உங்கள் தரவு குறித்த கேள்வியைக் கேட்டு பரிந்துரைக்கப்படும் உள்ளடக்கத்தைப் பெறுதல்


               

உங்கள் பிசினஸிற்கு மேம்பட்ட Google Workspace அம்சங்கள் தேவையா?

இன்றே Google Workspaceஸைப் பயன்படுத்திப் பாருங்கள்!

 

 

முக்கியம்: ஜூலை 30, 2024க்குப் பிறகு Google Docs, Sheets, Slides ஆகியவற்றில் ஆய்வு கண்டறி அம்சம் கிடைக்காது. Sheetsஸில் 'நிபந்தனை வடிவமைப்பைத் திறத்தல்', Docsஸில் 'பக்கவரிசையற்ற பயன்முறைக்குச் செல்லுதல்', Slidesஸில் 'டெம்ப்ளேட்டுகளைத் திறத்தல்' போன்ற செயல்களைச் செய்ய Docs, Sheets, Slides ஆகியவற்றில் உள்ள மெனு உதவிக் கருவியை நீங்கள் பயன்படுத்தலாம். பின்வருவன போன்ற உள்ளடக்கங்களை உருவாக்க “@” என்று டைப் செய்து, காட்டப்படும் விருப்பங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்: 

  • கீழ்த்தோன்றல்கள், ஈமோஜிகள் மற்றும் நபர் சிப்கள் 
  • Docsஸில் மீட்டிங் குறிப்புகள் மற்றும் மின்னஞ்சல் வரைவுகள்
  • Sheetsஸில் நிதிச் சிப்கள்

உங்கள் விரிதாளில் உள்ள தரவு பற்றி கேள்விகள் கேட்கலாம். உங்கள் தரவின் அடிப்படையில் வடிவமைப்பு, விளக்கப்படங்கள், பகுப்பாய்வு ஆகியவற்றுக்கான பரிந்துரைகளைப் பெறுவீர்கள்.

உங்கள் தரவு பற்றிய கேள்விகள் கேட்டல்

கவனத்திற்கு: இந்த அம்சம் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது.

  1. உங்கள் கம்ப்யூட்டரில் Google Sheetsஸில் ஒரு விரிதாளைத் திறக்கவும்.
  2. கீழ் வலதுபக்கத்தில் கண்டறிExplore என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. வேறு தாளில் உள்ள தரவு பற்றி கேள்விகள் கேட்க விரும்பினால், மேல் வலதுபக்கத்தில் திருத்து என்பதைக் கிளிக் செய்து உங்கள் மாற்றங்களைச் செய்யவும்.
  4. ”பதில்கள்” என்பதற்குக் கீழ் உள்ள பெட்டியில் உங்கள் கேள்வியை உள்ளிட்டு Enter விசையை உள்ளிடவும்.
  5. பதில்களைக் கண்டறிய உரைப் பெட்டியின் கீழ் உள்ள கேள்வியைக் கிளிக் செய்யவும்.
எடுத்துக்காட்டுகளைக் காட்டு

இந்தக் கேள்விகளைக் கேட்கலாம்:

  • "Which person has the top score?"
    • ”person”, “score” ஆகியவை உங்கள் விரிதாளில் இருப்பதை உறுதிசெய்யவும்.
  • "Total sales in September 2017?"
    • உங்கள் விரிதாளில் “sales”, “date” ஆகிய நெடுவரிசைகள் இருப்பதை உறுதிசெய்யவும்.
  • "What’s the sum of price by salesperson?"
    • உங்கள் விரிதாளில் “price”, “salesperson” ஆகிய நெடுவரிசைகள் இருப்பதை உறுதிசெய்யவும்.

பொருந்தாத கேள்விகள்:

  • "How do I bold this cell?" என்பது போன்ற உதவி குறித்த கேள்விகள்
  • "What’s the weather?" என்பது போன்ற இணையத்தில் தேடும் கேள்விகள்

பின்னணிகளுக்கான மாற்று வண்ணங்களைத் தானாகச் சேர்த்தல்

  1. உங்கள் கம்ப்யூட்டரில் Google Sheetsஸில் ஒரு விரிதாளைத் திறக்கவும்.
  2. கீழ் வலதுபக்கத்தில் கண்டறிExplore என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. "வடிவமைப்பு" என்பதற்குக் கீழ் ஒரு விருப்பத்தைத் தேர்வு செய்யவும்.

கவனத்திற்கு: கோப்பைத் திருத்துவதற்கான அனுமதி இருந்தால் மட்டுமே விரிதாளில் வடிவமைப்பைச் சேர்க்க முடியும்.

விளக்கப்படங்களையும் பகுப்பாய்வையும் தானாகப் பெறுதல்

  1. உங்கள் கம்ப்யூட்டரில் Google Sheetsஸில் ஒரு விரிதாளைத் திறக்கவும்.
  2. குறிப்பிட்ட தரவிற்கான தகவலைப் பெற கலங்களின் வரம்பைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. கீழ் வலதுபக்கத்தில் கண்டறிExplore என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. வேறு தாளில் உள்ள தரவிற்கான விளக்கப்படங்களையும் பகுப்பய்வையும் பெற விரும்பினால், மேல் வலதுபக்கத்தில் திருத்து என்பதைக் கிளிக் செய்து உங்கள் மாற்றங்களைச் செய்யவும்.
  5. விளக்கப்படத்தில் என்ன பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பார்க்க வலதுபக்கத்தில் இருக்கும் பேனலில் விளக்கப்படத்தின் மீது கர்சரை வைக்கவும்.

உங்கள் விரிதாளில் விளக்கப்படம், சூத்திரம் அல்லது பைவட் டேபிளைச் சேர்த்தல்

  1. உங்கள் கம்ப்யூட்டரில் Google Sheetsஸில் ஒரு விரிதாளைத் திறக்கவும்.
  2. கீழ் வலதுபக்கத்தில் கண்டறிExplore என்பதைக் கிளிக் செய்யவும். வேறு தாளில் உள்ள தரவிற்கான விளக்கப்படங்களையும் பகுப்பய்வையும் பெற விரும்பினால், மேல் வலதுபக்கத்தில் திருத்து என்பதைக் கிளிக் செய்து உங்கள் மாற்றங்களைச் செய்யவும்.
    • விளக்கப்படத்தைச் சேர்க்க அதை உங்கள் விரிதாளுக்குள் இழுக்கவும்.
    • சூத்திரத்தைச் சேர்க்க அதை உங்கள் விரிதாளுக்குள் இழுக்கவும்.
    • பைவட் டேபிளைச் சேர்க்க பைவட் டேபிளைச் செருகு சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.

கவனத்திற்கு: கோப்பைத் திருத்துவதற்கான அனுமதி இருந்தால் மட்டுமே விரிதாளில் விளக்கப்படம், சூத்திரம் அல்லது பைவட் டேபிளைச் சேர்க்க முடியும்.

பரிந்துரைகளைக் கண்டறிய முடியவில்லை

உலாவுதல் பேனலைத் திறந்து அதில் எந்தவித பரிந்துரைகளும் காட்டப்படவில்லை எனில் பின்வருபவை மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்து கொள்ளவும்:

  • விரிதாளோ தேர்ந்தெடுத்த வரம்போ காலியாக இல்லாமல் இருப்பது.
  • எண்கள், மீண்டும் மீண்டும் வரக்கூடிய உரை அல்லது மற்றொரு வகையிலான பேட்டர்னை உள்ளடக்கிய குறிப்பிட்ட தரவைத் தேர்ந்தெடுத்திருப்பது. உதாரணமாக பதில்களில் "ஆம்" / "இல்லை" என்பதைக் கொண்ட குறிப்பிட்ட தரவு.

தொடர்புடைய கட்டுரைகள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
Google ஆப்ஸ்
முதன்மை மெனு
11432148922510947987
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false