உங்கள் பிசினஸிற்கு மேம்பட்ட Google Workspace அம்சங்கள் தேவையா?
இன்றே Google Workspaceஸைப் பயன்படுத்திப் பாருங்கள்!
இணைய இணைப்பு இல்லாவிட்டாலும் பின்வருவனவற்றில் கோப்புகளை உருவாக்கலாம் பார்க்கலாம் திருத்தலாம்:
- Google Docs
- Google Sheets
- Google Slides
சமீபத்திய கோப்புகளை ஆஃப்லைனில் கிடைக்கும்படி செய்தல்
- உங்கள் Android மொபைலிலோ டேப்லெட்டிலோ Google Docs, Sheets அல்லது Slides ஆப்ஸைத் திறக்கவும்.
- மெனு அமைப்புகள்என்பதைத் தட்டவும்.
- சமீபத்திய கோப்புகளை ஆஃப்லைனில் கிடைக்கும்படி செய் என்பதைத் தட்டவும்.
குறிப்பிட்ட கோப்புகளை ஆஃப்லைனில் கிடைக்கும்படி செய்தல்
- உங்கள் Android மொபைலிலோ டேப்லெட்டிலோ Google Docs, Sheets அல்லது Slides ஆப்ஸைத் திறக்கவும்.
- கோப்பிற்கு அடுத்துள்ள, மேலும் என்பதைத் தட்டவும்.
- கோப்பினை ஆஃப்லைனில் சேமிக்க ஆஃப்லைனில் கிடைக்கும்படி செய் என்பதைத் தட்டவும்.