ஸ்க்ரீன் ரீடர் மூலம் கூட்டுப்பணியாற்றுதல் & கருத்திடுதல்

கவனத்திற்கு: கீழேயுள்ள படிகளைப் பின்பற்றுவதற்கு முன் Docs ஸ்க்ரீன் ரீடர் உதவியை இயக்கியுள்ளதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

கோப்பைப் பகிர்தல்

  1. உங்கள் உலாவிக்கான ஷார்ட்கட் விசையைப் பயன்படுத்தி கோப்பு மெனுவைத் திறக்கவும்:
    • Windowsஸில், Chromeமைப் பயன்படுத்தினால்: Alt + f
    • Windowsஸில் பிற உலாவிகளைப் பயன்படுத்தினால்: Alt + Shift + f 
    • Chrome OSஸில்: Alt + f
    • Macகில்: முதலில் Ctrl + Option + Tab ஆகிய விசைகளை அழுத்தி பிறகு Ctrl + Option + f  என்பதை அழுத்தவும்
  2. பகிர் என்பதைத் தேர்ந்தெடுத்து பகிர்தல் உரையாடலைப் பயன்படுத்தி பயனர்களைச் சேர்க்கவும்.

கோப்புகளைப் பகிர்வது குறித்து மேலும் அறிக.

நிகழ்நேரத்தில் பிறருடன் சேர்ந்து பணியாற்றுதல் 

உதவிக்குறிப்பு: நிகழ்நேரக் கூட்டுப்பணி அம்சம் ஆவணங்கள், விரிதாள்கள், விளக்கக்காட்சிகள், வரைபடங்கள் ஆகியவற்றிற்குக் கிடைக்கும். ஆனால் படிவங்களுக்குக் கிடைக்காது
பகிரப்பட்ட கோப்பைத் திருத்தும்போது பிற பயனர்கள் கோப்பிற்குள் நுழைவதையும் வெளியேறுவதையும் ஸ்க்ரீன் ரீடர் உங்களுக்கு அறிவிக்கும். ஆவணங்கள், விளக்கக்காட்சிகள் மற்றும் வரைபடங்களில் மற்றொரு பயனர் திருத்திக்கொண்டிருக்கும் உரை அல்லது படத்திற்கு அருகில் நீங்கள் செல்லும்போது அறிவிப்பைப் பெறுவீர்கள். 

Google Docs

தற்போது யார் ஆவணத்தைப் பயன்படுத்துகிறார் என்பதையக் கண்டறிவதற்கும் நிகழ்நேரத்தில் கூட்டுப்பணியாளர்களின் திருத்தங்கள் குறித்த விளக்கங்களைக் கேட்பதற்கும்:

உங்களின் அனைத்துக் கூட்டுப்பணியாளர்களின் திருத்தங்களையும் பின்தொடர்வதற்கு:

  1. ஸ்க்ரீன் ரீடர் ஆதரவை இயக்கியுள்ளீர்கள் என்பதை உறுதிசெய்து கொள்ளவும். 
  2. உங்களின் அனைத்துக் கூட்டுப்பணியாளர்கலின் நேரலைத் திருத்தங்களைக் கண்டறிய ஷார்ட்கட் விசையைப் பயன்படுத்தவும்:
    • Windows & Chrome OSஸில்: Ctrl + Alt + Shift + r
    • Macகில்: ⌘+Option+Shift+r

ஒரு கூட்டுப்பணியாளரின் திருத்தங்களைப் பின்தொடர்வதற்கு:

  1. ஸ்க்ரீன் ரீடர் ஆதரவை இயக்கியுள்ளீர்கள் என்பதை உறுதிசெய்து கொள்ளவும்.
  2. உங்கள் உலாவிக்கான ஷார்ட்கட் விசையைப் பயன்படுத்தி மெனு பட்டிக்குச் செல்லவும்:
    • Windowsஸில், Chromeமைப் பயன்படுத்தினால்: Alt + f
    • Windowsஸில் பிற உலாவிகளைப் பயன்படுத்தினால்: Alt + Shift + f 
    • Chrome OSஸில்: Alt + f
    • Macகில்: முதலில் Ctrl + Option + Tab ஆகிய விசைகளை அழுத்தி பிறகு Ctrl + Option + f  என்பதை அழுத்தவும்
  3. "கூட்டுப்பணியாளர்கள்" என்பதற்குச் செல்லும் வரை Shift + Tab ஆகிய விசைகளை அழுத்தவும். 
  4. பட்டியலில் உள்ள கூட்டுப்பணியாளரின் பெயரின் மீது Enter விசையை அழுத்தவும். நேரலைத் திருத்தங்களைப் பின்தொடர்வதற்கு கூட்டுப்பணியாளர் செயலிலேயே இருக்க வேண்டும்.

ஒன்று அல்லது பல கூட்டுப்பணியாளர்களின் முந்தைய திருத்தங்களுக்கு நகர்த்த பின்வரும் விசைகளைப் பயன்படுத்தவும்:

  • ஒரு மாற்றத்தின் மூலம் மேலோ கீழோ நகர்த்துதல்: மேல்நோக்கிய அல்லது கீழ்நோக்கிய அம்புக்குறி
  • 10 திருத்தங்கள் மூலம் மேலோ கீழோ நகர்த்துதல்: Page Up அல்லது Page Down
  • பட்டியலில் முதலில் அல்லது கடைசியாகத் திருத்தியதற்கு நகர்த்துதல்: Home அல்லது End
  • மாற்றம் மேற்கொள்ளப்படும் பகுதிக்குச் செல்லுதல்: மாற்றத்தில்எண்டர் விசையை அழுத்தவும்.

உதவிக்குறிப்புகள்:

  • ஆவணத்தில் பரிந்துரைக்கப்படும் திருத்தங்களும் கருத்துகளும் மாற்றங்களாகப் பட்டியலிடப்படாது. 
  • ஆவணத்தை முந்தைய பதிப்பிற்கு மீட்டெடுத்தால் மேற்கொண்ட மாற்றங்களை இழப்பீர்கள். 
  • பிறருடன் அரட்டை அடிப்பதற்கான அரட்டைச் சாளரத்தைத் திறப்பதற்கு Shift + Escape ஆகிய விசைகளை அழுத்தவும்.

Google Docs, Sheets, Slides & வரைபொருள்

கோப்பைத் தற்போது யார் பயன்படுத்துகிறார்கள் என்பதைக் கண்டறிய:

  1. உங்கள் உலாவிக்கான ஷார்ட்கட் விசையைப் பயன்படுத்தி மெனு பட்டிக்குச் செல்லவும்:
    • Windowsஸில், Chromeமைப் பயன்படுத்தினால்: Alt + f
    • Windowsஸில் பிற உலாவிகளைப் பயன்படுத்தினால்: Alt + Shift + f 
    • Chrome OSஸில்: Alt + f
    • Macகில்: முதலில் Ctrl + Option + Tab ஆகிய விசைகளை அழுத்தி பிறகு Ctrl + Option + f என்பதை அழுத்தவும் 
  2. "கூட்டுப்பணியாளர்கள்" என்பதற்குச் செல்லும் வரை Shift + Tab ஆகிய விசைகளை அழுத்தவும்.
  3. கோப்பில் பயனரின் இடத்திற்குச் செல்ல பட்டியலில் அந்தப் பயனர் பெயரின் மீது Enter விசையை அழுத்தவும்.

பிறருடன் அரட்டை அடிப்பதற்கான அரட்டைச் சாளரத்தைத் திறப்பதற்கு Shift + Escape ஆகிய விசைகளை அழுத்தவும்.

கூட்டுப்பணியாளர் அறிவிப்புகளை முடக்குதல்

ஆவணங்கள், விரிதாள்கள், விளக்கக்காட்சிகள் ஆகியவற்றில் பிறர் கோப்பில் நுழைவது, திருத்துவது அல்லது வெளியேறுவது குறித்த ஸ்கிரீன் ரீடர் அறிவிப்புகளை முடக்க முடியும்.

  1. கருவிகள் மெனுவில் அணுகலம்ச அமைப்புகள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  2. கூட்டுப்பணியாளர் அறிவிப்புகளை இயக்கு என்பதைத் தேர்வு நீக்கம் செய்யவும்.
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
17282284608271717431
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false