விளக்கக்காட்சியில் பரிந்துரைக்கப்பட்ட தளவமைப்புகளைப் பார்த்து பயன்படுத்தல்

முக்கியம்: ஜூலை 30, 2024க்குப் பிறகு Google Docs, Sheets, Slides ஆகியவற்றில் ஆய்வு கண்டறி அம்சம் கிடைக்காது. Sheetsஸில் 'நிபந்தனை வடிவமைப்பைத் திறத்தல்', Docsஸில் 'பக்கவரிசையற்ற பயன்முறைக்குச் செல்லுதல்', Slidesஸில் 'டெம்ப்ளேட்டுகளைத் திறத்தல்' போன்ற செயல்களைச் செய்ய Docs, Sheets, Slides ஆகியவற்றில் உள்ள மெனு உதவிக் கருவியை நீங்கள் பயன்படுத்தலாம். பின்வருவன போன்ற உள்ளடக்கங்களை உருவாக்க “@” என்று டைப் செய்து, காட்டப்படும் விருப்பங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்: 

  • கீழ்த்தோன்றல்கள், ஈமோஜிகள் மற்றும் நபர் சிப்கள் 
  • Docsஸில் மீட்டிங் குறிப்புகள் மற்றும் மின்னஞ்சல் வரைவுகள்
  • Sheetsஸில் நிதிச் சிப்கள்

Google Slidesஸில் உங்கள் விளக்கக்காட்சியில் என்ன இருக்கிறது என்பதன் அடிப்படையில் பரிந்துரைக்கப்பட்ட உள்ளடக்கத்தைக் கண்டறிந்து சேர்க்கவும். விளக்கக்காட்சிக்குள் இருந்தே இணையத்திலும் உங்கள் ஆவணத்திலும் தேடலாம்.

Google Slidesஸில் ஆய்வைப் பயன்படுத்தல்

  1. உங்கள் கம்ப்யூட்டரில் Google Slidesஸில் விளக்கக்காட்சியைத் திறக்கவும்.
  2. கீழ் வலதுபுறத்தில், ஆய்வு Explore என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. பல சந்தர்ப்பங்களில், உங்கள் வேலையை முடிக்க தளவமைப்புகளுக்கான பரிந்துரைகளைக் காண்பீர்கள். நீங்கள் விரும்பும் ஒன்றைக் கிளிக் செய்யவும்.

மற்ற ஆவணங்கள் அல்லது இணையத்தில் இருந்து படங்கள் அல்லது தகவலைச் சேர்த்தல்

  1. உங்கள் கம்ப்யூட்டரில் Google Slidesஸில் விளக்கக்காட்சியைத் திறக்கவும்.
  2. கீழ் வலதுபுறத்தில், ஆய்வு Explore என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. மேலே, ஆவணம், விளக்கக்காட்சி, படம், விளக்கப்படம் அல்லது இணையப் பக்கத்தைத் தேடுங்கள். தேடல் முடிவுகள் வகைகளாகக் காணப்படும்:
    • வலை:உங்கள் விளக்கக்காட்சி தொடர்பான வலைத் தகவல்.
    • படங்கள்: உங்கள் விளக்கக்காட்சி தொடர்பான படங்கள்.
    • இயக்ககம்: Google Driveஇல் சேமிக்கப்பட்ட ஆவணங்கள்.
  4. ஓர் ஆவணத்தைச் சேர்: 

    • ஒரு படம் அல்லது விளக்கப்படத்தைச் சேர்த்தல்: நீங்கள் சேர்க்க விரும்பும் ஆவணத்தைக் கிளிக் செய்யவும். மேலே, செருகு என்பதைக் கிளிக் செய்யவும்.

    • அடிக்குறிப்பைச் சேர்த்தல்: உங்கள் தேடல் முடிவைக் குறிக்கவும். அடிக்குறிப்பாகக் காட்டு அடிக்குறிப்பாக மேற்கோளிடுஎன்பதைக் கிளிக் செய்யவும். 

    • இணைப்பைச் சேர்த்தல்: உங்கள் தேடல் முடிவைக் குறிக்கவும். இணைப்பைச் செருகு என்பதைக் கிளிக் செய்யவும் செருகு.

உதவிக்குறிப்பு: ஆவணத்தில் இருந்து மேலும் விளக்கப்படங்கள் அல்லது படங்களைக் காண, விளக்கக்காட்சி அல்லது ஆவணத்தின் கீழ் "மேலும் உள்ளடக்கத்தைக் காண்க" என்பதைக் கிளிக் செய்யவும். 

தொடர்புடைய கட்டுரைகள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
10598091098528343908
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false