ஆவணத்தில் நெடுவரிசைகளைச் சேர்த்தல் அல்லது நீக்கல்


               

உங்கள் பிசினஸிற்கு மேம்பட்ட Google Workspace அம்சங்கள் தேவையா?

இன்றே Google Workspaceஸைப் பயன்படுத்திப் பாருங்கள்!

 

 

Google Docsஸில் உள்ள ஆவணத்தில் நெடுவரிசைகளைச் சேர்க்கலாம் அகற்றலாம்.

முக்கியம்: பக்கவரிசையற்ற வடிவமைப்பில் உள்ள ஆவணங்களில் இந்த அம்சங்களைப் பயன்படுத்த முடியாது. இந்த அம்சங்களைப் பயன்படுத்த, பக்கங்கள் உள்ள வடிவமைப்பில், ஆவணம் அமைக்கப்பட்டு இருப்பதை உறுதிசெய்துகொள்ளவும்.

உரையை நெடுவரிசைகளாக்குதல்

  1. Google Docsல் ஆவணத்தைத் திறக்கவும்.
  2. நெடுவரிசைகளில் இட விரும்பும் உரையைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. வடிவமை அதன் பிறகு நெடுவரிசைகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. நீங்கள் விரும்பும் எண்ணிக்கையிலான நெடுவரிசைகளைத் தேர்ந்தெடுக்கவும்.

நெடுவரிசை வடிவமைப்பை மாற்றல்

  1. மாற்ற விரும்பும் நெடுவரிசைகளைத் தேர்ந்தெடுக்கவும்.
  2. வடிவமை அதன் பிறகு நெடுவரிசைகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. மேலும் விருப்பங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. மாற்றங்களைச் செய்து, பொருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

நெடுவரிசை வடிவமைப்பை அகற்றல்

  1. மாற்ற விரும்பும் நெடுவரிசைகளைத் தேர்ந்தெடுக்கவும்.
  2. வடிவமை அதன் பிறகு நெடுவரிசைகள் அதன் பிறகு 1 நெடுவரிசை Column என்பதைக் கிளிக் செய்யவும்.

நெடுவரிசை இடைவெளியைச் சேர்த்தல்

நெடுவரிசை இடைவெளிகள் அடுத்த உரையை அடுத்த நெடுவரிசையின் மேலே பக்க இடைவெளியைப் போன்று தொடக்கத்தில் துவங்கச் செய்யும்.

  1. Google Docsல் ஆவணத்தைத் திறக்கவும்.
  2. இடைவெளியைச் சேர்க்க விரும்பும் நெடுவரிசையின் பகுதியைக் கிளிக் செய்யவும்.
  3. செருகு அதன் பிறகு இடைவெளி அதன் பிறகு நெடுவரிசை இடைவெளி என்பதைக் கிளிக் செய்யவும்.

நெடுவரிசை இடைவெளி விருப்பம் கிடைக்கவில்லை எனில், உரையை 2 அல்லது அதற்கு மேற்பட்ட நெடுவரிசைகளில் இடவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
5110906102668654555
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false