கலங்களின் வரம்பிற்குப் பெயரிடுதல்

வரம்புகளை இன்னும் சிறப்பாக டிராக் செய்யவும் தெளிவான சூத்திரங்களை உருவாக்கவும் Google Sheetsஸில் அவற்றுக்குப் பெயரிடலாம்.

உதாரணத்திற்கு கலங்களின் வரம்பை விவரிக்க "A1:B2" எனப் பயன்படுத்துவதற்குப் பதிலாக அதற்கு "budget_total எனப் பெயரிடலாம்". இப்படிப் பெயரிடுவதால் "=SUM(A1:B2, D4:E6)" என்பது போன்ற சூத்திரத்தை "=SUM(budget_total, quarter2)" என எழுதலாம்.

வரம்பிற்குப் பெயரிடுதல்

  1. Google Sheetsஸில் விரிதாளைத் திறக்கவும்.
  2. பெயரிட விரும்பும் கலங்களைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. தரவு அதன் பிறகு பெயரிட்ட வரம்புகள் என்பதைக் கிளிக் செய்யவும். வலதுபுறத்தில் மெனு தோன்றும்.

    உதவிக்குறிப்பு: இந்த மெனுவை விரைவாகத் திறக்க, மேல் இடதுபுறத்தில் உள்ள வரம்புப் பெட்டியில் 'கீழ் தோன்றும் மெனு கீழ்நோக்கிய அம்புக்குறி >  பெயரிட்ட வரம்புகளை நிர்வகி' என்பதைக் கிளிக் செய்யவும்.
     
  4. நீங்கள் விரும்பும் வரம்புப் பெயரை உள்ளிடவும்.
  5. வரம்பை மாற்ற விரிதாள் கட்டம் என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. விரிதாளில் வரம்பைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது உரைப் பெட்டியில் புதிய வரம்பை உள்ளிடவும், பிறகு சரி என்பதைக் கிளிக் செய்யவும்.
  7. முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.

வரம்புப் பெயர்கள்:

  • எழுத்துகள், எண்கள், அடிக்கோடுகள் ஆகியவற்றை மட்டுமே கொண்டிருக்க வேண்டும்.
  • எண்ணிலோ” "true"/"false” என்ற சொற்களிலோ தொடங்கக்கூடாது.
  • இடைவெளிகளோ நிறுத்தற்குறிகளோ இருக்கக்கூடாது.
  • 1-2500 எழுத்துகள் இருக்க வேண்டும்.
  • A1/R1C1 தொடரியலில் இருக்கக்கூடாது. உதாரணம்: வரம்பிற்கு ”A1:B2"/"R1C1:R2C2." என்பது போன்ற பெயரிட்டால் பிழை நேரிடலாம்.

பெயரிட்ட வரம்பைத் திருத்துதல்/நீக்குதல்

  1. Google Sheetsஸில் விரிதாளைத் திறக்கவும்.
  2. தரவு அதன் பிறகு பெயரிட்ட வரம்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. திருத்த/நீக்க விரும்பும் பெயரிட்ட வரம்பில் திருத்து திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. வரம்பைத் திருத்த புதிய பெயரையோ வரம்பையோ உள்ளிட்டு முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. பெயரிட்ட வரம்பை நீக்க பெயருக்கு அருகில் வரம்பை நீக்கு நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. அதன்பின் திறக்கும் மெனுவில் அகற்று என்பதைக் கிளிக் செய்யவும்.

கவனத்திற்கு:பெயரிட்ட வரம்பை நீக்கினால் அதைக் குறிக்கும் எந்தச் சூத்திரமும் வேலை செய்யாது. பெயரிட்ட வரம்பைக் குறிக்கும் பாதுகாக்கப்பட்ட வரம்புகள், கல மதிப்புகளைப் பயன்படுத்தித் தொடர்ந்து வேலை செய்யும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
2882600094528536464
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false