Google Forms உடன் வினா விடைகளை உருவாக்குதலும் கிரேடு வழங்குதலும்

புதிய வினாடி வினா மற்றும் விடைக்குறிப்புகளை உருவாக்குதல்

உதவிக்குறிப்பு: வினாடி வினாவை விரைவாக உருவாக்க g.co/createaquiz தளத்திற்குச் செல்லுங்கள்.

  1. Google Formsஸில் படிவத்தைத் திறக்கவும்.
  2. படிவத்தின் மேலே உள்ள அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. இதை வினாடி வினாவாக மாற்று என்பதை இயக்கவும்.
    • விருப்பத்திற்குரியது: மின்னஞ்சல் முகவரிகளைச் சேகரிக்க, “பதில்கள்” என்பதற்கு அடுத்துள்ள கீழ்நோக்கிய அம்புக்குறியை Down arrow கிளிக் செய்து மின்னஞ்சல் முகவரிகளைச் சேகரி என்பதை இயக்கவும்.
பதிலை உருவாக்குதல், புள்ளிகளை ஒதுக்குதல் மற்றும் தானியங்குக் கருத்தைச் சேர்த்தல்

குறிப்பிட்ட கேள்வி வகைகளுக்கு விடைக்குறிப்புகளை உருவாக்கலாம்:

விடைக்குறிப்பை உருவாக்குதல்

  1. கேள்வியைச் சேர்க்க, 'கேள்வியைச் சேர்' ஐகானை Add question கிளிக் செய்யவும்.
  2. கேள்விகளையும் பதில்களையும் சேர்க்கவும்.
  3. கேள்வியின் கீழ் இடப்பக்கத்தில், விடைக்குறிப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. சரியான பதில் அல்லது பதில்களைத் தேர்வுசெய்யவும்.
  5. கேள்வியின் மேல் வலதுபுறத்தில், கேள்விக்கான புள்ளிகளைத் தேர்வுசெய்யவும்.
    • ஒரு பதிலுக்கான எழுத்துப்பூர்வ அல்லது YouTube வீடியோ விளக்கத்தைச் சேர்க்க, பதிலுக்கான கருத்தைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
    • கேள்விகள் அல்லது பதில்களின் மீது கிளிக் செய்து அவற்றைத் திருத்தலாம்.

கவனத்திற்கு: அனைத்து வகையான கேள்விகளுக்கும் புள்ளிகளை ஒதுக்கி கருத்தைச் சேர்க்கலாம்.

வினாடி வினாவின் போதும் அதன் பிறகும் பிறர் என்ன பார்ப்பார்கள் என்பதைத் தேர்வுசெய்தல்

தவறவிட்ட கேள்விகள், சரியான பதில்கள், புள்ளி மதிப்புகள் ஆகியவற்றைப் பிறர் பார்க்கலாமா என்பதைத் தேர்வுசெய்யலாம்.

  1. Google Formsஸில் வினாடி வினாவைத் திறக்கவும்.
  2. வினாடி வினாவின் மேலே உள்ள அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. "பதிலளிப்பவர் அமைப்புகள்" என்பதன் கீழே தேவைக்கு ஏற்ப அமைப்புகளை மாற்றவும்.
உங்கள் பணி அல்லது பள்ளியைச் சாராதவர்களுக்கு வினாடி வினாவை அனுப்புதல்
  1. வினாடி வினாவின் மேலே உள்ள அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. “பதில்கள்” என்பதன் கீழே உள்ள [உங்கள் டொமைன்] மற்றும் அதன் நம்பகமான நிறுவனங்களில் உள்ள பயனர்கள் மட்டுமே அணுக முடிய வேண்டும் என்பதை முடக்கவும்.

ங்கள் வினாடி வினாக்களைப் பிறருக்கு அனுப்புவது எப்படி எனத் தெரிந்துகொள்ளுங்கள்.

வினாடி வினாக்களை மதிப்பிடல்

அனைத்து வினாடி வினா பதில்களுக்கும் தானியங்குச் சுருக்கங்கள்  காட்டப்படும், அதில் இந்த விவரங்களும் இருக்கும்:

  • அடிக்கடி தவறாகப் பதிலளிக்கப்படும் கேள்விகள்
  • சரியான பதில்கள் குறிக்கப்பட்ட வரைபடங்கள்
  • ஸ்கொர்களின் சராசரி, இடைநிலை மற்றும் வரம்பு

தனிநபரின் பதில்களை மதிப்பிடல்

மின்னஞ்சல் முகவரிகளை நீங்கள் சேகரித்தால் தனிப்பட்ட பதில்களுக்குப் புள்ளிகளை ஒதுக்கி கருத்து தெரிவிக்கலாம். ஒவ்வொரு பதிலையும் மதிப்பிட்ட பின், உங்கள் மாற்றங்களைச் சேமிக்கவும்.

  1. Google Formsஸில் வினாடி வினாவைத் திறக்கவும்.
  2. மேலே உள்ள பதில்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. தனிப்பட்டது என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. தனிநபர்களுக்கு இடையே நகர்த்துவதற்கு, முந்தையது முந்தையது அல்லது அடுத்து அடுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. நீங்கள் மதிப்பிட விரும்பும் கேள்வியைக் கண்டறியவும்.
    • மேல் வலதுபுறத்தில், பதில் எத்தனை புள்ளிகளைப் பெற்றது என்பதை உள்ளிடவும்.
    • பதிலின் கீழே கருத்தைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. கருத்து வழங்கியபின் சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
  7. மாற்றங்களைச் சேமிக்க, கீழே சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
வினாடி வினா முடிவுகளைப் பார்த்தல்
  1. Google Formsஸில் வினாடி வினாவைத் திறக்கவும்.
  2. மேலே உள்ள பதில்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. சுருக்கம் என்பதைக் கிளிக் செய்யவும்.
கேள்வி வாரியாக மதிப்பிடுதல்
  1. Google Formsஸில் வினாடி வினாவைத் திறக்கவும்.
  2. மேலே உள்ள பதில்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. "பதில்கள்," கீழ் கேள்வி என்பதைக் கிளிக் செய்யவும்..
  4. ஒரு பதில்கள் குழுவிற்குப் புள்ளிகளை வழங்க:
    • முழுப் புள்ளிகள்: சரியானதாகக் குறி சரி எனக் குறி என்பதைக் கிளிக் செய்யவும்.
    • பகுதிப் புள்ளிகள்: நீங்கள் எத்தனை புள்ளிகள் வழங்க விரும்புகிறீர்களோ அந்த எண்ணிக்கையை டைப் செய்யவும்.
    • புள்ளிகள் இல்லை: தவறானதாகக் குறி தவறு எனக் குறி என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. ஒரு கேள்விக்கான எழுத்துப்பூர்வக் கருத்தையோ YouTube வீடியோ கருத்தையோ சேர்க்க கருத்தைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. கேள்விகளுக்கு இடையே நகர்த்துவதற்கு முந்தையது முந்தையது அல்லது அடுத்து அடுத்துஎன்பதைக் கிளிக் செய்யவும்.
  7. கிரேடிங் முடிந்தவுடன், கீழே உள்ள சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

முடிவுகளைப் பகிர்தல்

உங்கள் படிவத்தில் மின்னஞ்சல் முகவரிகளைச் சேகரித்தால் பதில்களை உடனடியாக அனுப்பலாம் அல்லது பகிரத் தயாராகும் வரை காத்திருக்கலாம்.

இயல்பாக:

  • கிரேடுகள் உடனடியாக வெளியிடப்படும்
  • மின்னஞ்சல் முகவரிகள் சேகரிக்கப்படாது.

கிரேடுகள் பகிரப்படும் விதத்தை மாற்றுதல்

  1. Google Formsஸில் வினாடி வினாவைத் திறக்கவும்.
  2. அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. “கிரேடுகளை வெளியிடுதல்” என்பதன் கீழ் ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்:
    • ஒவ்வொரு சமர்ப்பிப்பும் முடிந்தவுடன்
    • நேரடி மதிப்பாய்விற்குப் பின்

மதிப்பாய்விற்குப் பிறகு முடிவுகளை மின்னஞ்சல் செய்தல்

  1. Google Formsஸில் வினாடி வினாவைத் திறக்கவும்.
  2. மேலே உள்ள பதில்கள் அதன் பிறகு தனிநபர் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. பதிவுசெய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரி கொண்ட பதிலுக்கு மேலே வலதுபுறத்தில், ஸ்கோரை வெளியிடு என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. மின்னஞ்சல் அனுப்ப விரும்பும் நபர்களுக்கு அடுத்துள்ள பெட்டியைத் தேர்வுசெய்யவும்.
  5. மின்னஞ்சல்கள் வழியாக வெளியிடு என்பதைக் கிளிக் செய்யவும்.
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
2070450738060176087
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false