தரவை நெடுவரிசைகளாகப் பிரித்தல்
காற்புள்ளியால் பிரிக்கப்பட்ட உரை போன்ற துல்லியமாக வரையறுக்கப்பட்ட தரவை, Google Sheets மூலம் பல நெடுவரிசைகளாகப் பிரிக்கலாம். எடுத்துக்காட்டாக "Last name, First name" என்பதைக் கொண்ட நெடுவரிசையை "Last name" & "First name" என்ற இரு நெடுவரிசைகளாகப் பிரிக்கலாம்.
- கம்ப்யூட்டரில் Google Sheetsஸில் விரிதாளைத் திறக்கவும்.
- தாளில் ஏற்கெனவே தரவு இருந்தால் பிரிக்க விரும்பும் கலங்களைத் தேர்ந்தெடுக்கவும்.
- தரவு இல்லையெனில் நகலெடுத்து ஒட்டவும்.
- மேலே உள்ள தரவு
வார்த்தைகளை நெடுவரிசைகளில் பிரி என்பதைக் கிளிக் செய்யவும்.
- தரவைப் பிரிக்க எந்த எழுத்தை Sheets பயன்படுத்துகிறது என்பதை மாற்ற ”பிரிப்பான்” என்பதற்கு அடுத்துள்ள கீழ் தோன்றும் மெனுவைக் கிளிக் செய்யவும்.
- உரையைப் பிரித்த பிறகு நெடுவரிசைகள் எப்படி விரியும் என்பதைச் சரிசெய்ய “பிரிப்பான்” என்பதற்கு அடுத்துள்ள மெனு
தானாகக் கண்டறி என்பதைக் கிளிக் செய்யவும்.
கவனத்திற்கு: தரவை ஒட்டிய பிறகு ஒட்டு
உரையை நெடுவரிசைகளாகப் பிரி என்பதைக் கிளிக் செய்யலாம்.
ஒரே தரவைக் கொண்ட வரிசைகளை அகற்றுதல்
- உங்கள் கம்ப்யூட்டரில் Google Sheetsஸில் ஒரு விரிதாளைத் திறக்கவும்.
- நகல்கள் இருப்பவற்றை அகற்ற, தரவு வரம்பைத் தேர்ந்தெடுக்கவும்.
- ஒரே மாதிரியான மதிப்புகளைக் கொண்ட, ஆனால் வெவ்வேறு எழுத்து வகைகள், வடிவமைப்பு, சூத்திரங்கள் ஆகியவை உள்ள கலங்கள் நகல்களாகக் கருதப்படும்.
- மேலே உள்ள தரவு
தரவை அழி
நகல்களை அகற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
- எந்தெந்த நெடுவரிசைகளைச் சேர்க்க வேண்டும் என்பதையும் தரவில் தலைப்புகள் இருக்க வேண்டுமா வேண்டாமா என்பதையும் தேர்ந்தெடுக்கவும்.
- நகல்களை அகற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
கவனத்திற்கு: வரம்பிற்குள் ஒற்றைக் கலத்தைத் தேர்ந்தெடுத்தால் அந்த மொத்த வரம்பிற்கும் நகல்கள் அகற்றப்படும்.
கூடுதல் இடைவெளிகளை அகற்றுதல்
- உங்கள் கம்ப்யூட்டரில் Google Sheetsஸில் ஒரு விரிதாளைத் திறக்கவும்.
- தொடக்கத்திலும் இறுதியிலும் கூடுதல் இடைவெளிகளையும் இடையில் அதிகப்படியான இடைவெளிகளையும் கொண்டவற்றை அகற்ற, தரவு வரம்பைத் தேர்ந்தெடுக்கவும்.
- மேலே உள்ள தரவு
தரவை அழி
இடைவெளியை டிரிம் செய் என்பதைக் கிளிக் செய்யவும்.
கவனத்திற்கு:   போன்ற பிரிக்க இயலாத இடைவெளி டிரிம் செய்யப்படாது.