வலதுபுறத்திலிருந்து இடதுபுறமாக உரையைத் திருத்துதல் & பார்த்தல்

வலப்புறத்திலிருந்து இடப்புறமாக எழுதும் உரையைக் கொண்ட ஆவணத்தையோ, விரிதாளையோ, விளக்கக்காட்சியையோ திறக்கும்போது அல்லது வலப்புறத்திலிருந்து இடப்புறமாக எழுதும் மொழியில் உரையை சேர்க்கும்போது வலப்புறத்திலிருந்து இடப்புறமாக எழுதும் கட்டுபாடுகள் தானாக இயங்கும். வலப்புறத்திலிருந்து இடப்புறமாக எழுதும் மொழிகளின் கட்டுபாடுகளை நீங்களே இயக்கலாம்.

வலப்புறத்திலிருந்து இடப்புறமாக எழுதும் மொழிக்கான கட்டுப்பாடுகளை இயக்கவும்

இதை கம்ப்யூட்டரில் இயக்கியபிறகே உரையை வலப்புறத்திலிருந்து இடப்புறமாக எழுதவும் பார்க்கவும் திருத்தவும் முடியும்.

வலப்புறத்திலிருந்து இடப்புறமாக எழுதும் மொழிக்கான கட்டுப்பாடுகளைப் பயன்படுத்துதல்

வலப்புறத்திலிருந்து இடப்புறமாக எழுதும் மொழிகளுக்கான கட்டுப்பாடுகளை இயக்கியபிறகு வலப்புறத்திலிருந்து இடப்புறமாக எழுதும் மொழியின் உரையைக் கொண்ட ஆவணங்களை மாற்ற முடியும். ஆவணத்தில் வலப்புறத்திலிருந்து இடப்புறமாக எழுதும் மொழியின் உரை இல்லையெனில் இந்தக் கட்டுப்பாடுகளை நீங்கள் பார்க்க முடியாது.

Google Docs

பத்தியின் அமைவை மாற்றுதல்

  1. உங்கள் Android ஃபோனிலோ டேப்லெட்டிலோ Google Docs Docs ஆப்ஸைத் திறக்கவும்.
  2. வலப்புறத்திலிருந்து இடப்புறமாக எழுதும் மொழியின் உரையைக் கொண்ட ஆவணத்தைத் திறக்கவும்.
  3. திருத்து திருத்து என்பதைத் தட்டவும்.
  4. வடிவம் வடிவமைப்பு அதன் பிறகு பத்தி என்பதைத் தட்டவும்.
  5. பத்தியின் அமைவை மாற்ற பத்தியின் அமைவு paragraph direction என்பதைத் தட்டவும்.

கவனத்திற்கு: ஃபோனின் மொழி அமைப்பில் வலப்புறத்திலிருந்து இடப்புறமாக எழுதும் மொழியை அமைத்திருந்தால் வலப்புறத்திலிருந்து இடப்புறமாக எழுதும் மொழிக்கான கட்டுப்பாடுகள் தானாகவே இயக்கப்படும்.

Google Sheets

குறிப்பிட்ட தாளுக்கான நெடுவரிசைகளின் அமைவை மாற்றுதல்

  1. உங்கள் Android ஃபோனிலோ டேப்லெட்டிலோ Google Sheets Sheets ஆப்ஸைத் திறக்கவும்.
  2. வலப்புறத்திலிருந்து இடப்புறமாக எழுதும் மொழியின் உரையைக் கொண்ட விரிதாளைத் திறக்கவும்.
  3. தாளின் தாவலுக்குக் கீழே கீழ் நோக்கிய அம்புக்குறியைத்கீழ்நோக்கிய அம்புக்குறி தட்டவும்.
  4. விரிதாள் கட்டத்தின் அமைவை மாற்றுவதற்கு 'வலப்புறத்திலிருந்து இடப்புறம்' என்பதைத் தட்டவும்.

கவனத்திற்கு: இந்த மாற்றம் தற்போதுள்ள தாளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும். பிற எல்லாத் தாள்களுக்கும் பயன்படுத்தப்படாது.

Google Slides

பத்தியின் அமைவை மாற்றுதல்

  1. உங்கள் Android ஃபோனிலோ டேப்லெட்டிலோ Google SlidesSlides ஆப்ஸைத் திறக்கவும்.
  2. வலப்புறத்திலிருந்து இடப்புறமாக எழுதும் மொழியின் உரையைக் கொண்ட விளக்கக்காட்சியைத் திறக்கவும்.
  3. மாற்ற விரும்பும் உரையைத் தட்டவும்.
  4. வடிவம் வடிவமைப்பு அதன் பிறகு பத்தி என்பதைத் தட்டவும்.
  5. பத்தியின் அமைவை மாற்ற பத்தியின் அமைவு paragraph direction என்பதைத் தட்டவும்.

கவனத்திற்கு: ஃபோனின் மொழி அமைப்பில் வலப்புறத்திலிருந்து இடப்புறமாக எழுதும் மொழியை அமைத்திருந்தால் வலப்புறத்திலிருந்து இடப்புறமாக எழுதும் மொழிக்கான கட்டுப்பாடுகள் தானாகவே இயக்கப்படும்.

true
Visit the Learning Center

Using Google products, like Google Docs, at work or school? Try powerful tips, tutorials, and templates. Learn to work on Office files without installing Office, create dynamic project plans and team calendars, auto-organize your inbox, and more.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
379679492729262082
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false