விளக்கப்படம், டேபிள் அல்லது ஸ்லைடுகளை Google Docsஸிலோ Slidesஸிலோ இணைத்தல்

விளக்கப்படம், டேபிள் அல்லது ஸ்லைடுகளை Google Docsஸிலோ Slidesஸிலோ இணைக்குபோது, அவற்றை இருக்கும் கோப்புகளுடனும் இணைக்கலாம். Google Sheets உடன் இணையாத அட்டவணைகளை எவ்வாறு சேர்த்துத் திருத்துவது என்பது பற்றி மேலும் அறிக.

முக்கியமானவை

  • உங்கள் ஆவணம் அல்லது விளக்கக்காட்சியின் அணுகலைக் கொண்டவர்களால் அனைத்து இணைக்கப்பட்ட விளக்கப்படங்கள், அட்டவணைகள் அல்லது ஸ்லைடுகளை, அவர்களிடம் அசல் விளக்கப்படங்கள், அட்டவணைகள் அல்லது ஸ்லைடுகளைக் கொண்டிருக்கும் கோப்பின் அணுகல் இல்லாத போதிலும் காண முடியும்.
  • இணைக்கப்பட்ட பொருட்கள் புதுப்பிக்கப்பட்டவுடம், அசல் கோப்பில் பொருட்களுக்குச் செய்யப்படும் எந்த திருத்தங்களும் புதிய கோப்பில் செய்யப்படும் மாற்றங்களை மீறிச் செயல்படும். இணைக்கப்பட்ட பொருட்களை எவ்வாறு புதுப்பிப்பது என்று அறிக.
      பெயர்கள், மின்னஞ்சல் முகவரிகள் அல்லது Google Groupsஸை உள்ளிடு
    • உதவிக்குறிப்பு: உங்கள் புதிய கோப்பில் இணைக்கப்பட்ட விளக்கப்படம், அட்டவணை அல்லது ஸலைடில் திருத்தம் செய்தால், அந்த மாற்றங்கள் அசல் கோப்பில் பிரதிபலிக்காது.
  • அதே இணைக்கப்பட்ட பொருளை வெவ்வேறு ஆவணங்கள் அல்லது விளக்கக்காட்சிகளுடன் நீங்கள் இணைக்கலாம்.

ஓர் ஆவணம் அல்லது விளக்கக்காட்சிக்கு ஒரு புதிய விளக்கப்படத்தைச் சேர்த்தல்

  1. உங்கள் கம்ப்யூட்டரில் Google Docs/Google Slidesஸில் ஆவணம்/விளக்கக்காட்சியைத் திறக்கவும்.
  2. செருகு அதன் பிறகு விளக்கப்படம் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. நீங்கள் சேர்க்க விரும்பும் விளக்கப்பட வகையைக் கிளிக் செய்யவும்.

ஒரு புதிய விளக்கப்படத்தைச் சேர்க்கையில்:

அட்டவணைகள், விளக்கப்படங்கள் & ஸ்லைடுகளை உட்பொதித்தல்

விளக்கப்படங்கள், அட்டவணைகள் மற்றும் ஸ்லைடுகளை இன்றைய நாள் வரையில் கோப்புகளில் புதுப்பிப்புடன் வைத்திருக்க, அதனை உட்பொதிக்கலாம்:

  • Google Docs மற்றும் ஸ்லைடுகளில் அட்டவணைகள் மற்றும் விளக்கப்படங்கள்.
  • Google Slides விளக்கக்காட்சியில் இருந்து ஸ்லைடுகளை வேறொன்றில்.
  • Google Slidesஸில் உள்ள ஸ்லைடுகளை Google Docsஸில்.
Google Sheetsஸில் இருந்து விளக்கப்படத்தைச் சேர்த்தல்
  1. உங்கள் கம்ப்யூட்டரில் Google Docs/Google Slidesஸில் ஆவணம்/விளக்கக்காட்சியைத் திறக்கவும்.
  2. செருகு அதன் பிறகு விளக்கப்படம் அதன் பிறகு Sheetsஸில் இருந்து என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. நீங்கள் சேர்க்க விரும்பும் விளக்கப்படத்துடன் சேர்த்து விரித்தாளையுன் கிளிக் செய்து, பிறகு தேர்ந்தெடு என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. நீங்கள் சேர்க்க விரும்பும் விளக்கப்படத்தைக் கிளிக் செய்யவும்.
    • விரித்தாளுடன் விளக்கப்படத்தை இணைக்க விரும்பவில்லை எனில், "விரித்தாளுடன் இணை" என்பதை தேர்வுநீக்கவும்.
  5. இறக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
Google Sheetsஸில் இருந்து ஒரு அட்டவணையைச் சேர்த்தல்

உதவிக்குறிப்பு: 400க்கு மேலான கலங்களைக் கொண்ட டேபிள்கள் உங்கள் ஆவணத்தில் இணைப்பு நீக்கப்பட்டு ஒட்டப்படும். முன்பே இணைக்கப்பட்ட டேபிளை 400 கலங்களுக்கு மேல் விரிக்க முடியாது.

  1. உங்கள் கணினியில், Google Chrome அல்லது Firefoxஇல் Google Sheetsஸில் ஒரு விரிதாளைத் திறக்கவும்.
  2. Docs அல்லது Slidesஸில் போட விரும்பும் கலங்களைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. மேலே, திருத்து அதன் பிறகு நகலெடுஐக் கிளிக் செய்யவும்.
  4. உங்கள் கம்ப்யூட்டரில் Google Docs/Google Slidesஸில் ஆவணம்/விளக்கக்காட்சியைத் திறக்கவும்.
  5. உங்கள் அட்டவணை இடம்பெற வேண்டிய.இடத்தைக் கிளிக் செய்து, திருத்து அதன் பிறகு ஒட்டுஐக் கிளிக் செய்யவும்.
  6. "விரிதாளுடன் இணை" அல்லது "இணைப்பை நீக்கி ஒட்டு" என்பதைத் தேர்வுசெய்து ஒட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.

 

வேறொரு விளக்கக்காட்சியில் இருந்து ஸ்லைடுகளை செருகுதல்
  1. உங்கள் கம்ப்யூட்டரில் Google Slidesஸில் விளக்கக்காட்சியைத் திறக்கவும்.
  2. நீங்கள் உட்பொதிக்க விரும்பும் ஸ்லைடுகளைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. மேலே, திருத்து அதன் பிறகு நகலெடுஐக் கிளிக் செய்யவும்.
  4. இந்த ஸ்லைடுகளைச் செருக விரும்பும் வேறொரு விளக்கக்காட்சியை Google Slidesஸில் திறக்கவும்.
  5. இடப்பக்கத்தில், அவற்றைச் சேர்க்க விரும்பும் ஸ்லைடைக் கிளிக் செய்யவும்.
  6. மேலே, திருத்து அதன் பிறகு ஒட்டுஐக் கிளிக் செய்யவும்.
  7. ஸ்லைடுகளை இணை என்பதைக் கிளிக் செய்யவும்.
ஓர் ஆவணத்தில் ஸ்லைடைச் சேர்
  1. உங்கள் கம்ப்யூட்டரில் Google Slidesஸில் விளக்கக்காட்சியைத் திறக்கவும்.
  2. இடப்பக்கத்தில், நீங்கள் சேர்க்க விரும்பும் ஸ்லைடைக் கிளிக் செய்யவும்.
  3. மேலே, திருத்து அதன் பிறகு நகலெடுஐக் கிளிக் செய்யவும்.
  4. உங்கள் கம்ப்யூட்டரில் Google Docsஸில் ஆவணத்தைத் திறக்கவும்.
  5. நீங்கள் ஸ்லைடைச் சேர்க்க விரும்பும் இடத்தைக் கிளிக் செய்யவும்.
  6. மேலே, திருத்து அதன் பிறகு ஒட்டுஐக் கிளிக் செய்யவும்.
  7. விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, பிறகு ஒட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.

விளக்கப்படம், அட்டவணை அல்லது ஸ்லைடுகளைத் திருத்தல், புதுப்பித்தல் அல்லது இணைப்பு நீக்கல்

விளக்கப்படம், அட்டவணை அல்லது ஸ்லைடைத் திருத்தல்

விளக்கப்படம், அட்டவணை அல்லது ஸ்லைடைத் திறத்தல் மற்றும் திருத்தல்

  1. உங்கள் கம்ப்யூட்டரில் Google Docs/Google Slidesஸில் ஆவணம்/விளக்கக்காட்சியைத் திறக்கவும்.
  2. அதைத் தேர்ந்தெடுக்க விளக்கப்படம் அல்லது அட்டவணையைக் கிளிக் செய்யவும்.
  3. விளக்கப்படத்தின் மேலே வலது மூலையில், இணைப்பு விருப்பங்கள் Down arrow அதன் பிறகு ஓப்பன் சோர்ஸ் என்பதைக் கிளிக் செய்யவும்..
  4. இப்போது நீங்கள் அசல் கோப்பை மாற்றலாம்.

அட்டவணையில் கல வரம்பை மாற்றல்

உதவிக்குறிப்பு: இணைக்கப்பட்ட டேபிளை உங்கள் ஆவணத்திற்குள் 400 கலங்களுக்கு மேல் விரிக்க முடியாது.

  1. உங்கள் கம்ப்யூட்டரில் Google Docs/Google Slidesஸில் ஆவணம்/விளக்கக்காட்சியைத் திறக்கவும்.
  2. அட்டவணைத் தேர்ந்தெடுக்க அதைக் கிளிக் செய்யவும்.
  3. இணைப்பு விருப்பங்கள் Down arrow அதன் பிறகு வரம்பை மாற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. நீங்கள் விரும்பும் வரம்பை உள்ளிட்டு, பிறகு சரி என்பதைக் கிளிக் செய்யவும்.
 
ஓர் ஆவணம் அல்லது விளக்கக்காட்சியில் விளக்கப்படங்கள், அட்டவணைகள் அல்லது ஸ்லைடுகளைப் புதுப்பித்தல்

உங்கள் விளக்கப்படம் அல்லது அட்டவணையில் தரவைப் புதுப்பித்தல்

  1. உங்கள் கம்ப்யூட்டரில் Google Docs/Google Slidesஸில் ஆவணம்/விளக்கக்காட்சியைத் திறக்கவும்.
  2. விளக்கப்படம், அட்டவணை அல்லது ஸ்லைடின் மேலே வலது மூலையில், புதுப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.

பல விளக்கப்படங்கள் அல்லது அட்டவணைகளில் தரவைப் புதுப்பித்தல்

  1. உங்கள் கம்ப்யூட்டரில் Google Docs/Google Slidesஸில் ஆவணம்/விளக்கக்காட்சியைத் திறக்கவும்.
  2. மேலே, கருவிகள் அதன் பிறகு இணைக்கப்பட்ட பொருட்கள்ஐக் கிளிக் செய்யவும். வலதுபுறத்தில் பக்கப்பட்டி தோன்றும்.
  3. கீழே அனைத்தையும் புதுப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.
உதவிக்குறிப்பு: தனித்தனியாக புதுப்பிக்க குறிப்பிட்ட பொருட்களுக்கு அடுத்து புதுப்பிஎன்பதைக் கிளிக் செய்யவும்.

"புதுப்பி" அல்லது "அனைத்தையும் புதுப்பி" என்பதைப் பார்க்க முடியவில்லை எனில்:

  • உங்கள் விளக்கப்படங்கள், அட்டவணைகள் அல்லது ஸ்லைடுகளை இணைக்க முடியாமல் போகலாம்.
  • உங்கள் விளக்கப்படங்கள், அட்டவணைகள் அல்லது ஸ்லைடுகளை ஏற்கனவே இணைக்கப்பட்டிருக்கலாம்.

உங்கள் அட்டவணை உங்கள் விரித்தாளுடன் பொருந்தும் வகையில் வடிவமைத்தல்

  1. உங்கள் கம்ப்யூட்டரில் Google Docs/Google Slidesஸில் ஆவணம்/விளக்கக்காட்சியைத் திறக்கவும்.
  2. அட்டவணைத் தேர்ந்தெடுக்க அதைக் கிளிக் செய்யவும்.
  3. விளக்கப்படத்தின் மேலே வலது மூலையில், இணைப்பு விருப்பங்கள் Down arrow அதன் பிறகு விரித்தாள் தரவு மற்றும் வடிவமைப்புடன் பொருத்து என்பதைக் கிளிக் செய்யவும்..
விளக்கப்படம், அட்டவணை அல்லது ஸ்லைடை அசல் கோப்பில் இருந்து இணைப்பு நீக்கல்
  1. உங்கள் கம்ப்யூட்டரில் Google Docs/Google Slidesஸில் ஆவணம்/விளக்கக்காட்சியைத் திறக்கவும்.
  2. நீங்கள் இணைப்பு நீக்க விரும்பும் விளக்கப்படம், அட்டவணை அல்லது ஸ்லைடுகளைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. விளக்கப்படம் அல்லது அட்டவணையின் மேலே வலது மூலையில், இணைப்பு விருப்பங்கள் Down arrow அதன் பிறகு இணைப்பை நீக்குஇணைப்பை நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
2182329607720983695
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false