ஒரு Google கோப்பு அல்லது கோப்புறையைத் திறக்க முடியவில்லை

பணி அல்லது பள்ளிக்கான Google Docsஸில் இருந்து அதிகப் பலன்களைப் பெற விரும்புகிறீர்களா? இலவச G Suite சோதனைக்குப் பதிவு செய்யுங்கள்.

ஒரு கோப்பு திறக்கவில்லை எனில் சில விஷயங்கள் தவறாக இருக்கலாம்:

  • கோப்பைப் பார்க்கக் கோப்பு உரிமையாளர் உங்களுக்கு அனுமதி வழங்கவில்லை.
  • நீங்கள் வேறு ஒரு Google கணக்கில் உள்நுழைந்துள்ளீர்கள்.
  • கோப்பைப் பார்க்கத் தேவையான உங்கள் அனுமதியை யாரோ நீக்கியதால் உங்கள் அணுகல் மறுக்கப்படலாம்.

ஒரு கோப்பைத் திறக்க அனுமதி பெறுதல்

  1. கோப்பைத் திறக்கவும்.
  2. "உங்களுக்கு அனுமதி தேவை" பக்கத்தின் மீது அணுகல் கோரிக்கை என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. கோப்பின் உரிமையாளருக்கு ஒப்புதல் கேட்கும் மின்னஞ்சல் ஒன்று கிடைக்கும். அவர் உங்கள் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பிறகு, நீங்கள் ஒரு மின்னஞ்சலைப் பெறுவீர்கள்.

உங்களுக்கு உடனடியாக அணுகல் தேவைப்பட்டால்

கோப்பின் உரிமையாளரை அணுகி உங்களுக்கு அணுகல் அளிக்குமாறுஅவரிடம் கேட்டுக்கொள்ளவும்.

வேறு ஒரு Google கணக்கை முயலுதல்

உங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட Google கணக்குகள் இருந்தால் வேறொரு கணக்கு மூலமாகக் கோப்பை அணுக முடியுமா என்று பாருங்கள்.

மற்றொரு கணக்கிற்கு மாற:

  1. கோப்பைத் திறக்கவும்.
  2. "உங்களுக்கு அனுமதி தேவை" பக்கத்தில், கணக்குகளை மாற்று என்பதன் மீது கிளிக் செய்யவும்.
  3. வேறு ஒரு Google கணக்கு மூலம் உள்நுழைந்து கோப்பைத் திறக்க முடியுமா என்று பாருங்கள்.

கூடுதல் உதவி பெறுதல்

இன்னும் கோப்பையோ கோப்புறையையோ திறக்க முடியவில்லை எனில் Google Drive மன்றத்தில் உள்ள பதில்களைப் பார்க்கவும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?
இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?