வலதுபுறத்திலிருந்து இடதுபுறமாக உரையைத் திருத்துதல் & பார்த்தல்

வலப்புறத்திலிருந்து இடப்புறமாக எழுதும் உரையைக் கொண்ட ஆவணத்தையோ, விரிதாளையோ, விளக்கக்காட்சியையோ திறக்கும்போது அல்லது வலப்புறத்திலிருந்து இடப்புறமாக எழுதும் மொழியில் உரையை சேர்க்கும்போது வலப்புறத்திலிருந்து இடப்புறமாக எழுதும் கட்டுபாடுகள் தானாக இயங்கும். வலப்புறத்திலிருந்து இடப்புறமாக எழுதும் மொழிகளின் கட்டுபாடுகளை நீங்களே இயக்கலாம்.

வலப்புறத்திலிருந்து இடப்புறமாக எழுதும் மொழிக்கான கட்டுப்பாடுகளை இயக்குதல்

வலமிருந்து இடமான மொழிகளுக்கு Google Docs, Sheets, Slides ஆகியவற்றை அமைப்பதற்கு:

  1. உங்கள் கம்ப்யூட்டரில் Google Docs, Sheets அல்லது Slidesஸின் முகப்புத் திரைக்குச் செல்லவும்.
  2. மேல் இடது மூலையில் மெனு மெனு அதன் பிறகு அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. "வலப்புறத்திலிருந்து இடப்புறமாக எழுதும் மொழிக்கான கட்டுப்பாடுகளை எப்போதும் காட்டு" என்பதற்கு அடுத்துள்ள பெட்டியைக் கிளிக் செய்யவும்.
  4. சரி என்பதைக் கிளிக் செய்யவும். அமைப்புகள் தற்போது Google Docs, Sheets, Slides ஆகியவற்றில் அமைக்கப்படும்.

வலப்புறத்திலிருந்து இடப்புறமாக எழுதும் மொழிக்கான கட்டுப்பாடுகளைப் பயன்படுத்துதல்

வலப்புறத்திலிருந்து இடப்புறமாக எழுதும் மொழிகளுக்கான கட்டுப்பாடுகளை இயக்கியபிறகு வலப்புறத்திலிருந்து இடப்புறமாக எழுதும் மொழியின் உரையைக் கொண்ட ஆவணங்களின் தளவமைப்பை மாற்ற முடியும். 

Google Docs

பத்தியின் அமைவை மாற்றுதல்

  1. கம்ப்யூட்டரில் Google Docsஸுக்குச் செல்லவும்.
  2. வலப்புறத்திலிருந்து இடப்புறமாக எழுதும் மொழியின் உரையைக் கொண்ட ஆவணத்தைத் திறக்கவும்.
  3. பத்தியின் அமைவை மாற்ற கருவிப்பட்டியில் பத்தியின் அமைவைக் paragraph direction கிளிக் செய்யவும்.

டேபிளின் அமைவை மாற்றுதல் (நெடுவரிசை அமைவு)

  1. கம்ப்யூட்டரில் Google Docsஸுக்குச் செல்லவும்.
  2. ஆவணத்தைத் திறக்கவும்.
  3. வடிவம் அதன் பிறகு டேபிள் அதன் பிறகு டேபிளின் பண்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. "நெடுவரிசையின் அமைவு" என்ற பிரிவில் வலப்புறத்தில் இருந்து இடபுறம் என்பதையோ இடப்புறத்திலிருந்து வலப்புறம் என்பதையோ தேர்வு செய்யவும்.
Google Sheets

குறிப்பிட்ட தாளுக்கான நெடுவரிசைகளின் அமைவை மாற்றுதல்

  1. கம்ப்யூட்டரில் Google Sheetsஸுக்குச் செல்லவும்.
  2. வலப்புறத்திலிருந்து இடப்புறமாக எழுதும் மொழியின் உரையைக் கொண்ட விரிதாளைத் திறக்கவும்.
  3. கருவிப்பட்டியில் அமைவு right to left table direction என்பதைக் கிளிக் செய்யவும்.

கவனத்திற்கு: இந்த மாற்றம் தற்போதுள்ள தாளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும். பிற எல்லாத் தாள்களுக்கும் பயன்படுத்தப்படாது.

கலத்திற்குள் உள்ள உரையின் அமைவை மாற்றுதல்

  1. கம்ப்யூட்டரில் Google Sheetsஸுக்குச் செல்லவும்​.
  2. வலப்புறத்திலிருந்து இடப்புறமாக எழுதும் மொழியின் உரையைக் கொண்ட விரிதாளைத் திறக்கவும்.
  3. மாற்ற விரும்பும் உரையைக் கிளிக் செய்யவும்.
  4. கருவிப்பட்டியில் கலத்தின் அமைவு paragraph direction என்பதைக் கிளிக் செய்யவும்.

கவனத்திற்கு: வலப்புறத்திலிருந்து இடப்புறமாக எழுதும் மொழியின் உரையை கலத்திற்குள் உள்ளிட்டால் அதன் அமைவை Google Sheets தானாகவே வலப்புறத்திலிருந்து இடப்புற அமைவாக மாற்றும். இடப்புறத்திலிருந்து வலப்புறமாக எழுதும் மொழியின் உரையை உள்ளிடத் தொடங்கினால் அமைவு பழைய நிலைக்கு மாறிவிடும்.

Google Slides

பத்தியின் அமைவை மாற்றுதல்

  1. கம்ப்யூட்டரில் Google Slidesஸுக்குச் செல்லவும்.
  2. வலப்புறத்திலிருந்து இடப்புறமாக எழுதும் மொழியின் உரையைக் கொண்ட விளக்கக்காட்சியைத் திறக்கவும்.
  3. மாற்ற விரும்பும் உரையைக் கிளிக் செய்யவும்.
  4. வடிவத்திற்கான கருவிப்பட்டியில் பத்தியின் அமைவு paragraph direction என்பதைக் கிளிக் செய்யவும்.
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
9646758345654380312
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false