ஆவணத்தின் மேலோட்டங்கள், சுருக்கவிவரங்கள், ரூலர்கள், அச்சிட முடியாத எழுத்துகள் ஆகியவற்றைக் காட்டுதல்

"ஆவண வெளிக்கோடு" அம்சத்தின் மூலம் Google ஆவணத்தைக் கட்டமைக்க முடியும். உங்கள் ஆவணத்தை ஒழுங்கமைக்க உதவும் வகையில் அதன் உள்ளடக்கத்தில் இருக்கும் தலைப்புகளைக் கண்டறிந்து மேலோட்டம் பட்டியலிடுகிறது. உங்கள் ஆவணத்திற்கான சுருக்கவிவரத்தையும் மேலோட்டத்தில் சேர்க்கலாம். அத்துடன் ஆவணத்தை ஃபார்மேட் செய்ய உதவ ரூலர்களையும் அச்சிட முடியாத எழுத்துகளையும் காட்டலாம் மறைக்கலாம்.

ஆவணத்தின் மேலோட்டத்தைப் பயன்படுத்திப் பணியாற்றுதல்

  1. Google Docsஸில் ஆவணத்தைத் திறக்கவும்.
  2. மேலோட்டத்தைத் திறக்க, காட்டு அதன் பிறகு மேலோட்டத்தைக் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும். இடதுபுறத்தில் மேலோட்டம் காட்டப்படும்.
ஆவணத்தின் மேலோட்டத்தை மூடுதல்
  1. ஆவணத்தின் மேலோட்டத்தைத் தற்காலிகமாக மூட: இடதுபுறத்தில், "மேலோட்டம்" என்பதற்கு அடுத்துள்ள ஆவணத்தின் மேலோட்டத்தை மூடுக  திரும்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. ஆவணத்தின் மேலோட்டத்தை முழுமையாக மறைக்க: மேலே, காட்டு அதன் பிறகு மேலோட்டத்தைக் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும். 

உதவிக்குறிப்பு: “மேலோட்டத்தைக் காட்டு” என்பதற்கு அடுத்து தேர்வுக்குறி இருந்தால் ஆவணத்தின் மேல் இடதுபுறத்தில் இன்னமும் ஆவணத்தின் மேலோட்ட ஐகான் Docsஸின் வெளிக்கோடு ஐகான் காட்டப்படும். 

மேலோட்டத்தில் தலைப்புகளைச் சேர்த்தல்

Google Docs வெளிக்கோட்டில் தானாகவே தலைப்புகளைச் சேர்க்கும். ஆனால் அதை நேரடியாகவும் நீங்கள் சேர்க்க முடியும்.

  1. Google Docsஸில் ஆவணத்தைத் திறக்கவும்.
  2. வெளிக்கோட்டுத் தலைப்பிற்கு உரையைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. மேலே சாதாரண உரை என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. தலைப்பின் நடையைக் கிளிக் செய்யவும். வெளிக்கோட்டில் தலைப்பு சேர்க்கப்படும்.

கவனத்திற்கு: மேலோட்டத்தில் துணைத்தலைப்புகள் தோன்றாது.

உங்கள் ஆவண வெளிகோட்டில் அகற்றப்பட்ட தலைப்பை எவ்வாறு மீண்டும் சேர்ப்பது என்பதை அறிக.

மேலோட்டத்தில் இருந்து தலைப்புகளை அகற்றுதல்
  1. Google Docsஸில் ஆவணத்தைத் திறக்கவும்.
  2. ஆவண வெளிக்கோட்டில் அகற்ற விரும்பும் தலைப்பின் மீது கர்சரை வைக்கவும்.
  3. தலைப்பின் வலதுபுறத்தில் வெளிகோட்டில் இருந்து அகற்று மேலோட்டத்திலிருந்து அகற்று என்பதைக் கிளிக் செய்யவும்.

வெளிக்கோட்டில் தலைப்பை மீண்டும் சேர்த்தல்

  1. அகற்றிய தலைப்பைத் தேர்ந்தெடுக்கவும்.
  2. தேர்வில் வலது கிளிக் செய்யவும்.
  3. ஆவணத்தில் வெளிக்கோட்டில் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
ஆவணத்திற்குள் உலாவ மேலோட்டத்தைப் பயன்படுத்துதல்
  1. Google Docsஸில் ஆவணத்தைத் திறக்கவும்.
  2. காட்டு அதன் பிறகு மேலோட்டத்தைக் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும். இடதுபுறத்தில் மேலோட்டம் காட்டப்படும்.
  3. ஆவணத்தில் நீங்கள் செல்ல விரும்பும் தலைப்பைக் கிளிக் செய்யவும். ஆவணத்தில் அந்த இடத்திற்குச் செல்வீர்கள்.
முந்தைய ஆவணங்களுக்கான சுருக்கவிவரங்களைக் கண்டறிதல்
மார்ச் 21, 2024 முதல் Google Docsஸில் சுருக்கவிவரம் கிடைக்காது.

இனி Google Docsஸின் இடதுபுறப் பேனலில் ஆவணத்திற்கான சுருக்கவிவரங்கள் காட்டப்படாது. உங்களுக்கு அணுகல் உள்ள ஆவணங்களுக்கான சுருக்கவிவரங்களைக் கண்டறிய, Driveவில் உள்ள ஆவணங்களைத் திறக்கவும்.

  1. Google Driveவில் நீங்கள் திறக்க விரும்பும் ஆவணத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  2. வலதுபுறத்தில் உள்ள மூன்று புள்ளி மெனுவை மேலும் கிளிக் செய்யவும்.
  3. கீழ்நோக்கிய அம்புக்குறியை அழுத்தி அதன் பிறகு ஃபைல் தகவல்கள் என்பதற்குச் சென்று அதன் பிறகு விவரங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. கீழே ஸ்க்ரோல் செய்து 'விளக்கம்' பிரிவிற்குச் செல்லவும்.
    • பயனர்கள் இங்கிருந்தே சுருக்கவிவரத்தைச் சேர்க்கலாம் திருத்தலாம் நீக்கலாம்.

ரூலர்களைக் காட்டுதல் மறைத்தல்

உங்கள் ஆவணத்தில் உள்ள உரை, கிராஃபிக்ஸ் அல்லது டேபிள்களைச் சீரமைக்க உதவுவதற்கு கிடைமட்ட மற்றும் செங்குத்து ரூலர்களைப் பயன்படுத்த முடியும்.  ஆவணத்தைத் திறக்கும்போது ரூலர்கள் தானாகேவே காட்டப்படும். ரூலர்களை மறைக்க:

  1. ஆவணத்தின் மேற்புறத்தில் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. ரூலரைக் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.

உதவிக்குறிப்பு: மீண்டும் ரூலரைக் காட்ட ரூலரைக் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.

அச்சிட முடியாத எழுத்துகளைக் காட்டுதல்/மறைத்தல்

ஆவணம் எப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது என்று பார்க்க அச்சிட முடியாத எழுத்துகளை நீங்கள் பயன்படுத்தலாம். அச்சிட முடியாத எழுத்துகள் நீல நிறத்தில் காட்டப்படும். அத்துடன் ஆவணத்தில் எங்கெல்லாம் பின்வருபவை உள்ளன என்பதும் காட்டப்படும்:

  • பத்தி முறிப்புகள்
  • வரி முறிப்புகள்
  • பிரிவு முறிப்புகள்
  • பக்க முறிப்புகள்
  • நெடுவரிசை முறிப்புகள்
  • தாவல்கள்
  • இடைவெளிகள்

அச்சிட முடியாத எழுத்துகளைக் காட்ட:

  1. ஆவணத்தின் மேல்புறத்தில் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. அச்சிட முடியாத எழுத்துகளைக் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.

உதவிக்குறிப்பு: எழுத்துகளை மறைக்க அச்சிட முடியாத எழுத்துகளைக் காட்டு என்பதை மீண்டும் கிளிக் செய்யவும்.

தொடர்புடைய கட்டுரைகள்

தலைப்புகள், உட்தலைப்புகள் ஆகியவற்றைச் சேர்த்தல் மற்றும் ஆவணத்தின் நடையைப் பிரத்தியேகமாக்குதல்.

true
Visit the Learning Center

Using Google products, like Google Docs, at work or school? Try powerful tips, tutorials, and templates. Learn to work on Office files without installing Office, create dynamic project plans and team calendars, auto-organize your inbox, and more.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
7923332080319906232
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false