Google Docs, Sheets, Slides, Drawings ஆகியவற்றுக்கான அணுகலம்சங்கள்

Google Docs, Sheets, Slides, Drawings ஆகியவை ஸ்கிரீன் ரீடர்கள், பிரெய்ல் சாதனங்கள், திரையைப் பெரிதாக்கல் போன்ற பலவற்றைப் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

Docs எடிட்டர் உடன் TalkBack ஸ்கிரீன் ரீடர், ஸ்கிரீன் அளவைப் பெரிதாக்குதல் போன்ற Android அணுகல்தன்மை அம்சங்களைப் பயன்படுத்தலாம்.

TalkBack ஸ்கிரீன் ரீடரைப் பயன்படுத்துதல்

உங்கள் Android சாதனத்தில் TalkBack ஏற்கெனவே இயக்கத்தில் இல்லையெனில் TalkBackகை எப்படி இயக்குவது என்பது குறித்து அறிக. TalkBackகை இயக்கிய பிறகு கீழேயுள்ள உதவிக்குறிப்புகளைப் பயன்படுத்தவும்.

Docs ஆப்ஸ்

ஆவணத்தைக் கண்டறிதல்

  1. Docs ஆப்ஸைத் திறக்கவும்.
  2. நீங்கள் படிக்கவோ திருத்தவோ விரும்பும் ஆவணத்தைக் கண்டறிய ஆப்ஸில் தேடவும்.
    • புதிய ஆவண மெனு: வெற்று ஆவணத்தை உருவாக்கவோ டெம்ப்ளேட்டைப் பயன்படுத்தவோ இந்த மெனுவைப் பயன்படுத்தவும்.
    • வழிசெலுத்தல் டிராயர்: மேல் இடதுபக்கத்தில் வழிசெலுத்தல் டிராயரைக் கண்டறிவீர்கள். சமீபத்தியவை என்னுடன் பகிர்ந்தவை போன்ற விருப்பங்களைக் கண்டறிய இதைத் திறக்கவும்.
    • தேடல்: ஆவணத்தைத் தேடவும்.
    • ஆவணத்தைத் திறத்தல்: Google Driveவிலிருந்தோ உங்கள் சாதனச் சேமிப்பகத்திலிருந்தோ ஆவணத்தைத் திறக்கவும்.
    • கூடுதல் விருப்பங்கள்: இதன்படி வரிசைப்படுத்து, புதியதைச் சேர் அல்லது புதுப்பி போன்ற விருப்பங்களைக் கண்டறியவும்.

ஆவணத்தைப் படித்தல்

  1. Docs ஆப்ஸைத் திறக்கவும்.
  2. மையப்படுத்தலை ஆவணத்திற்கு நகர்த்தி, தேர்ந்தெடுப்பதற்கு இருமுறை தட்டவும்.
  3. ஆவணத்தைப் படிக்க வலதுபக்கம் ஸ்வைப் செய்யவும்.
  4. விருப்பத்திற்குரியது: ஆவணத்திற்குள் உங்கள் வழிசெலுத்தலின் நுணுக்கத்தை மாற்றவும்.
    • எழுத்துகள், சொற்கள் அல்லது பத்திகளின்படி செல்ல மேலே அல்லது கீழே ஸ்வைப் செய்யவும். உங்கள் ஆவணத்தில் நகர்த்துவதைத் தொடர வலதுபக்கம் ஸ்வைப் செய்யவும்.
    • வரிகளின்படி செல்ல கூடுதல் விருப்பங்கள் என்பதற்குச் சென்று அச்சிடல் தளவமைப்பு என்பதைத் தேர்ந்தெடுக்கவும். மையப்படுத்தலை ஆவண உரைக்கு நகர்த்திய பிறகு வரியின்படி செல்வதற்கான விருப்பத்தைக் கேட்கும்வரை மேலே அல்லது கீழே ஸ்வைப் செய்யவும். உங்கள் ஆவணத்தில் நகர்த்துவதைத் தொடர வலதுபக்கம் ஸ்வைப் செய்யவும்.
  5. படிப்பதை நிறுத்த திரையைத் தட்டவும்.

ஆவணத்தைத் திருத்துதல்

  1. Docs ஆப்ஸைத் திறக்கவும்.
  2. மையப்படுத்தலை ஆவணத்திற்கு நகர்த்தி, தேர்ந்தெடுப்பதற்கு இருமுறை தட்டவும்.
  3. மையப்படுத்தலைத் திருத்து பட்டனுக்கு நகர்த்திய பிறகு செயல்படுத்துவதற்உ இருமுறை தட்டவும்.
  4. பின்வரும் திருத்துவதற்கான கட்டுப்பாடுகளைப் பயன்படுத்த ஆப்ஸில் உலாவவும்: 
    • உலாவுவதற்கான பட்டன்களும் மெனுக்களும்: வலதுபக்கம், இடதுபக்கம், மேலே அல்லது கீழே ஸ்வைப் செய்யவும். 
    • நுணுக்கத்தன்மையைச் சரிசெய்தல் அல்லது கர்சரைக் கட்டுப்படுத்துதல்: மையப்படுத்துதலை ஆவணத்தின் உரைக்கு நகர்த்திய பிறகு மேலே ஸ்வைப் செய்து, பின்னர் அகச் சூழல் மெனுவைத் திறக்க வலதுபக்கம் ஸ்வைப் செய்யவும்.
    • ஸ்கிரீன் கீபோர்டைப் பயன்படுத்துதல்: கீபோர்டில் விரலால் இழுத்து விசையை உள்ளிட விரலை எடுக்கவும்.

உரையைத் தேர்ந்தெடுத்து, செயல்படுத்தல்

  1. கூடுதல் விருப்பங்கள் என்பதற்குச் சென்று தேர்வுக் கட்டுப்பாடு என்பதற்குச் செல்லவும்.
  2. மெனுவில் தேர்ந்தெடு, எல்லாம் தேர்ந்தெடு, நகலெடு, வெட்டு, ஒட்டு, கருத்திடு அல்லது பேச்சுத் தேர்வு வடிவமைப்பு போன்ற விருப்பங்களைத் தேர்வுசெய்யவும். மெனுவில் உள்ள விருப்பங்கள் நீங்கள் தேர்ந்தெடுப்பதைப் பொறுத்தே அமையும்.

கூட்டுப்பணியாளர் அறிவிப்புகளை முடக்குதல்

உங்கள் ஆவணத்தில் பிறர் நுழைவது அல்லது வெளியேறுவது குறித்த ஸ்கிரீன் ரீடர் அறிவிப்புகளை முடக்கலாம்.

  1. கூடுதல் விருப்பங்கள் என்பதற்குச் செல்லவும்.
  2. நுழைவது, வெளியேறுவது குறித்த அறிவிப்புகளை முடக்கு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

Sheets ஆப்ஸ்

விரிதாளைக் கண்டறிதல்

  1. Sheets ஆப்ஸைத் திறக்கவும்.
  2. நீங்கள் படிக்கவோ திருத்தவோ விரும்பும் விரிதாளைக் கண்டறிய ஆப்ஸில் தேடவும்.
    • புதிய விரிதாள் மெனு: வெற்று விரிதாளை உருவாக்கவோ டெம்ப்ளேட்டைப் பயன்படுத்தவோ இந்த மெனுவைப் பயன்படுத்தவும்.
    • வழிசெலுத்தல் டிராயர்: மேல் இடதுபக்கத்தில் வழிசெலுத்தல் டிராயரைக் கண்டறிவீர்கள். சமீபத்தியவை என்னுடன் பகிர்ந்தவை போன்ற விருப்பங்களைக் கண்டறிய இதைத் திறக்கவும்.
    • தேடுதல்: விரிதாளைத் தேடவும்.
    • விரிதாளைத் திறத்தல்: Google Driveவிலிருந்தோ உங்கள் சாதனச் சேமிப்பகத்திலிருந்தோ விரிதாளைத் திறக்கவும்.
    • கூடுதல் விருப்பங்கள்: இதன்படி வரிசைப்படுத்து, புதியதைச் சேர் அல்லது புதுப்பி போன்ற விருப்பங்களைக் கண்டறியவும்.

விரிதாளைத் திருத்துதல்

  1. Sheets ஆப்ஸைத் திறக்கவும்.
  2. மையப்படுத்தலை விரிதாளுக்கு நகர்த்தி, தேர்ந்தெடுப்பதற்கு இருமுறை தட்டவும்.
  3. கலத்தைப் படிப்பதற்கு மையப்படுத்தலை அதற்கு நகர்த்திய பிறகு அதைத் திருத்த இருமுறை தட்டவும்.

கலம் அல்லது வரம்பைத் தேர்ந்தெடுத்தல்

  1. Sheets ஆப்ஸைத் திறக்கவும்.
  2. மையப்படுத்தலை விரிதாளுக்கு நகர்த்தி, தேர்ந்தெடுப்பதற்கு இருமுறை தட்டவும்.
  3. கூடுதல் விருப்பங்கள் என்பதற்குச் சென்று கலத்தையோ வரம்பையோ தேர்ந்தெடுக்கவும். 
  4. திருத்தும் புலத்தை இயக்க இருமுறை தட்டவும்.
  5. கலத்தையோ (C3) முக்காற்புள்ளியால் பிரிக்கப்பட்ட வரம்பையோ (R4:R10) உள்ளிடவும் .
  6. சரி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

அறிவிப்புகளை மாற்றுதல்

  1. Sheets ஆப்ஸைத் திறக்கவும்.
  2. மையப்படுத்தலை விரிதாளுக்கு நகர்த்தி, தேர்ந்தெடுப்பதற்கு இருமுறை தட்டவும்.
  3. கூடுதல் விருப்பங்கள் என்பதற்குச் சென்று அணுகல்தன்மை அமைப்புகள் என்பதற்குச் செல்லவும். 
  4. அறிவிக்கப்படும் பண்புகளைத் தேர்வுசெய்ய வடிவமைப்புப் பண்புகளைப் படி என்பதை இயக்கவும். 
    • விருப்பத்திற்குரியது: உரை வடிவமைப்பு, கல வடிவமைப்பு, எண் வடிவமைப்பு, எழுத்துருக்களைச் சொற்களாகப் படிப்பதை இயக்கவும் அல்லது முடக்கவும்.
  5. கூட்டுப்பணியாளர் மாற்றங்களைக் கேட்க கூட்டுப்பணியாளர் மாற்றங்களைப் படி என்பதை இயக்கவும்.

கல வடிவமைப்பை மாற்றுதல்

  1. Sheets ஆப்ஸைத் திறக்கவும்.
  2. மையப்படுத்தலை விரிதாளுக்கு நகர்த்தி, தேர்ந்தெடுப்பதற்கு இருமுறை தட்டவும்.
  3. மையப்படுத்தலைக் கலத்திற்கு நகர்த்தி, தேர்ந்தெடுப்பதற்கு இருமுறை தட்டவும். 
  4. கருவிப்பட்டியில் உள்ள வடிவமைப்பு பட்டன்களைப் பயன்படுத்த தொட்டு அறிக.

Slides ஆப்ஸ்

விளக்கக்காட்சியைக் கண்டறிதல்

  1. Slides ஆப்ஸைத் திறக்கவும்.
  2. நீங்கள் படிக்கவோ திருத்தவோ விரும்பும் விளக்கக்காட்சியைக் கண்டறிய ஆப்ஸில் தேடவும்.
    • புதிய விளக்கக்காட்சி மெனு: வெற்று விளக்கக்காட்சியை உருவாக்கவோ டெம்ப்ளேட்டைப் பயன்படுத்தவோ இந்த மெனுவைப் பயன்படுத்தவும்.
    • வழிசெலுத்தல் டிராயர்: மேல் இடதுபக்கத்தில் வழிசெலுத்தல் டிராயரைக் கண்டறிவீர்கள். சமீபத்தியவை என்னுடன் பகிர்ந்தவை போன்ற விருப்பங்களைக் கண்டறிய இதைத் திறக்கவும்.
    • தேடல்: விளக்கக்காட்சியைத் தேடவும்.
    • விளக்கக்காட்சியைத் திறத்தல்: Google Driveவிலிருந்தோ உங்கள் சாதனச் சேமிப்பகத்திலிருந்தோ விளக்கக்காட்சியைத் திறக்கவும்.
    • கூடுதல் விருப்பங்கள்: இதன்படி வரிசைப்படுத்து, புதியதைச் சேர் அல்லது புதுப்பி போன்ற விருப்பங்களைக் கண்டறியவும்.

விளக்கக்காட்சியைப் படித்தல்

  1. Slides ஆப்ஸைத் திறக்கவும்.
  2. மையப்படுத்தலை விளக்கக்காட்சிக்கு நகர்த்தி, தேர்ந்தெடுப்பதற்கு இருமுறை தட்டவும்.
  3. விளக்கக்காட்சியைப் படிக்க வலதுபக்கம் ஸ்வைப் செய்யவும்.
  4. செல்வதற்கு இந்த உதவிக்குறிப்புகளைப் பயன்படுத்தவும்:
    • மையப்படுத்தலை நகர்த்துதல்:வலதுபக்கம் அல்லது இடதுபக்கம் ஸ்வைப் செய்யவும்.
    • அடுத்த அல்லது முந்தைய ஸ்லைடுக்குச் செல்லுதல்: இடதுப்பக்கம் அல்லது வலதுபக்கம் இரு விரல்களால் ஸ்வைப் செய்யவும்.
    • பெரிதக்குதல் அல்லது சிறிதாக்குதல்: இரு விரல்களால் பின்ச் செய்யவும்.
    • கேன்வாஸை நகர்த்துதல்: திரையின் மீது இரு விரல்களால் இழுக்கவும்.

வடிவங்களைத் தேர்ந்தெடுத்தல், திருத்துதல், தேர்வு நீக்குதல் 

  1. Slides ஆப்ஸைத் திறக்கவும்.
  2. மையப்படுத்தலை விளக்கக்காட்சிக்கு நகர்த்தி, தேர்ந்தெடுப்பதற்கு இருமுறை தட்டவும்.
  3. மையப்படுத்தலை வடிவத்திற்கு நகர்த்தி, தேர்ந்தெடுப்பதற்கு இருமுறை தட்டவும்.
  4. தேர்ந்தெடுத்த வடிவத்தைத் திருத்த மீண்டும் இருமுறை தட்டவும்.
  5. எல்லா வடிவங்களையும் தேர்வுநீக்க மையப்படுத்தலை கேன்வாஸிற்கு நகர்த்திய பிறகு இருமுறை தட்டவும்.

வடிவத்தை நகர்த்துதல்

  1. Slides ஆப்ஸைத் திறக்கவும்.
  2. மையப்படுத்தலை விளக்கக்காட்சிக்கு நகர்த்தி, தேர்ந்தெடுப்பதற்கு இருமுறை தட்டவும்.
  3. மையப்படுத்தலை வடிவத்திற்கு நகர்த்தவும்.
  4. ”வடிவங்களை நகர்த்த இழுக்கவும்” என்பதைக் கேட்கும் வரை இருமுறை தட்டிப் பிடிக்கவும். 
  5. வடிவத்தை நகர்த்த விரலால் இழுக்கவும்.

வடிவத்தைச் சுழற்றுதல்

  1. Slides ஆப்ஸைத் திறக்கவும்.
  2. மையப்படுத்தலை விளக்கக்காட்சிக்கு நகர்த்தி, தேர்ந்தெடுப்பதற்கு இருமுறை தட்டவும்.
  3. மையப்படுத்தலை வடிவத்திற்கு நகர்த்தி, தேர்ந்தெடுப்பதற்கு இருமுறை தட்டவும்.
  4. சுழற்றுவதற்கான ஹேண்டிலை மையப்படுத்தும் வரை வலதுபக்கம் ஸ்வைப் செய்யவும்.
  5. ”வடிவங்களைச் சுழற்ற இழுக்கவும்” என்பதைக் கேட்கும் வரை இருமுறை தட்டிப் பிடிக்கவும். 
  6. வடிவத்தைச் சுழற்ற விரலால் இழுக்கவும்.

கூட்டுப்பணியாளர் அறிவிப்புகளை முடக்குதல்

உங்கள் விளக்கக்காட்சியில் பிறர் நுழைவது அல்லது வெளியேறுவது குறித்த ஸ்கிரீன் ரீடர் அறிவிப்புகளை முடக்கலாம்.

  1. கூடுதல் விருப்பங்கள் என்பதற்குச் செல்லவும்.
  2. நுழைவது, வெளியேறுவது குறித்த அறிவிப்புகளை முடக்கு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

கீபோர்ட் ஷார்ட்கட்களைப் பயன்படுத்துதல்

உங்கள் சாதனத்துடன் இணைக்கப்பட்ட கீபோர்டைப் பயன்படுத்தினால் Docs, Sheets, Slides ஆகிய ஆப்ஸில் கீபோர்ட் ஷார்ட்கட்களைப் பயன்படுத்தலாம். Android ஷார்ட்கட்களின் பட்டியலுக்கு Docs ஷார்ட்கட்கள், Sheets ஷார்ட்கட்கள், Slides ஷார்ட்கட்கள் ஆகியவற்றைப் பார்க்கவும்.

பிரெய்ல் காட்சியைப் பயன்படுத்துதல்

Docs & Slides ஆப்ஸில் உரையைப் படிக்கவும் உள்ளிடவும் பிரெய்ல் காட்சியைப் பயன்படுத்தலாம். பிரெய்ல் ஆதரவு குறித்து அறிக.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
12818468949070426183
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false