செய்யவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
16408697059439006883
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false