வலப்புறத்திலிருந்து இடப்புறமாக எழுதும் உரையைக் கொண்ட ஆவணத்தையோ, விரிதாளையோ, விளக்கக்காட்சியையோ திறக்கும்போது அல்லது வலப்புறத்திலிருந்து இடப்புறமாக எழுதும் மொழியில் உரையை சேர்க்கும்போது வலப்புறத்திலிருந்து இடப்புறமாக எழுதும் கட்டுபாடுகள் தானாக இயங்கும். வலப்புறத்திலிருந்து இடப்புறமாக எழுதும் மொழிகளின் கட்டுபாடுகளை நீங்களே இயக்கலாம்.
வலப்புறத்திலிருந்து இடப்புறமாக எழுதும் மொழிக்கான கட்டுப்பாடுகளை இயக்கவும்
இதை கம்ப்யூட்டரில் இயக்கியபிறகே உரையை வலப்புறத்திலிருந்து இடப்புறமாக எழுதவும் பார்க்கவும் திருத்தவும் முடியும்.
வலப்புறத்திலிருந்து இடப்புறமாக எழுதும் மொழிக்கான கட்டுப்பாடுகளைப் பயன்படுத்துதல்
வலப்புறத்திலிருந்து இடப்புறமாக எழுதும் மொழிகளுக்கான கட்டுப்பாடுகளை இயக்கியபிறகு வலப்புறத்திலிருந்து இடப்புறமாக எழுதும் மொழியின் உரையைக் கொண்ட ஆவணங்களின் தளவமைப்பை மாற்ற முடியும். ஆவணத்தில் வலப்புறத்திலிருந்து இடப்புறமாக எழுதும் மொழியின் உரை இல்லையெனில் இந்தக் கட்டுப்பாடுகளை நீங்கள் பார்க்க முடியாது.
பத்தியின் அமைவை மாற்றுதல்
- உங்கள் iPhoneனிலோ iPadடிலோ Google Docs ஆப்ஸைத் திறக்கவும்.
- வலப்புறத்திலிருந்து இடப்புறமாக எழுதும் மொழியின் உரையைக் கொண்ட ஆவணத்தைத் திறக்கவும்.
- திருத்து என்பதைத் தட்டவும்.
- வடிவம் பத்தி என்பதைத் தட்டவும்.
- பத்தியின் அமைவை மாற்ற பத்தியின் அமைவு என்பதைத் தட்டவும்.
டேபிளின் அமைவை மாற்றுதல் (நெடுவரிசை அமைவு)
- உங்கள் iPhoneனிலோ iPadடிலோ Google Docs ஆப்ஸைத் திறக்கவும்.
- வலப்புறத்திலிருந்து இடப்புறமாக எழுதும் மொழியின் உரையைக் கொண்ட ஆவணத்தைத் திறக்கவும்.
- திருத்து என்பதைத் தட்டவும்.
- டேபிளைத் தட்டவும்.
- வடிவம் டேபிள் என்பதைத் தட்டவும்.
- டேபிளின் அமைவை மாற்ற டேபிள் அமைவு என்பதைத் தட்டவும்.
கவனத்திற்கு: ஃபோனின் மொழி அமைப்பில் வலப்புறத்திலிருந்து இடப்புறமாக எழுதும் மொழியை அமைத்திருந்தால் வலப்புறத்திலிருந்து இடப்புறமாக எழுதும் மொழிக்கான கட்டுப்பாடுகள் தானாகவே இயக்கப்படும்.
பத்தியின் அமைவை மாற்றுதல்
- உங்கள் iPhoneனிலோ iPadடிலோ Google Slides ஆப்ஸைத் திறக்கவும்.
- வலப்புறத்திலிருந்து இடப்புறமாக எழுதும் மொழியின் உரையைக் கொண்ட விளக்கக்காட்சியைத் திறக்கவும்.
- மாற்ற விரும்பும் உரையைத் தட்டவும்.